19 ஜனவரி, 2010

No Image
தாய்லாந்து பாங்கொக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் திட்டமிட்டபடி நேற்று திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆண்கள்இ பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் அனைவரும் நீர் ஆகாரம் எதுவும் இன்றி இரண்டாவது நாளாக தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

தாய்லாந்து பாங்கொக் யூ.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்தில் பதிவு செய்து தற்போது 3 வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகளினால் ஏற்கனவே ஒழுங்கு படுத்தப்பட்டு அனுப்பப்பட்ட ஆறு கோரிக்கைகளுக்குஇ

ஜ.நா வின் பொது செயலாளர் திரு. பான் கீ மூன் அவர்களிடம் இருந்தோஇ யூ.என்.எச்.சீ.ஆர் தலைமை அலுவலகம் சுவிஸ் ஜெனீவாவில் இருந்தோஇ தாய்லாந்திலுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் பிராந்திய அலுவலகத்தில் இருந்தோஇ எந்தவிதமான மனித உரிமை மனித நேய அமைப்புக்களோ இது வரையில் இவர்களை சென்று பார்வையிடாத காரணத்தினால் இவர்களுடைய கடுமையான உண்ணாவிரதப் போரட்டம் நீர் ஆகாரம் எதுவுமற்ற நிலையில் இரண்டாவது நாளாக தொடர்கின்றது.

இவர்களுடன் பாகிஸ்தான்இ நேபாளம் யூ.என்.எச்.சீ.ஆர் அகதிகளும் இவ் உண்ணாவிரதத்தில் இணைந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


No Image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியசுவாமி சொல்லித்தர வேண்டியதில்லை என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும்இ மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார். கினிகத்தேனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவதுஇ

"தற்போது நமது நாட்டில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்திய தலைவர்களில் சிலர் நேரடியான தலையீட்டை மேற்கொள்கின்றனர். சுப்பிரமணியசுவாமி நேரடியாக தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டுமென இலங்கை தமிழர்களுக்குக் கட்டளை பிறப்பித்துள்ளார். சுப்பிரமணியசுவாமி போன்றவர்களின் பேச்சை கேட்டு நடக்குமளவுக்கு இலங்கைத் தமிழர்கள் அரசியல் ஞானமற்றவர்கள் அல்லர்.

கடந்த காலங்களில் சுப்பிரமணியசுவாமி இலங்கைத் தமிழர்களின் இரத்தத்தில் நீந்தி குளித்து அரசியல் கொண்டாட்டம் போட்டவர். இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் மகிந்தவிற்கு வாக்களிக்க வேண்டுமென தற்போது பயமுறுத்துகிறார். இந்தியா இலங்கைக்குக் கடந்த வருடம் செய்த மறக்கமுடியாத உதவியினாலேயே தற்போது தமிழர்கள் சரத்பொன்சேகாவை ஆதரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதைவிட இலங்கையின் அரசியல் மேடைகளில் இந்தியாவை பற்றியோஇஇந்தியஇதமிழ்நாட்டு தலைவர்களைப் பற்றியோ விமர்சிக்க கூடாதென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவோஇ அந்தநாட்டு அரசாங்க கட்சி தலைவர்களோ நடந்துமுடிந்த மனிதபேரவலத்திற்கு துணைபோகாமல் இருந்திருந்தால் அவர்களைப்பற்றி விமர்சிக்கவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்காது.

கடந்த மே மாதம் இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்போதைய காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு இலங்கை அரசு உதவிசெய்ததாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருக்கிறார். அந்த நன்றின்கடனை மனதில் கொண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதியுபகாரம் செய்வதற்கு இலங்கைத் தமிழர்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்த இந்தியா முயற்சிக்கின்றது.

இந்தியா சொல்வதை செவிமடுக்க இலங்கைத் தமிழர்கள் தயாராக இல்லை என்ற செய்தியை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இந்தியாவிற்கு தெளிவாக சொல்லும். இன்று மக்கள் ஆதரவை பெற்ற சகல சிறுபான்மை கட்சிகளும் ஒரே அணியில் நின்று செயற்படுகின்றன. இந்த ஒற்றுமை சரத்பொன்சேகாவை வெற்றிபெறசெய்வதுடன் முடிந்துவிடக் கூடாது.

எதிர்காலத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக இந்த நாட்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ஒற்றுமை அத்தியாவசியமானதாகும். இந்த நாட்டின் தமிழ்இமுஸ்லீம்இ மலையக மக்களின் அடிப்படைஇ அரசியல் பிரச்சினைகளைத் தமிழ்இ முஸ்லிம் கட்சிகள் உள்வாங்கி ஒரே நிழ்ச்சி நிரலின் கீழ்ச் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இதையே தமிழ் பேசும் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

மலையகத்தில் தற்போது மிகப்பெரிய அரசியல் மாற்றம் தென்பட தொடங்கிவிட்டது. இந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் மிகப்பெரிய சமூக பொருளாதார வாழ்வியல் மாற்றத்தை மலையகத்தில் ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்பதை தெரிவு செய்யப்படவுள்ள ஜனாதிபதி சரத் பொன்சேகாவிற்கு மலையக மக்கள் தெளிவுபடுத்துவார்கள்.

மலையக மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கவேண்டும் என்பதற்காக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இ ஐக்கிய தேசிய முன்னணியோடும்இ எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுடனும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருக்கிறது.

இவற்றையெல்லாம் செயல்வடிவமாக்குவதற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி மலையக மக்கள் முழுமையாக சரத்பொன்சேசாவிற்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.



அமைச்சர்களாக இருந்தோர் மலையகத் தமிழ் மக்களுக்கு உரிய சே வையாற்றவில்லை : பி.திகாம்பரம்

No Image
அரசாங்கத்துடன்

இணைந்து யற்படுகின்ற மலையகத்தமிழ் தலைமைத்துவங்கள் மக்கள் நலன் கருதி செயற்படாத காரணத்தினாலேயே மலையகப்பெருந்தோட்டச் சமூகம் மிகமோசமான நிலையில் பின்தங்கியுள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் மத்தியமாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை நுவரெலியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் கூறியதாவதுஇ

"இந்த நாட்டில் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களில் அமைச்சுப்பதவிகளை வகிக்கின்ற மலையகத் தலைமைகள் இந்த மக்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்யாமல் வெறுமனே காலத்தைச் செலவழித்துக்கொண்டு சுயநலப்போக்குடன் செயற்படுவதால் தான் இன்று மலையகத்தமிழ் சமூகம் பின்தங்கியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமாகயிருந்தால் என்ன பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கமாகவிருந்தாலென்ன தற்போதைய அரசாங்கமாகவிருந்தாலென்ன ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக செயற்பட்டு இந்த மக்களுக்கு உருப்டியான சேவைகளைச் செய்யவில்லை.

இதே பொன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்படாமலிருந்தால் தான் எமது சமூகத்திற்கு விமோசனம் ஏற்படும்.வெற்றிப்பெற்ற அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு மலையகத்தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கின்றவர்களுக்கு இனிமேல் சந்தர்ப்பம் வழங்க மாட்டோம்.

இவ்விடயத்தில் மலையக இளைஞர்கள் உட்பட தொழிலாளர்களும் ஏனையவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.நாம் ஆயுதம் ஏந்தி போராடவில்லை.எமக்கான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து தருமாறுதான் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

கடந்த நான்கு வருடகாலத்தில் மலையகத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தமக்கான மாளிகைகளைக் கட்டுவதிலும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்வதிலுமே கண்ணும் கருத்துமாகவுள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ள போதும் இதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.எனவே மலையகத்தமிழ் மக்களின் வளமாக வாழ்க்கையைக்கருத்திற்கோண்டே நாம் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளித்துள்ளோம்.நாம் பணத்திற்காக விலை போக மாட்டோம்.எமது மக்களையும் விற்க மாட்டோம்." எனத் தெரிவித்தார்



தாய்வானிலிருந்து கண்காணிப்புக் குழு இன்று இலங்கை வருகை



No Image
எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்கென தாய்வான் நாட்டிலிருந்து. மூவர் அடங்கிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் இன்று காலை 8.15 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக