18 ஜனவரி, 2010




மலையக மலர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும் : கொட்டகலையில் ஜனாதிபதி


"வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயத்தினை போல்இ மலையகத்தை அபிவிருத்தி செய்ய மலையக மலர்ச்சி எனும் வேலைத் திட்டத்தினை உருவாக்குவேன்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் நேற்று கொட்டகலை பொது விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதி அமைச்சர்களான முத்துசிவலிங்கம்இ ஜெகதீஸ்வரன்இ மாகாண அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன்இ மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன்இ மாகாணசபை அமைச்சர்கள்இ பிரதேச சபைஇ நகரசபை தலைவர்இ உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில்இ

"நான் உங்களிடம் வந்து உரையாற்றக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். இன்று எனக்குத் தெரியும்இ நீங்கள் பாரிய பொருளாதார சுமைக்கு முகம்கொடுத்து வருகிறீர்கள். மே 19 திகதிக்கு முன் இந்த நாட்டில் வேறு பிரச்சினைகள் இருந்தன.

மலையக இளைஞர்கள் வேலைக்குச் செல்லமுடியாது; நிம்மதியாக இருக்க முடியாத நிலை இருந்தது. அதை இன்று நான் இல்லாது செய்துள்ளேன். அதேபோன்றுஇ உங்கள் வாழ்க்கையையும் சுபீட்சமாக்குவேன்.

மலையக மக்கள் இந்நாட்டின் உயிர்நாடிகளாவர். அதனை எவரும் மறுக்கமுடியாது. அதுதான் யதார்த்தம். எனவேஇஅவர்களின் வாழ்க்கை வளம் பெறுவதற்காக இன்னும் 3இ000 அரச நியமனங்களை வழங்க உள்ளேன்.

இன்று மலையக இளைஞர்கள் பொலிஸில் சேரலாம்; இராணுவத்தில் சேரலாம். எவருக்கும் ஒரே நியாயம் தான். உங்கள் பிள்ளைகள் தேயிலை கொழுந்து பறிப்பவர்களாக இருக்கக்கூடாது. கணினிக் கல்வியைக் கற்று சர்வதேச ரீதியில் தொழில் வாய்ப்புக்களை பெற வேண்டும்.

தோட்டத்தொழிலாளர்கள் லயத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பதிலாக அவர்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டிகொடுத்து லயத்து முறையினை இல்லாது செய்வேன்.

அத்தோடு அவர்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது ஏனைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வேன்.

வேலையில்லாத இளைஞர்களுக்குத் தரிசுக் காணிகளை வழங்கி புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவேன். நான் ஒரு போதும் பொய் சொன்னது கிடையாது. சொல்வதை செய்வேன்; செய்வதை சொல்வேன். நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். இந்த நாட்டில் கிராம மக்களுக்கு தங்கத்தை கொடுத்து இரும்பையும் தகரத்தையும் உங்களுக்கு ஒருபோதும் கொடுக்க மாட்டேன்.

இன்று இலங்கையில் சிறுபான்மை என்று ஒரு சமூகம் இல்லை. எல்லோரும் இலங்கை திருநாட்டின் பிள்ளைகள். ஆகவேஇ நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்.

எந்த நேரத்தில் உங்களது சம்பளம் உயர்த்த வேண்டுமோ அந்த நேரத்தில் நான் உங்கள் சம்பளத்தை உயர்த்துவேன். நான் தொழில் அமைச்சராக இருந்த போது உங்கள் உரிமைகள் தொடர்பாக உங்கள் தலைவர்களுடன் பல தடவைகள் பேசியுள்ளேன்.

எனவேஇ என்னை நம்புங்கள் நான் உங்கள் தோழன். நான் உங்களைக் காப்பேன். எனவேஇ வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்துஇ என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்" என்றார்.


நாட்டைத் துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளியேன் : ஜெனரல் பொன்சேகா



No Image
அரசாங்கம் கூறுவதைப்போல் எந்தவொரு அரசியல் கட்சியுடனோ அல்லது கட்சித் தலைவர்களுடனோ இரகசிய உடன்படிக்கைகள் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை.

எனது நாட்டை துண்டாடுவதற்கோ அல்லது அதன் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதற்கோ எந்தச் சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டேன் என்று எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

"என்மீது வைத்துள்ள நம்பிக்கையின் பிரகாரமே பலதரப்பட்ட அரசியல் சக்திகள் எனக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில்இ என்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஆளும் தரப்பினால் முன்வைக்கப்படுகின்றன.

இருப்பினும் எனது சேவைக் காலத்தில் ஒரு சதத்தையேனும் மோசடி செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "40 வருடகால அரச சேவையில் பணியாற்றிய நான் அக்காலப்பகுதியில் அரசாங்கத்தினால் எனக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்பினை எந்தவிதமான குறைபாடுகளும் இன்றி நிறைவேற்றியிருக்கிறேன்.

இந்நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியின் பிரகாரம் புலிப் பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மக்களே அறிவர்.

ஊழல் மோசடிகளோ அல்லது நிதி தொடர்பிலான மோசடிகளோ இல்லாவிட்டால் தரகுப் பணம் சம்பாதிப்பதிலோ ஈடுபட்டிருந்தால் என்னால் தொழில் ரீதியாக முன்னேற்றம் கண்டிருக்க முடியாது.

எனவேஇ எந்தவிதமான ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்டதில்லை என்பதை என்னால் பகிரங்கமாகக் கூறிக் கொள்ள முடியும். அரச சேவையில் இருந்த காலப்பகுதியில் ஒரு சதத்தையேனும் மோசடி செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன்.

பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள்இ கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முழுமையான ஆதரவு மற்றும் அமைப்புக்கு மத்தியிலேயே நான் அரசியல் பயணத்திற்குள் பிரவேசித்துள்ளேன்.

இப்போது நான் இணைந்துள்ள அரசியல் கட்சிகளுடன் எந்த விதமான உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதேபோல்இ எந்தவொரு அரசியல் தலைவர்களுடனும் கூட ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை.

அவர்கள் என்னுடன் இணைந்திருப்பது என்மீதும் எனது கடந்தகால 40 வருட நம்பிக்கைமிக்க சேவையில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் காரணத்தினாலுமே ஆகும்.

நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதையிட்டு தோல்வியைக் கண்டு கொண்டிருக்கின்ற தற்போதைய ஜனாதிபதியும் அவரது குழுவினரும் என்மீது ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றனர்.

என்மீது விரல் நீட்டி குற்றம் சுமத்துபவர்கள் என்மீது மட்டுமல்லாது என்னைப்போல் அரச சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராகவே குற்றம் சுமத்துகின்றனர் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இதனால் அரச சேவையாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு இலக்காகியுள்ளனர்.

எனவேஇ என்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அரச ஊழியர்களின் சேவைøய பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளையும் தூக்கியெறிவது ஜனாதிபதியின் இயல்பான விடயமாகும்.

ஆனாலும் அந்த நிலைப்பாட்டை நான் கொண்டிருக்கவில்லை என்பதையும் மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சரத்தின் சுவரொட்டிகளை ஒட்டியவர் வாரியபொலவில் கொலை

வாரியபொலவில் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் ஒருவர் நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளார்.இவர் நேற்று இரவு வாரியபொலவில் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் சுவரொடிகளை ஒட்டிக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர் வாரியபொலவைச் சேர்ந்த தம்மிக ஹேரத் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னரான வன்முறைகளில் இதுவரை மூவர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை எதிவரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்களின் போது வாக்களார்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும்இ வாக்கு மோசடிகள் மேற்கொள்ளவும் ஆளுங்கட்சியினர் தமது ஆதரவாளர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியுள்ளதாக சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தன்று வாக்களர்கள் தமது பிரதேசங்களில் உள்ள இந்துஇ பௌத்தஇ கிறிஸ்தவ மதகுருமார்களை அணுகி சுதந்திரமானதும்இ நீதியானதுமான தேர்தல் நடைபெற உதவுமாறும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக வாக்களர்கள் தமது பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்தும்இ வாக்குத் திருட்டுகள் குறித்தும் ஊடகங்களுடன் தொடர்புகொள்ளுமாறும்இ கையடக்க தொலைபேசிகள் ஊடக அவற்றைக் காட்சிப்படுதுவதுடன் புகைப்படங்கள் எடுக்குமாறும் சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகம் வாக்காளர்களைக் கோரியுள்ளது.

ஜனநாயகத்திற்கான மாறுதல்: கனடாவில் இடம்பெற்ற சுந்தரம் நினைவுதினம்!


நேற்றையதினம் கனடா ரொறன்ரோ நகரில் புதிய பாதை ஆசிரியர் சுந்தரம் அவர்களின் 28வது நினைவுதினம் மிகவும் சிறப்பாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் இடம்பெற்றது. மார்க்கம் 2401டெனிசன் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்றுமாலை 5:00 மணிக்கு நிகழ்வுகள் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது.

ஜனநாயகத்திற்கான மாற்றத்தின் வெளிப்பாட்டை நேற்றைய கூட்டத்தில் வெளிப்படையாகவே காணமுடிந்தது. பல்வேறு பாதைகள் கொள்கைகளை கொண்ட பலரும் மேற்படி நினைவுகூரல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர். புளொட் அமைப்பின் சார்பில் சாரங்கன் அவர்களின் தொகுப்புடன் கூடிய ஆரம்ப உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் மாணவர் பொதுமன்றத்தின் பொது செயலர் டேவிற்சன். யாழ் நோர்த்தன் பிறின்ரஸ் உரிமையாளரும் இடதுசாரி உறுப்பினருமான மணியம், இலங்கை சட்டத்தரணி சிவகுருநாதன், யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் மாணவர் ஜக்கி ஆகியோர் உரையாற்றியதுடன். சுpங்கப்ப+ரில் இருந்து சுப்பிரமணியம் வள்ளியம்மை அவர்களினால் சுந்தரம் தொடர்பாக எழுதி அனுப்பி வைக்கப்பட்ட கவிதையை நிரஞ்சன் அவர்களும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைமையகத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட செய்தியை செல்வம் அவர்கள்; வாசித்தார், சுந்தரம் தொடர்பான நற்பண்புகளுடன் கூடிய சுந்தரத்தின் இயல்பினை சிம்ஹராஜ்வர்மா அவர்களும் எடுத்துக் கூறினார்.

ஊடகங்களின் தவறுகளும் இன்றுவரை அவை ஒருபக்கசார்பாக நடந்து கொள்வது உட்பட, மக்களுக்கு உண்மையை எடுத்துகூற தயங்குவது குறித்தும் இதனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள், அழிவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு இனியாவது ஊடகங்கள் உண்மையை எழுதவேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியோர் வலியுறுத்தினார்.

இங்கு உரையாற்றிய இளைஞர் மாணவர் பொதுமன்றத்தின் பொது செயலர் டேவிற்சன் அவர்கள் உரையாற்றுகையில், ஆயுதபோராட்டம் என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அல்லது தொடங்கியதோ அது அழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மையாகவே அது அழிக்கப்படவில்லை. ஏன்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. அவை தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதம் தலைதூக்கலாம் என்றும் தெரிவித்ததுடன். தமிழ் அமைப்புக்களின் ஜக்கியத்தை எடுத்துக்கூறியதுடன் அதற்கான சூழ்நிலை கடந்த ஆண்டு மே மாதத்துடன் தோன்றியுள்ளதையும் அதற்கான முன்னேற்பாடுகள் அண்மையில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தலைவர்கள் எல்லோரும் ஒரேமேடையில் தோன்றியுள்ளது மூலம் நல்லதொரு ஜனநாயக மாற்றத்திற்கான தோன்றல் ஏற்பட்டுள்ளது என்றும் டேவிற்சன் அவர்கள் உரையாற்றினர்.

இங்கு உரையாற்றிய யாழ் நோர்த்தன் பிரின்ரஸ் உரிமையாளர் மணியம் அவர்கள் உரையாற்றுகையில், சுந்தரத்தின் முற்போக்கு சிந்தனைகளையும், அவரது நற்பண்புகைளயும் எடுத்து கூறியதுடன், புதியபாதை பத்திரிகை அச்சிடுவதற்கு உதவியவமை பற்றியும் அப்போது உள்ள அச்சமான சூழிநிலையிலும், பத்திரிகை வெளியீட்டுக்கான முயற்சிகளில் சுந்தரம் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்களையும் சுந்தரத்தின் தீர்க்கமான செயற்பாடுகளையும் நினைவுகூர்ந்து கொண்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் விஞ்ஞானபீட மாணவன் ஜக்கி அவர்கள் உரையாற்றுகையில் பேச்சு சுதந்திரம் எவ்வாறு மறுக்கப்பட்டது என்பதை நினைகூர்ந்து கொண்டதுடன், யாழ் பல்கலைக்கழகத்திற்குள் 1985களில் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டமை போன்றவற்றை மிகவும் சுவார்சியமாக எடுத்து கூறி பார்வையாளர்களை சுவார்சியப்படுத்தினார்.

பொதுவாகவே நேற்றைய நினைவுதின கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதுடன், இவ்வாறக தொடர்ந்து ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் என்றும் இவ்வாறாக மேலும் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டு மாற்று ஜனநாயகத்திற்கான சூழ்நிலை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இறுதியாக புளொட் உறுப்பினர் ரமேஸ் அவர்களின் நண்றியுரையுடன் நினைவுகூரல் நிகழ்வு சிறப்புடன் நிறைவுபெற்றது.


தொகுப்பு: கண்ணன்.






அக்கரைப்பற்றில் .தே..ஆதரவாளர்கள் பயணித்த வாகனங்கள்மீது கல்வீச்சு



No Image


அம்பாறையிலிருந்து திருக்கோயில் நோக்கி 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்றுஇ அம்பாறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அக்கரைப்பற்று அரசடிப் குதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இரகசியமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அடங்கிய வெள்ளை வேன் ஒன்றை கைப்பற்றிய பொலிஸார் அதிலிருந்த 8 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அக்கறைப்பற்றுப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண சபை உறுப்பினர்களான தயா கமகேஇ சந்திரதாஸ கலப்பதிஇ மற்றும் வசந்த பியதிஸ்ஸ எம்.பி. ஆகியோர் தலைமையில் அக்கறைப்பற்று தம்பிலுவில்இ திருக்கோயில்இ பொத்துவில் ஊடாக இந்த வாகனப் பேரணி செல்ல முற்பட்டபோதே இந்தத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

ஐ.தே.க. ஆதரவாளர்கள் மீதான தாக்குதலை அடுத்து அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தாக்குதலை அடுத்து ஐ.தே.க. ஆதரவாளர்கள் திருக்கோயில் செல்லுவதற்கு பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் பொலிஸாருக்கும் தயா கமகே தலைமையிலான குழுவினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

பொலிஸாரின் தடையினை அடுத்து அக்கறைபற்று நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் இவர்கள் கூட்டமொன்றினை நடாத்தினர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கூட்டத்தில் கலந்து கொண்டோர் மீதும் கல் வீச்சு நடத்தப்பட்டது. இந்தக் கல்வீச்சில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஐ.தே..க ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கூட்டம் என்பவற்றினால் அக்கறைப்பற்று நகரம் சில மணிநேரம் பதற்றத்திற்குள்ளாகி இருந்தது. இங்கு கடைகளும் மூடப்பட்டதுடன் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்திருந்தது

தேர்தலின் பின் மீண்டும் இந்தியா செல்வோம் : மாவை சேனாதிராஜா
No Image

"ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இம்மாத இறுதியில் மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் செய்து உயர்மட்ட தலைவர்களை சந்திக்க எதிர்பார்க்கின்றோம்.

இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக அரசியல் தீர்வு விடயம் குறித்து இந்திய உயர்மட்டத்துடன் பேச்சு நடத்தவுள்ளோம்" என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாவை சேனாதிராஜா எம்.பி.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது : "கடந்தவாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்கு விஜயம் செய்து அந்நாட்டின் உயரதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தியது. முக்கியமாக இந்திய வெளியுறவு செயலாளரை சந்தித்து பேசினோம்.

அதாவது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் இந்திய உயரதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினோம்.

நாம் கூறிய விடயங்களை ஆர்வமாகவும் அக்கறையுடனும் செவிமடுத்த இந்திய தரப்பினர் அவற்றை உள்வாங்கிக் கொண்டனர். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து செயற்படத் தயார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதேவேளைஇ மோசமான காலநிலை காரணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்திக்க முடியவில்லை. நாங்கள் சென்ற விமானம் மோசமான காலநிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பிவிட்டது. அதற்கிடையில் இந்திய வெளியுறவு அமைச்சர் வெளிநாடு சென்றுவிட்டார்.

எனவே மீண்டும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்து உயர்மட்ட தலைவர்களைச் சந்திக்கவுள்ளோம். அதன்போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


புலிகளின் வங்கிக் கணக்குகள் கு றித்து கெஹெலியவே தெரிவித்தார்:அநுர

No Image


சர்வதேச ரீதியாக விடுதலைப் புலிகளுக்குள்ள சொத்து விபரங்களை கே.பி. தெரிவித்ததாக அரசாங்கமே தகவல்களை வெளியிட்டுள்ளது.

எனவேஇ அச் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பதையும் வெளியிட வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்று ஜே. வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

புலிகளின் சர்வதேச முக்கியஸ்தர் கே.பி. க்கு சிறப்புரிமைகளை வழங்கி ஏன் அரசாங்கம் பாதுகாக்கின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதுஇ கே.பி. வெளியிட்டதாகக் கூறி வெளியான தகவல்கள் தவறானவை என தேசிய புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அநுரகுமார திசாநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்இ

"நாமல் ராஜபக்ஷ புலிகளின் சர்வதேச உளவுப் பிரிவின் முக்கியஸ்தர் எமில் காந்தனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தவறில்லை என்ற அரசின் மனப்பாங்கு கே.பி.யின் விடயம் தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதிலும் தவறில்லை என்ற போக்கை அரசு கொண்டிருக்கலாம்.

இதுவல்ல முக்கியம். சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளுக்கு 600 வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும் 14 கப்பல்கள் இருப்பதாகவும் கே.பி. தெரிவித்ததாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இவ்வாறான தகவல்களை நாம் வழங்கவில்லை. எனவேஇ மக்களுக்கு உண்மையை தெரிந்துகொள்ளும் உரிமை உண்டு. அதற்காகவே கேள்விகளை தொடுக்கின்றோம்.

600 வங்கிக் கணக்குகளுக்கு 14 கப்பல்களுக்கு என்ன நடந்தது? கே.பி. எங்கே? அவருக்கு சிறப்புரிமைகளை வழங்கி அரசாங்கம் பாதுகாக்கின்றது. இது ஏன்? எதற்காக?

புலிகளின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்வதற்காகவா? வங்கியில் ஒப்படைக்கப்பட்ட புலிகளின் தங்கத்திற்கு என்ன நடந்தது? இக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

நாமல் புகைப்பட விவகாரம்

நான் கிராமத்தில் பிறந்தவன். எனவேஇ எவராவது என்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பினால் தடை போட மாட்டேன் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் இவர் இந்நாட்டு ஜனாதிபதியின் மூத்த மகன். இளைஞர்களுக்கான நாளைஇ நீலப் படையணி போன்றவற்றில் பதவி வகிப்பவர்.

இவ்வாறான ஒருவர்இ பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விடுதலைப் புலிகளின் சர்வதேச உளவுப் பிரிவின் தலைவர்களுடன்இ ஊர்ஜிதப்படுத்தப்பட்ட எமில் காந்தனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதானது பாரதூரமான செயலாகும்.

எனவேஇ நாமல் ராஜபக்ஷஇ எமில் காந்தனை ஏன் சந்தித்தார். இருவருக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் என்ன? இதற்கான அனுமதியை யார் வழங்கினார்கள்? என்ற விபரங்களை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

எமது படையினர் உயிர்களை தியாகம் செய்துஇ அங்கவீனர்களாகி பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒழித்தனர். அதனை காட்டிக்கொடுக்கும் விதத்தில் எமில் காந்தனை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக