6 பிப்ரவரி, 2011

மட்டக்களப்பில் படகு மூலம் மீட்பு





பணிகளில் புளொட் உறுப்பினர்கள்- மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு பாதுகாப்பான இடங்களுக்கு படகுகளில் கொண்டு செல்;வதற்கும், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்துக்கும், மருத்துவப் பணிகளுக்கும் புளொட் உறுப்பினர்கள் உதவி வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் கடந்த நான்கு நாட்களாக நான்கு இயந்திரப்படகுகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவர்களை அழைத்துச் செல்லுதல், நோயாளர்களை மட்டக்களப்பு மற்றும் நாவற்காடு வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, குறிஞ்சாமுனை, காரையாக்கன்தீவு, கொத்தியாவளை ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மண்டபத்தடி, புதுமண்டபத்தடி, குறிஞ்சாமுனை, கரையாக்கன்தீவு, காயன்மடு, பருத்திச்சேனை, கன்னங்குடா ஆகிய இடங்களிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு 1000ற்கும் மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகளையும் இன்றையதினம் புளொட் அமைப்பினர் வழங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக