14 பிப்ரவரி, 2010

பொன்சேகா விடுதலையா? அதிபர் ராஜபக்ஷே பதில்பொறுத்தவரை,சட்டத்திற்குஅப்பாற்பட்டவர்கள்யாரும்இல்லை.பொன்சேகாவின் நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை,'' என இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார்.இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் ராஜபக்ஷேயை சந்தித்து பேசினார். அப்போது, ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு அதிபர் ராஜபக்ஷே பதில் அளித்த போது, ""இலங்கையை பொறுத்தவரை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவின் நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை. அவரது கைது நடவடிக்கைகளில், உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படும். தற்போது, அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனில், அவர் விடுதலை செய்யப்படுவார். பொன்சேகாவின் கைதுக்கு அரசியல் பின்னணி காரணமல்ல,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக