ஒபாமா-தலாய்லாமா சந்திப்பு எதிரொலிஅமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்
தூதரை நேரில் அழைத்து ஆட்சேபனை
தூதரை நேரில் அழைத்து ஆட்சேபனை
தலாய்லாமாவை ஒபாமா சந்தித்தது தொடர்பாக, அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரை நேரில் வரவழைத்து, தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஒபாமா சந்திப்பு திபெத் பகுதியை 50 ஆண்டுகளுக்கு மேலாக சீனா ஆக்கிரமித்து வருகிறது. திபெத்துக்கு சுயாட்சி கோரி, திபெத்திய புத்தமத தலைவர் தலாய்லாமா, உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வருகிறார். ஆனால் அவரை யாரும் சந்திக்கக் கூடாது என்று உலகத் தலைவர்களை சீனா மிரட்டி வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க தலாய்லாமா திட்டமிட்டார். ஆனால் தலாய்லாமாவை சந்தித்தால், அமெரிக்க-சீன நட்புறவு பாதிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த எச்சரிக்கையையும் மீறி, நேற்று முன்தினம் தலாய்லாமாவை ஒபாமா அழைத்துப் பேசினார். அப்போது, திபெத் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பால், சீனா கடும் கோபம் அடைந்துள்ளது. சீனாவுக்கான அமெரிக்க தூதர் ஜான் ஹன்ட்ஸ்மேனை சீன துணை வெளியுறவு மந்திரி குய் தியாங்கை நேரில் வரவழைத்து, தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். கடும் கண்டனம் மேலும், அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மா ஜாவோசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- தலாய்லாமாவை ஒபாமா சந்தித்ததற்கு சீனா தனது கடும் அதிருப்தியையும், உறுதியான எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது. இது, சர்வதேச உறவுகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளை முற்றிலும் மீறிய செயல். அமெரிக்க-சீன கூட்டு அறிக்கையையும் மீறிய செயல். திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வதாகவும், திபெத் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அமெரிக்கா பலதடவை உறுதி அளித்துள்ளது. இந்த சந்திப்பு, அதற்கு எதிராக அமைந்துள்ளது. தலையிடாதீர் சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது. சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கக் கூடாது. அமெரிக்க-சீன உறவுகளில் ஆரோக்கியமான, சீரான வளர்ச்சி ஏற்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்க வேண்டும். இச்சந்திப்பால் ஏற்படும் கெட்ட விளைவுகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமெரிக்கா விளக்கம் இதற்கிடையே, ஒபாமா-தலாய்லாமா சந்திப்பு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா ஏற்கிறது. அதே சமயத்தில், திபெத் பகுதியின் மனித உரிமைகள் குறித்து கவலைகொள்கிறது. அப்பகுதியின் கலாசார உரிமைகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்போம். இப்பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சொந்த வீட்டுக்கு தீவைத்து விட்டு வந்தார்:
விமானத்தால் மோதியவரின் அடையாளம் தெரிந்தது
3 பேர் பலி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டின் நகரில் உள்ள உள்நாட்டு வருவாய் சேவை அலுவலக 7 மாடி கட்டிடம் மீது நேற்று முன்தினம் இரவு ஒரு குட்டி விமானம் மோதியது. இதையடுத்து கட்டிடம் தீப்பிடித்துக் கொண்டது. இதில், விமானத்தில் வந்து மோதியவர் உள்பட 3 பேர் பலியானார்கள். 13 பேர் காயம் அடைந்தனர். இது முதலில் தீவிரவாத தாக்குதல் என்று கருதப்பட்டது.
ஆனால், ஜோசப் ஆன்ட்ரூ ஸ்டேக் (வயது 53) என்ற கம்ப்ïட்டர் என்ஜினீயர், வருவாய் சேவைப்பிரிவு மீதான கோபத்தில், இந்தச் செயலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, அவர் ஒரு இணையதளத்தில் எழுதி இருந்த தற்கொலைக் குறிப்பு சிக்கி உள்ளது. அவர் ஆஸ்டினில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு தீவைத்து விட்டு, ஜார்ஜ்டவுன் நகரில் இருந்து விமானத்தை கிளப்பி வந்து மோதியதாக தெரிய வந்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில், ஆயுத ஒழிப்பு பற்றிய ஐ.நா. மாநாடு
அமெரிக்காவின் மூலப்பொருட்களை கொண்டுஇந்தியா, ஆண்டுக்கு 100 அணு ஆயுதங்களை தயாரித்துவிடும்பாகிஸ்தான்அலறல்சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில், ஆயுத ஒழிப்பு பற்றிய ஐ.நா. மாநாடு நடைபெற்றது. அதில், ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் ஜமீர் அக்ரம் பேசுகையில், ஆக்கப்பூர்வ பணிகளுக்காக அமெரிக்காவில் இருந்து பெறும் அணு மூலப்பொருட்களை இந்தியா அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், அது ஆண்டுக்கு 100 அணு ஆயுதங்களை தயாரித்து விடும் என்றும் கூறினார்.
அதற்கு இந்திய தூதர் ஹமீது அலி ராவ் மறுப்பு தெரிவித்தார். தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி, ஐ.நா. முயற்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
அதற்கு இந்திய தூதர் ஹமீது அலி ராவ் மறுப்பு தெரிவித்தார். தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி, ஐ.நா. முயற்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக