6 பிப்ரவரி, 2010


இலங்கை கடற்படை தாக்குதல்:நாகை மாவட்ட மீனவர்கள் அச்சம்


நாகப்பட்டினம்: இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, பொருட்களை சூறையாடிய சம்பவம், நாகை மாவட்ட மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலையொட்டி இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஓய்ந்திருந்தது. தேர்தல் முடிந்து ராஜபக்ஷே வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை கடற்படை மீண்டும் துவக்கியுள்ளது.


இலங்கையில் தேர்தல் முடிந்ததில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வந்த நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 2ம் தேதி 250 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 3ம் தேதி நள்ளிரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது சுற்றி வளைத்த இலங்கை கடற்படை, நாகை மீனவர்களை ரப்பர் தடியால் சரமாரியாக தாக்கினர். மீனவர் படகுகளில் இருந்த ஐஸ் கட்டிகளை கடலில் தூக்கியெறிந்த, இலங்கை கடற்படையினர் 50க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகளை வெட்டி கடலில் வீசினர்.


படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால், மீன்களை பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளனர்.மீனவர்கள் கூறுகையில்,"இலங்கையில் நடந்த தேர்தலால் தாக்குதலை நிறுத்தியிருந்த இலங்கை கடற்படையினர், மீண்டும் மீனவர்களை குறிவைத்து தாக்குகின்றனர். தாக்குதலுக்கு ஆளாகும் போது, பாதிக்கப்பட்ட மீனவர்கள் அரசிடம் முறையிட்டு எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், இனிமேல் புகார் தெரிவிப்பதில் பலனில்லை என்று இருந்து விட்டோம்' என்றனர்.


இலங்கைப் போரில் திறம்படச் செயல்பட்ட ​விஜயபாகு படைப் பிரிவுக்கு பாராட்டு




கொழும்பு, ​​ பிப்.​ 5: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில்,​​ அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்படுவதற்கு,​​ அந்த நாட்டின் விஜயபாகு தரைப்படைப் பிரிவு பெரும் பங்காற்றியதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

​ முல்லைத்தீவின் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது பிரபாகரன்,​​ அவரது மனைவி மதிவதனி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மறைந்திருந்த இடத்தை விஜயபாகு தரைப்படைப் பிரிவு வீரர்கள் சுற்றிவளைத்துத் தாக்கினர்.​ இதில் பிரபாகரன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.

​ இலங்கை ராணுவத்தில் விஜயபாகு படைப் பிரிவு மிகவும் இளைய படைப் பிரிவாகும்.​ இந்தப் படைப் பிரிவுக்கு இலங்கையை ஆண்ட விஜயபாகு மன்னரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

​ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரில் இந்தப் படைப் பிரிவினர் மிகவும் திறமையாகவும்,​​ துணிச்சலாகவும் செயல்பட்டதாகவும் இலங்கை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​ இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு,​​ இலங்கை ராணுவ தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா தலைமையில்,​​ வடகிழக்கு மாகாணத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் கடந்த வாரம் பாராட்டு விழா நடைபெற்றது.​ கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில்,​​ வன்னிப் பகுதி ராணுவத் தளபதியாக ஜயசூரியா செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

​ இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டி,​​ கெüரவித்தார் ஜயசூரியா என ராணுவம் வெளியிட்ட ​ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

​ இந்த விழாவையொட்டி,​​ விஜயபாகு படைப் பிரிவின் நிர்வாக அலுவலகக் கட்டடத்தையும் ஜயசூரியா திறந்து வைத்தார்.



வளர்ச்சிப் பணியில் பங்கேற்க வாருங்கள் : வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இலங்கை அழைப்பு



கொழும்பு,பிப்.5: விடுதலைப்​ புலி​களுடனான போரினால் சீர்குலைந்த வடக்குப் பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணியில் பங்கேற்க வாருங்கள் என்று வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

​ அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகித பொகலகாம வெள்ளிக்கிழமை இந்த அழைப்பை விடுத்தார்.

மேலும் அவர் கூறியது:​ 30 ஆண்டுகாலம் புலிகளுடன் தொடர்ந்து நடந்த போரினால் நாட்டின் வடக்குப் பகுதி ​ முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.​ அப்பகுதிக்கும் உலக நாடுகளுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.​ இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் முடங்கியுள்ளது.

​ தற்போது அப்பகுதி புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வளர்ச்சிப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.​ சுற்றுலா,​​ மீன்பிடித் தொழில்,​​ வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளை மேம்படுத்த அரசு அடையாளம் கண்டுள்ளது.

​ யாழ்ப்பாணத்தில் மொத்தம் 6 லட்சம் பேர் வசிக்கின்றனர்.​ இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

​ வடக்குப் பகுதியின் வளர்ச்சிப் பணியில் பங்கேற்க வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.​

இதை அரசு அறியும்.​ முதலீடுகளை செய்து வளர்ச்சிப் பணியில் பங்கேற்க விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு வரவேற்கிறது.

​ வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களிடம் இருந்து மட்டுமல்லாது உலக நாடுகளிடம் இருந்தும் அரசு முதலீடுகளை வரவேற்கிறது.​

முதலீடுகளை ஈர்க்கும் விதத்தில் வடக்குப் பகுதியின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.​ யாழ்ப்பாணம் தகவல் தொழில்நுட்ப மையமாக உருவாக்கப்படும்.​ அங்கு

துணைத் துதரகத்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது என்றார் ரோகித பொகலகாம.


படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்



படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலம் நல்ல பயனை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்புக்கமைய இதுவரை 1462பேர் சரணடைந்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சரணடைந்தவர்கள் தற்போது தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் முன்னர் கடமையாற்றிய படையணிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தொடர்ந்தும் சரணடையாமல் இருப்போரை இராணுவ காவல்துறையினர் கைதுசெய்து அவர்களுக்கு எதிராக இராணுவ சட்டங்கள் பிரயோகிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்..


இலங்கையில் சிறுபான்மையின மக்கள் நிம்மதியான வாழ்க்கையினை நடத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென

 

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் நிம்மதியான வாழ்க்கையினை நடத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் வெற்றிபெற்றுள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பரக்ஒபாமா இதனைத் தெரிவித்துள்ளார். வளமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு தமது பூரண ஆதரவினை வழங்கவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும் மலர்ந்துள்ள சமாதான சூழ்நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாடுவதையிட்டு தாம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபடும்போது  

மன்னார் மாவட்ட மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபடும்போது நடைமுறையில் இருந்துவந்த பாஸ் முறையினை முழுஐமயான நீக்கியுள்ளதாக வன்னி மாவ்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் மீள்குடியேற்ற அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் இந்த பாஸ் நடைமுறையினை நீக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் இதனையடுத்து அந்நடைமுறை உடனடியாக அகற்றப்பட்டதுடன், மீனவர்கள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் சில தினங்களுக்கு முன்னர் கடற்படையினர் பாஸ் நடைமுறையினை ஆரம்பித்துள்ளதாக மன்னார் மீனவர் சங்கங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து ஜனாதிபதியிடம் இதுபற்றி தெரிவித்து அந்நடைமுறையை முற்றாக நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போது மன்னார் மீனவர்கள் முன்னர்போல் எந்தநேரமும் தொழிலில் ஈடுபட முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எச்எஸ்பிசி வங்கியின் கிளையொன்று அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின்  


எச்எஸ்பிசி வங்கியின் கிளையொன்று அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். முப்பது வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து வடக்கில் பெருமளவு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த வருடம் மேமாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், வடக்கில் இலங்கை வங்கிகள் புதிய கிளைகளை அமைக்க ஆரம்பித்துள்ளன. வடக்கில் 73 புதிய வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி வழங்கியிருந்தது. இதனடிப்படையில் இலங்கை வங்கி வடக்கில் கிளைகளைத் திறந்து வந்தன. இந்நிலையில் அடுத்தவாரம் வெளிநாட்டு வங்கியான எச்.எஸ்.பி.சி தனது கிளையை அங்கு திறக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக