25 ஜூலை, 2010

. நாளை 2-வது டெஸ்ட்: இந்தியா பதிலடி கொடுக்குமா?

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை (26-ந்தேதி) தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் மோசமாக தோற்றதால் 2-வது டெஸ்டில் பதிலடி கொடுக்க வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு உள்ளது. அதோடு தொடரை சமன் செய்ய வெற்றி பெற வேண்டிய கட்டாயமும் உள்ளது.

உலகின் தலைசிறந்த பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணி “பாலோஆன்” ஆகி தோற்றது மிகவும் மோசமானது.

ஷேவாக் ஒருவர் மட்டுமே சிறப்பாக ஆடி சதம் அடித்தார். 2-வது இன்னிங்சில் தெண்டுல்கர், லட்சுமண் போராடினார்கள். டிராவிட் நிலைத்து நின்று ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

ஜாகீர்கான், ஸ்ரீசந்த் இல்லாததால் இந்திய அணி பந்து வீச்சில் பலவீனமாக காணப்படுகிறது. இதேபோல முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

பந்துவீச்சை சரிகட்ட பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடி உள்ளது.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த முரளீதரன் 800 விக்கெட் கைப்பற்றியதோடு ஓய்வு பெற்றார். இதேபோல் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீரரான மலிங்கா காயம் காரணமாக நாளைய டெஸ்டில் ஆடவில்லை. இதை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் அஜந்தா மெண்டீஸ் சவாலாக இருப்பார். பேட்ஸ்மேன்களில் சங்ககரா, பரணவிதனா, தில்சான், ஜெயவர்த்தனே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இந்த டெஸ்டிலும் வெற்றி பெற இலங்கை முயற்சிக்கும்.

இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தப்போட்டி டென்ஸ் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், டிராவிட், தெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், இஷாந்த்சர்மா, அபிமன்யூ மிதுன், ஒஜா, சுரேஷ் ரெய்னா, அமித் மிஸ்ரா, முரளிவிஜய், முனாப்பட்டேல்.

இலங்கை: சங்ககரா (கேப்டன்) தில்சான், பரண விதனா, ஜெயவர்த்தனே, மேத்யூஸ், சமரவீரா, பிரசன்னா ஜெயவர்த்தனே, மெண்டீஸ், பெர்னாண்டோ, வெலுகேந்திரா, ஹெராத், கண்டாம்பி, தமிகா பிரசாத், ரந்தீவ் திரிபானே நுவன் பிரதீப்.

34-வது முறையாக நாளை மோதல்
இரு அணிகளும் நாளை மோதுவது 34-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 33 டெஸ்டில் இந்தியா 12 போட்டியிலும், இலங்கை 6 போட்டியிலும் வெற்றி பெற்றன. 14 டெஸ்ட் “டிரா” ஆனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக