6 பிப்ரவரி, 2011

சார்க்' மாநாடு பூடானில் இன்று தொடக்கம்

திம்பு (பூடான்), பிப்.5: சார்க் மாநாடு ஞாயிற்றுக்கிழமை பூடான் தலைநகர் திம்புவில் தொடங்குகிறது.

சார்க், எட்டு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்த நாடுகளிடையே பிரதேச அளவில் பொருளாதாரம், பாதுகாப்பு, உள்பட பல விஷயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு காண பேச்சுவார்த்தை நடத்த 4 நாள்கள் மாநாடு நடக்கவுள்ளது.

ஞாயிறும், திங்களும் வெளியுறவுத் துறைச் செயலர்கள் அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்த முதல்கட்ட பேச்சின் முடிவில் செயலர்கள் குழு ஒரு அறிக்கையைத் தயாரிக்கும்.

இந்த அறிக்கையின்மேல், அடுத்த கட்டமாக சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் உயர்நிலைப் பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள்.

இந்தியா-பாகிஸ்தானைப் பொருத்தவரை, இந்த மாநாட்டின்போது, இரு நாட்டு பொருளாதார, பாதுகாப்புக் கொள்கை அளவில் மட்டுமல்லாமல், சாதாரண மக்களையும் பாதிக்கக் கூடிய, பயண விசா, மீனவர்கள் பிரச்னை ஆகியவற்றை முக்கியமாக விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு, வெளியுறவுத் துறைச் செயலர்கள் திம்புவில் சந்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக