24 ஆகஸ்ட், 2010

கொரிய வேலைவாய்ப்புக்கு 5000 பேர் தெரிவு : பணியகம் தகவல்

கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற இலங்கையிலிருந்து 5000 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொரிய வேலை வாய்ப்புக்காக நாடு முழுவதிலுமிருந்து 29 ஆயிரத்து 732 பேரின் விண்ணப்பங்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கொரியாவில் பணியாற்றுவதற்காக கடந்த 3 நாட்களில், நாடு முழுவதிலுமிருந்து பல மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் கடந்த வருடத்தை விடவும், இவ்வருடம் அதிகமானோர் கொரியாவில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதாகப் பணியகம் தெரிவித்துள்ளது.

கொரிய மொழியிலான பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு நடத்தப்படும் பரீட்சையிலிருந்து 5000 பேர் தெரிவு செய்யப்பட்டு, கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் எனப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இவ்வருடத்தின் ஏப்ரல் மாதம் வரை கொரியாவில் பணியாற்றுவதற்காக இலங்கையிலிருந்து 3 ஆயிரத்து 500 பேர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக