14 மே, 2010

கிளிநொச்சி மாவட்டத்தில் 5000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளவர்களில் 5,000 குடும்பங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் உலக வங்கி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. உலக வங்கியின் நிதியுதவியுடன் 3640 வீடுகளும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் 100 வீடுகளும் புதிதாக நிர்மாணிக் கப்படுவதுடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தினால் 1600 வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேற்படி வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப்பணிகள் நிறைவுபெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை; யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரில் 1200 பேரை இவ்வாரத்தில் மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 540 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் இவ்வாரத் தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கண் டாவளை மற்றும் கரச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மேற்படி குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து மீள்குடியேற்ற ப்படும் குடும்பங்களுக்குத் தற்காலிக வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருவ தாகத் தெரிவித்த அவர்,

படிப்படியாக அனைவருக்கும் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

அத்துடன் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக