25 ஜூலை, 2010

நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையின் தலை- உடல் தோண்டி எடுப்பு


.



மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கவுஸ் பாட்சா. இவரது மனைவி சிரின் பாத்திமா. இவர்களது மகன் காதர் யூசுப் (வயது 1 1/2) சில தினங்களுக்கு முன்பு கவுஸ்பாட்சா விபத்தில் இறந்து விட்டார்.

கணவனை இழந்த சிரின் பாத்திமா மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள தர்காவுக்கு குழந்தையுடன் வந்து தங்கி இருந்தார்.

அந்த தர்காவில் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டிணத்தை சேர்ந்த அப்துல் கபூர் என்ற மந்திர வாதிதனது மனைவி ரமலா பீவியுடன் தங்கி இருந்தார். அப்போது சிரின் பாத்திமாவுடன் பழக்கம் ஏற்பட்டு மந்திரவாதி அவருக்கு ஆறுதல் கூறுவது போல் நடித்தார்.

குழந்தை காதர் யூசுப்பை கொன்று ரத்தத்தை குடித்து விட்டால் தனது மந்திர சக்தி அதிகரிக்கும் என்று நம்பினார். காதர் யூசுப்பை கடத்தி நரபலி கொடுக்க முடிவு செய்தார்.

தர்காவில் அனை வரும் தூங்கி கொண் டிருக்கும்போது அப்துல் கபூரும், ரமலா பீவியும் குழந்தை காதர் யூசுப்பை கடத்தி சென்று விட்டனர். மறுநாள் காலையில் சிரின் பாத்திமா தனது குழந்தை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார்.

இது குறித்து மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அப்துல் கபூர், அவரது மனைவி ரமலா பீவி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

காயல்பட்டிணம் சென்ற போலீசார் அப்துல் கபூரை யும், ரமலாபீவியையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குழந் தையை கொன்று நரபலி கொடுத் ததாக தெரிவித்தனர்.

குழந்தையை கொன்று ரத்தத்தை குடித்தால் மந்திர சக்தி அதிகரிக்கும் என்ற மூடநம்பிக்கையில் இந்த கொலையை செய்து விட்டதாக அப்துல்கபூர் போலீசாரிடம் தெரிவித்தார்.

குழந்தையை கடத்தி ஏரல் பகுதிக்கு சென்ற அவர்கள் குழந் தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து பெரிய தூக்கு வாளியில் அடைத்து உள்ளனர்.

குழந்தையின் உடலில் இருந்து சேகரித்த ரத்தத் தையும், தலைப் பகுதியையும் குலசேகரன்பட்டிணம் செல்லும் வழியில் உள்ள கல்லாமொழி கடற்கரைக்கு கொண்டு சென்றனர். அப்துல்கபூர் அந்த குழந்தையின் ரத்தத்தை குடித்து விட்டு தலையை கல்லா மொழி கடற்கரையில் புதைத்துள்ளார்.

உடல் பாகங்களை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள காட்டுப்பள்ளியில் கொண்டு வந்து புதைத்தார். போலீசார் குழந்தை யின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அப்துல் கபூரையும், ரமலா பீவியையும் அழைத்து சென்றனர். அங்கு குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவர் அடையாளம் காட்டினார். போலீசார் தலையை தோண்டி எடுக்கிறார்கள்.

அதன் பிறகு ஏர்வாடிக்கு வந்து உடலை தோண்டி எடுக்கிறார்கள்.

அப்துல்கபூருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரது நட வடிக்கைகள் பிடிக்காமல் மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்று விட்டனர்.

கணவனை பிரிந்து வாழ்ந்த ரமலா பீவியுடன் அப்துல்கபூருக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வது மனைவியாக்கி கொண்டார். இவர்கள் தர்காவுக்கு சென்று மொட்டை போட்டு மாந்திரீக வேலைகளை செய்து வந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக