19 ஜனவரி, 2010

வெளிநாட்டுக் கண்காணிப்புக் குழுவினருடன் இன்று கலந்துரையாடல்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்கென வருகை தந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்புக் குழுவினருக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெற்றது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் விதிமுறைகள் மற்றும் கண்காணிப்புக் குழுவின் பணிகள் குறித்து தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் விளக்கிக் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டது முதல் இன்றுவரை இடம்பெற்ற வன்முறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக தேர்தல்கள் செயலக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக