6 ஜனவரி, 2011

புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்க முயற்சி முறியடிக்க சூட்சுமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - சபையில் பிரதமர்

புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளின் மூலம் மீண்டும் தலைதூக்க முயற்சிப்பதாகவும் இதனை முறியடிக்க சூட்சுமமாக செயற்பட வேண்டுமெனவும் பிரதமர் டி. எம். ஜயரத்ன நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத்திற்கென அண்மையில் பாரியளவு நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. சில அரச சார்பற்ற நிறுவனங்களும், வெளி நாடுகளும் பணத்தை வாரி வழங்கியுள்ளன. மேற்குலக நாடுகள் இன்னமும் தமது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ளாமல் உள்ளன.

அவற்றுக்கு இலங்கைத் தூதரகத் தின் மூலமாகவே அறிவுறுத்தல்களை வழங்க முடியும் என்று நேற்று அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேர ணையைச் சமர்ப்பித்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘வடக்கு மக்கள் உன்னத நிலையில் வாழ்பவர்கள் அவர்களின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுவாக்க வேகமாக செயற்படவேண்டும். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 3619 பேரும் 67 பெண்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4585 ஆண்களும் 72 பெண்களும் விடுவிக்கப் படவுள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற 50 பேர் கடந்த டிசம்பர் மாதம் தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டனர். அதேநேரம் பாதுகாப்புத் தரப்பினர் வடக்கில் நடத்திய தேடுதலின்போது 1014 விமான எதிர்ப்புக்குண்டுகள், பீரங்கிக் குண்டுகள் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்களை மீட்டுள்ளனர். எனவே, புலிகளின் செயற்பாடுகளை மீண்டும் தலைதூக்காது முறியடித்து சமாதானத்தை நிலைநாட்ட அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க வேண்டும் என்றார் பிரதமர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக