22 ஜனவரி, 2011

மீள் குடியேற்றம் செய்யப்பட்டோர் குறித்து ஐ நா கவலை





வவூனியா முகாமில் இருந்து செல்லும் ஒரு குடும்பம்
இலங்கையின் வடபகுதியில் போரினால் இடம்பெயர்ந்து மீள குடியேறியுள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை சேவைகள், இருப்பிடம் மற்றும் குடிநீர் போன்ற விடயங்கள் போதுமான அளவவில் கிடைக்கவில்லை என்று ஐநாவின் துணை பொதுச் செயலாளரான கத்தரின் பரக் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை வட பகுதிக்கு சென்று வந்த அவர், வெள்ளிக் கிழமையன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார். வடபகுதியில் மீளக்குடியேறிய மக்கள் இன்னமும் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கின் எதிர்காலம் என்பது அங்கு மக்களில் முதலீடு செய்வது என்பதிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடாத்த அவர்களுக்கு தேவையான திறன்களை வளர்ப்து, வாழ்க்கை வசதிகள் மற்றும் சமூக மேம்பாடு ஆகியன அவசியமானவையாக இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களை வான் மூலமாக தான் பார்வையிட்டதாகக் கூறிய அவர், அந்தப் பகுதிக்கான தனது விஜயம் அங்கிருக்கின்ற பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் கூறியுள்ளார்.

அந்தப் பகுதி மக்களின் நிவாரணத்துக்காக 51 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக அவர் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக