ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 67 சதவீதமான மக்கள் ஆதரவு
பொன்சேக்காவின் தோல்வி உறுதி - அமைச்சர் மைத்திரிபால

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 67 சதவீத மக்கள் ஆதரவைப் பெற்று முன்னணியில் திகழ்வதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பெறுபேறுகள் சுட்டிக்காட்டியிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான மக்களின் ஆதரவு குறித்து மூன்றாவது தடவையாக எடுக்கப்ப ட்டிருக்கும் கணக்கெடுப்பின் பெறுபேறே இதனை சுட்டிக்காட்டு கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இயலாமையையும் வங்குரோத்து அரசியல் பிரசாரங்களையும் நன்கு அறிந்து வைத்துள்ள நாட்டு மக்கள் என்றுமில்லாதவாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்துக்கு அணிதிரண்டு வருகிறார்கள். எமது கூட்டங்களுக்கு வருகைதரும் இலட்சக் கணக்கான மக்களை பார்க்கையில் இந்த நாட்டின்
தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் என்பதனை அவர்கள் உறுதிசெய்துவிட்டா ர்கள் என்பது மேலும் ஊர்ஜிதமாகியி ருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால கூறினார்.
கொழும்பு மகாவெலி கேந்திர நிலையத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். அதில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெல்வது உறுதியாகியுள்ளது. வீதியில் எங்கு பார்த்தாலும் 90 சதவீதம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அலுவலகங்களும் நீலக்கொடிகளும் வெற்றிலைச் சின்னங்களுமே காணப்படு கின்றன.
நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி சரத் பொன்சேகாவுக்கும் எதிர்க்கட்சியினரின் வங்குரோத்து அரசியல் பிரசாரம் நன்கு புரிந்துவிட்டது.
தான் தேர்தலில் தோல்வியடையப் போகின்றேன் என்பது பொன்சேகாவுக்கு நன்கு விளங்கிவிட்டது.
இயலாமையை தோல்வியின் வேதனையை பொன்சேக்காவின் நடவடிக்கைகள்இ முகபாவம் மற்றும் பிரசாரங்கள் வாயிலாகவே அறிந்துக்கொள்ள முடிகிறதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் மைத்திரிபால இது தொடர்பாக மேலும் கூறுகையில்இ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியால் ஒருபோதும் வெற்றி காண முடியாதென அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்கு தெரியும். தோல்வி உறுதியென்பது நிச்சயமானதன் பின்னரே மக்களுக்கு வேடிக்கை காண்பிப்பதற்காக அரசியல் அனுபவமில்லாத இந்த பொன்சேக்காவை அறிமுகம் செய்துள்ளனர். பொன்சேக்காவின் மனசாட்சிக்கு இந்த உண்மை நன்கு தெரியும்.
சரத் பொன்சேக்கா இராணுவத்தில் பதவியிலிருந்த காலப்பகுதியிலேயே ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்தார். அவரது ஒப்பந்தப்படி புலிகள் படையினருக்கு எத்தனை அவதூறு செய்திருந்தாலும் அதனை படையினர் கைகட்டி பார்த்திருக்க வேண்டும்.
பொன்சேக்கா திறமையான படை வீரரென்றால் அந்த நேரமே யுத்தத்துக்கு முடிவு கண்டிருக்கலாமே? ஏன் அவரால் அதனை செய்ய முடியவில்லை. எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சிக்கு வந்த பின்பே நாட்டில் பல தசாப்த காலமாக நிலவி வந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்போதுஇ பொன்சேக்கா தானே மோதல்களை தீர்த்து வைத்ததாக பெருமை தேடிக்கொள்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியினரின் வங்குரோத்து அரசியல் நிலையினை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர். போலிப் பிரசாரங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைப்பது வெறும் கனவு மாத்திரமே.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மாத்திரமேயுள்ளன. அதற்கிடையில் எமது ஜனாதிபதிக்கான ஆதரவினை இன்னும் பல மடங்கு பலப்படுத்துவோம். ஜனாதிபதிக்கு வெற்றி நிச்சயமெனவும் அவர் கூறினார்.
மாகாண சபை தேர்தல்களுக்கு விநியோகிக்கப்பட்ட
தற்காலிக அடையாள அட்டைகளை ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்த முடியும்
மாகாண சபைத் தேர்தல்களுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை மீள வழங்காது வைத்திருக்கும் வாக்காளர்கள் அவற்றை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பயன்படுத்த முடி யும் எனத் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு ள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல் மாகாண சபைத் தேர்தல்களுக்காகத் தேர்தல்கள் தலைமையகம் தற்காலிக அடையாள அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகித்தது. எனினும் அந்த அடையாள அட்டைகளைத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம்
மீள ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால்இ பெரும்பாலான வாக்காளர்கள் அந்தத் தற்காலிக அட்டைகளை மீள ஒப்படைக்காது தம்மிடமே வைத்துள்ளனர்.
இந்நிலையில்இ கிழக்கு மாகாணத்தைத் தவிர்ந்த வாக்காளர்கள் மீள ஒப்படைக்காமல் வைத்திருக்கும் தற்காலிக அடையாள அட்டைகளை இந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக ஆணையாளர்கள் உதவி ஆணையாளர்கள் ஆகியோர் பங்குபற்றிய கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர் இந்த முடிவை அறிவித்ததாக மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி தெரிவித்தார்.
தேர்தல்கள் தலைமையகம் விநியோகிக்கும் தற்காலிக அட்டைகளைப் பெற்றுக்கொள்வத ற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள் ளது. எனினும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் வழங்கும் தற்காலிக அட்டைகளைப் பெறுவதற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணபிக்க முடியும் என்று மேலதிக ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.
தேர்தல்கள் தலைமையகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதால் ஜனாதிபதித் தேர்தலில் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியாது என எந்த வாக்காளரும் ஆதங்கப்பட வேண்டியதில்லை என்றும் மேலதிக ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டையைத் தம்முடன் கொண்டு செல்ல வேண்டும். அது இல்லாதவர்கள்இ காலாவதியாகாத கடவுச் சீட்டுஇ காலாவதியாகாத சாரதி அனுமதிப்பத்திரம்இ ஓய்வூதிய அடையாள அட்டைஇ முதியோர் அடையாள அட்டைஇ ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் மத குருமார்களுக்கான அடையாள அட்டைஇ தற்காலிக அட்டை அல்லது தேர்தல்கள் தலைமையகம் வழங்கும் தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாட்டுக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்து ஒழித்தேன்
2வது ஒப்பந்தத்தை ஒழிக்கும் பொறுப்பு மக்களுடையது - ஜனாதிபதி
(குருநாகலிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்இ வாரியபொல தினகரன் நிருபர்)
தாய்நாட்டுக்கெதிரான முதலாவது ஒப்பந்தத்தை நான் நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்து இல்லாதொழித்தேன். இரண்டாவது ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுடையதெனவும் அதனை எதிர்வரும் 26ம் திகதி மக்கள் நிறைவேற்றுவரெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வன்முறைக்கும் விரோத அரசியலுக்கும் இனி இந்த நாட்டில் இடமில்லையென தெரிவித்த ஜனாதிபதிஇ பயங்கரவாதத்திலிருந்து மீட்டு ஒன்றிணைந்துள்ள நாட்டைப் பாதுகாத்து ஜனநாயகத்தையும் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று குருநாகல் நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் அநுர பிரியதர்ஷன யாப்பாஇ எஸ். பி. நாவின்னஇ சாலிந்த திசாநாயக்கஇ பாட்டலி சம்பிக்கை ரணவக்கஇ முன்னாள் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கஇ பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட கலைஞர்கள்இ கட்சித் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-
மதுரங்குழி பகுதியில் எமது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியாகியுள்ளது டன் ஐயர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள் ளனர். மீண்டும் வன்முறை யுகம் கட்ட விழ்க்கப்பட்டுள்ளது.
இதனை முடிவுக்குக் கொண்டுவரவும் இரகசிய ஒப்பந்தங்களுக்கு முடிவு கட்டவும் எதிர்வரும் 26ம் திகதி மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
கடந்த நான்கு வருடத்திற்கு முன்னர் இந்த நாட்டை மீட்டு ஐக்கியப்படு த்துவதற்காக மக்கள் இந்த நாட்டைப் பாரம்கொடுத்தார்கள். அதனை நான் முழுமையாக நிறைவேற்றியுள்ளேன்.
தனி நிர்வாக அதிகாரத்துடன் அடையாள அட்டையிலிருந்து சகலதையும் தமக்கென தனியாக வைத்திருந்த பயங்கரவாதியி டமிருந்து நாட்டை மீட்டு தற்போது ஒரு கொடியின் கீழ் அனைத்தையும் கொண்டுவர முடிந்துள்ளது.
வெளிநாடுகளுக்கு அடிபணிந்து முதுகெலும்பில்லாமல் எம் தலைவர்கள் செயற்பட்ட யுகத்துக்கும் முடிவு காணப் பட்டுள்ளது.
நாம் யுத்தத்தை மாத்திரம் முன்னெடுக்க வில்லை. நாட்டில் அபிவிருத்தியையும் மேற்கொண்டோம். அத்துடன் அரச துறையை மேம்படுத்தும் வகையில் ஆறு இலட்சமாகவிருந்த அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 12 இலட்சமாக அதிகரிக்க எம்மால் முடிந்துள்ளது. நாம் இந்த நாட்டை ஆசிய பிராந்தியத்திலேயே பெறுமதிமிக்க நாடாக மாற்ற பின்புலத்தைக் கட்டியெழுப்பியுள்ளோம். வடக்கு கிழக்கு உட்பட சகல பிரதேசங்களையும் அபிவிரு த்தியில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
எம்மைப் பற்றி பல அவதூறுகள்இ சேறு பூசுதல்கள் இடம்பெறுகின்றன. எம்முடனுள்ள விமல் வீரவன்சஇ ஜோன்சன் பெர்னாண்டோ போன்றவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. எந்தவித சவால்களையும் ஏற்க நாம் தயார்.
வைராக்கியமும் குரோதமும் நிறைந்த அரசியலுக்கு இந்த நாட்டில் இனி இடமில்லை. நாமும் நாட்டு மக்களும் அதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
பணத்திற்கு விலைபோகும் அரசியல்வாதிகள் எம்மிடமில்லை. 30 மில்லியன் ரூபாவுக்கு முஸம்மிலை விலைபேசியுள்ள விடயம் அம்பலமாகி யுள்ளது.

முஸம்மிலுக்கு ரூ.3கோடி வழங்கியமைக்கு எதிராக இன்று சட்ட நடவடிக்கை
ஒலிப்பதிவு ஆவணங்களும் ஊடகங்களுக்கு விநியோகம்
சரத் பொன்சேக்காவை ஆதரித்து அவரது ஊழல் மோசடிகளை மூடிமறைக்கக் கோரியும் முஸம்மில் எம்.பி.க்கு மூன்று கோடி ரூபா பணத்தை வழங்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.
உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்இ இன்று முதல் இதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலக த்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. இலஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் கைமாறியமை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதைப் போன்று சம்பவத்துடன் தொடர்புடைய பேச்சுக்கள் இடம்பெற்ற ஒலி நாடாக்கள் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் ஒலிபரப்பிக் காண்பிக்கப்பட்டது.
சரத் பொன்சேகாவுக்கு முஸம்மில் எம்.பி.யின் ஆதரவை பெற்றுக்கொள்வ தற்கான இடைத்தரகராக செயற்பட்ட மயோன் முஸ்தபா எம்.பி. முஸம்மில் எம். பி.யுடன் பேரம் பேசுவதை அதில் கேட்கக் கூடியதாக இருந்தது.
அதேபோன்றுஇ கடந்த 14ம் திகதி இராஜகிரியவிலுள்ள ஐ. தே. க. அலுவலகம் ஒன்றில் வைத்து ஐ. தே. க. முக்கியஸ்தரான மலிக் சமரவிக்ரம முஸம்மில் எம்.பி.யுடன் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.
மயோன் முஸ்தபா ஹாபிஸ் நமர் அஹமட் (துஆ தலைவர்) மற்றும் சரத் என்று அழைக்கப்படும் ஐ. தே. க.வின் மற்றுமொரு முக்கியஸ்தர் ஆகியோர் இணைந்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தையை முஸம்மில் எம்.பி. மிகவும் இரகசியமான முறையில் தனது உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீன ஒலிப்பதிவு இயந்திரம் மூலம் பதிவுசெய்துள்ளார். இந்த உரையாடலையும் இங்கு அவர் ஒலிபரப்பிக் காண்பித்தார்.
சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழல் மோசடிகளை மூடிமறைக்கவும்இ தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கு எதிராகவும்இ சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதற்கான அறிவித்தலை முஸம்மில் எம்.பி. ஊடாக வெளியிடுவது தொடர்பாக இங்கு கலந்துரையாடியதை கேட்கக்கூடியதாக இருந்தது.
இதற்கான செய்தியாளர் மாநாட்டை நடத்தும் இடம் தொடர்பான முரண்பாடுகள் வந்ததையடுத்து அதனை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக ஐ. தே. க. முக்கியஸ்தர் மலிக் சமரவிக்ரம அந்த இடத்திலிருந்தவாறே ரவி கருணாநாயக்க எம்.பி.யுடன் தொலைபேசி மூலம் பேசுவதையும்இ மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள ஒரு இடத்தில் இந்த செய்தியாளர் மாநாட்டை நடத்த ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமையையும் அந்த ஒலி நடாவிலிருந்து கேட்கக் கூடியதாக இருந்தது.
ஒலிபரப்பி காண்பிக்கப்பட்ட உரையாட ல்கள் சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களுக்கு இந்த செய்தியாளர் மாநாட்டில் வழங்கப்பட்டது.
இந்த மாநாட்டில் விமல் வீரவன்ச எம்.பி. தகவல் தருகையில் :-
மிகவும் பொறுப்புடனும்இ ஆதாரபூர்வ மாகவும் இந்த தகவல்களையும் இதனுடன் சம்பந்தப்பட்ட ஒளிஇ ஒலி நாடாக்களையும் நாங்கள் வெளியிடுகின்றோம்.
சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு தனக்கு தொடர்ந்து அழுத்தங்கள் தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக முஸம்மில் என்னிடம் தெரிவித்தார். அதனையடுத்து நாங்கள் திட்டமிட்ட சில செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.
இந்த நாட்டிலுள்ள மக்கள் பிரதிநிதிகளை வாங்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் எனது ஆலோசனைக்கமைய நாட்டுக்காக முஸம்மில் எம்.பி. மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் காட்சிகளையும் பேச்சுக்களையும் ஒளிஇ ஒலிப்பதிவுகளை செய்துள்ளார்.
இவற்றில் உண்மையில்லை என்று கூறும் எவரும் இதனை உறுதிப்படுத்த முடியும். நாங்கள் தயாராக உள்ளோம். உண்மையானதும்இ தகுந்த ஆதாரங்களும் இருப்பதால் எந்தவித தயக்கமும் இன்றி சட்டத்தின் முன் இதனை முன்வைக்கவு ள்ளோம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இதற்கான சகல சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.
3 கோடி ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ள போதிலும் ஒரு தொகைப் பணத்தையே முற்பணமாக கொடுத்துள்ளனர். இதற்காக வெள்ளவத்தையிலுள்ள சபயார் ஹோட்டலில் இரண்டு அறைகள் எடுக்கப்பட்டுள்ளன. 105ம் இலக்க அறை முஸம்மில் எம்.பி.க்காகவும்இ 102ம் இலக்க அறை அவரது மெய்பாது காவலர்களுக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. மயோன் முஸ்தபாஇ தனது பெயர்இ அடையான அட்டை இலக்கம் ஆகிய தகவல்களை வழங்கி இந்த இரு அறைகளை பதிவு செய்துள்ளமை ஹோட்டல் பதிவு மூலம் தெளிவாக உறுதியாகின்றது.
எம்.பி.க்களை பணம் கொடுத்து வாங்கும் விடயம் மிகவும் பாரதூரமான விடயமாகும். சரத் பொன்சேகா தான் ஊழல் அற்றவர் என்றும் தன்னுடன் இருப்பவர்களும் நேர்மையானவர்கள் என்றும் கூறித் திரிகின்றார்.
இலஞ்சம் கொடுத்து எம்.பி.க்களை வாங்குபவர்களிடமிருந்து எவ்வாறு நல்லாட்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஏகாதிபத்தியவாதிகள் தங்களுக்குத் தேவையானதை இந்த நாட்டில் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.
மேற்கத்திய நாடுகளின் பணங்கள் மூலம் இந்த நாட்டு மக்களின் தீர்மானத்தை ஒருபோதும் மாற்ற முடியாது. எனவேஇ மக்கள் ஒருபோதும் இதனை அனுமதிக்கப் போவதில்லை என்றார்.
முஸம்மில் எம். பி.
சில ஊடகங்கள் கூறுவது போன்று பணத்தைப் பெறும் நோக்கம் இருந்தால் அந்த காட்சிகளையும்இ பேச்சுவார்த்தைகளை யும் ஒளிஇ ஒலிப்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை என்று முஸம்மில் எம்.பி. தெரிவித்தார்.
இது போன்ற இலஞ்சம் கொடுக்கும் திட்டங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுச் சென்றேன் என்று அவர் குறிப்பிட்டார்.
எமது திட்டத்தை சரியான முறையில் நிறைவேற்றுவதற்காக அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடிக்க வேண்டி ஏற்பட்டது. இதற்காக பொன்சேகாவுக்கு ஆதரவாக சில பொய்களை சொல்ல நேர்ந்ததாக முஸம்மில் தெரிவித்தார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு;
‘கொமான்டோ படையினர் வேண்டுமா? அல்லது என்னிடம் பாதுகாப்பு ஆட்கள் உள்ளனர். எது வேண்டும் என்று ரவி கருணாநாயக்க எம்.பி. கேட்டுள்ளார்.
மயோன் முஸ்தபாவுடனான ஒலி நாடா உரையிலும் இதனை கேட்கக்கூடி யதாக இருந்தது.
கடந்த 5ம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த முஸம்மில்இ உங்களைப் பற்றி தலைவரிடம் சொல்லியுள்ளேன். இன்னும் சில முக்கியஸ்தர்கள் வரவுள்ளனர். சகலருக்கும் பணம் கொடுக்க தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
சரத் பொன்சேகாஇ ரணில்இ ஜே. வி. பி. மற்றும் முக்கியஸ்தருக்கு இந்த விடயங்கள் தொடர்பாக தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக