24 ஆகஸ்ட், 2010

பாகிஸ்தானுக்கு இலங்கை நிவாரண உதவிகள்



பாகிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 18 தொன் எடையுடைய நிவாரண உதவிகளை இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிவாரண உதவிகள் நேற்று முன்தினம் பாகிஸ்தானிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஏயார் வின் மாஷல் ஜயலத் வீரக்கொடியினால் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிவாரண பொருட்கடளில் உலர் உணவுப் பொருட்கள், தேயிலை, மருந்து மற்றும் 250 கூடாரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நிவாரண உதவிகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்குச் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் இலங்கையிலிருந்து வைத்திய குழுவொன்று ஏற்கனவே பாகிஸ்தான் நோக்கிப் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக