24 தமிழ் இளைஞர்கள் நேற்று விடுதலை; 50 பேரை இன்று விடுவிக்க ஏற்பாடு
28 இளைஞர்கள் புனர்வாழ்வு நிலையம் அனுப்பி வைப்பு; அமைச்சர் ஆறுமுகன் நுவரெலியாவில் தகவல்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களில் 24 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். மேலும் 28 இளைஞர்கள் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளனர். இதேவேளை இன்று 50 இளை ஞர்கள் விடுதலை செய்யப்படுவார்களென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று தெரிவித்தார்.
நுவரெலியா கிரேன் விருந்தகத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், இந்தத் தகவலை வெளியிட்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளுக்கமைய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றதென அமைச்சர் ஆறுமுகன் கூறினார்.
விடுதலை செய்யப்பட்ட இளைஞர்களில் இருவர் மலையக இளைஞர்கள் ஆவர். டிக்ஷன் அன்டனி, கணேசன் சிவகுமார் ஆகிய இரு இளைஞர்களே மலையகத்தில் விடுவிக்கப்பட்டவர்களாவர். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேலும் கூறியதாவது :
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமக்கு வழங்கிய உறுதிமொழியை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். நீண்டகாலம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள் ளனர். மேலும் படிப்படியாக பலர் விடுவிக்கப்படுவார்கள்.
மலையக மக்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்தவை மறக்கமாட்டார்கள். அவரின் காலத்திலேயே மலையகம் அபிவிருத்தி கண்டுள்ளது. மக்கள் சந்தோஷமாக வாழும் சூழ்நிலையை அவர் இங்கு ஏற்படுத்தியிருக்கிறார்.
கொட்டகலை, ராகலை ஆகிய இடங் களில் நடந்த கூட்டங்களைப் பார்த்தால், அலை அலையென மக்கள் திரண்டு காணப்பட்டனர். மலையக மக்கள் ஜனாதிபதியை மீண்டும் வெற்றிபெறச் செய்வார்கள் என்பதற்கே ராகலை, கொட்டகலைக் கூட்டங்கள் உதாரணமாக விளங்குகின்றன என்றார்.
மஸ்ஜிதுகளை வாக்கு கேட்கும் மேடைகளாக்க வேண்டாம்
நியாஸ் மெளலவி
நியாஸ் மெளலவி
பிமஸ்ஜிதுகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்பீ என ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் நியாஸ் மெளலவி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
மஸ்ஜிதுகள் புனிதமானவை. அது இறை இல்லம். தேர்தல் காலங்களில் தான் விரும்பிய கட்சிகளை தெரிவு செய்து வாக்களிப்பது ஜனநாயக உரிமை. விரும்பிய அபேட்சகர் ஒருவருக்கு எமது ஒத்துழைப்பை வழங்குவதும் ஜனநாயக உரிமை மாத்திரமல்ல அது மனித உரிமையும் கூட.
பிமஸ்ஜிதுகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்பீ என ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் நியாஸ் மெளலவி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
மஸ்ஜிதுகள் புனிதமானவை. அது இறை இல்லம். தேர்தல் காலங்களில் தான் விரும்பிய கட்சிகளை தெரிவு செய்து வாக்களிப்பது ஜனநாயக உரிமை. விரும்பிய அபேட்சகர் ஒருவருக்கு எமது ஒத்துழைப்பை வழங்குவதும் ஜனநாயக உரிமை மாத்திரமல்ல அது மனித உரிமையும் கூட. ஜனாதிபதி கூட தனக்கு வாக்களித்து ஒத்துழைப்பு நல்குவதை மஸ்ஜிதுகளில் அறிவித்து தனக்கும் அவப்பெயர் ஏற்படுத்தி மஸ்ஜிதுகளின் மாண்புகளை கெடுத்துக்கொள்வதை விரும்பவில்லையென என்னிடம் கூறிய அறிவுரையை நான் நினைவுபடுத்தவே வேண்டும்.
இந்நிலையில் 75 சதவீத பெளத்தர்கள் வாழும் இந்நாட்டில் சிறுபான்மையினர் வந்தேறுகள். அவர்கள் உரிமைகள் எதுவும் கேட்கக்கூடாது என பகிரங்கமாகே அறிவித்த எதிரணி அபேட்சகர் ஒருவரை, அவர் மீதும் அவரை சார்ந்த கட்சிகளின் மீதும் கொண்ட பிரியத்தால் மஸ்ஜிதுகளில் ஜும்ஆ தொழுகை கூட்டத்தை சந்தர்ப்பமாக பயன்படுத்தி அவரை ஆதரியுங்கள்பீ, அவருக்கு வாக்களியுங்கள்பீ போன்ற அறிவிப்புக்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுமானால் அது முறையற்ற செயல் எனவும் முஸ்லிம் சமூகத்தை பலிகொடுக்க முனையும் செயல் எனவும் நான் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
நான் நன்றிக்கடன் என நினைத்து ஜனாதிபதியை ஆதரிக்கிறேன். முஸ்லிம் சமூகமும் அவ்வாறே ஆதரிப்பது சமயோசிதமும், நன்றி உணர்வுமென நினைக்கிறேன்.
முஸ்லிம்களின் வாக்குப் பலமே தனது வெற்றிக்கு துணைசெய்தது என ஜனாதிபதிக்கு உறுதிசெய்யும் ஒரு வரலாற்றை ஏற்படுத்தினால் நமது தேவைகளை முறையாக பெற்றெடுக்க வழி அமையுமல்லவா. ஆளுமைத் திறன் இல்லாத ஒருவரை வெற்றிபெறச்செய்ய துடிப்பது நாமே, நமது அழிவுக்கு குழி பறித்துக்கொண்டது போல ஆகுமல்லவா? சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி பிஇன்ஷா அல்லாஹ்பீ உறுதி. வெற்றிபெற்ற நிலையில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குப் பலன் வீழ்ச்சியென்ற ஒரு நிலை தோன்றினால் நம் சமூகத்தின் நிலையென்ன சிந்தியுங்கள்.
நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை 27ல் ஒன்றுபட்டு ஆரம்பிப்போம்
பென்சேகா - சம்பந்தன் ஒப்பந்தம் 26ல் ஒழிக்கப்படும்
ஜனாதிபதி
பென்சேகா - சம்பந்தன் ஒப்பந்தம் 26ல் ஒழிக்கப்படும்
ஜனாதிபதி
வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என நாட்டின் சகல பகுதிகளிலும் நாம் அமோக வெற்றிபெறுவது உறுதி. வெற்றியைத் தொடர்ந்து எதிர்வரும் 27ம் திகதி நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை அனைவரும் ஒன்றிணைந்து ஆரம்பிப்போமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சரத் பொன்சேகா - சம்பந்தனுக்கிடை யிலான ஒப்பந்தத்தை இன்று முழு நாடும் அறியும். எதிர்வரும் 26ம் திகதி அது இல்லாதொழிக்கப்படும். இந்த தசாப்தம் இளைஞர்களுக்கான சாப்தம் அவர்களுக்காக இன மத பேதமின்றி சுபீட்சமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோமென வும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசா ரக் கூட்டம் கண்டி கெட்டம்பே மைதா னத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டு மக்கள் இந் நாட்டை மீட்டு ஒன்றிணைந்துத் தரு மாறு என்னிடம் பாரம்கொடுத்தனர். மக்கள் எதிர்பார்ப்பை நான் முழு மையாக நிறைவேற்றினேன்.
ரணில் விக்கிரமசிங்க நாட்டைத் துண்டாடி பிரபாகரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்று அதிகாரம் மூலம் இல்லாதொழிக்க என்னால் முடிந்தது. அப்போது ரணிலுடன் மனோ கணேசன் ரவூப் ஹக்கீம் போன்றோரும் இருந்தனர்.
புலிகள் முப்படைகளுடன் நிர்வா கம் செய்த காலம் அது. அவர்களு க்கென தனியான அடையாள அட்டை நடைமுறையில் இருந்தது. அத்தகையவர்களிடமிருந்தே நாம் நாட்டை மீட்டோம்.
நாட்டை மீட்டது மட்டுமன்றி நாட்டின் சகல பகுதிகளிலும் அபிவி ருத்தியை மேற்கொண்டோம். துறை முகங்கள், மின் உற்பத்தித் திட்டங் கள், வீதிகள், பாலங்கள், மேம்பால ங்கள் என பல்துறை அபிவிருத்தி களை முன்னெடுத்துள்ளோம்.
ஊரிலேயே சுற்றுலா மேற்கொள் ளக்கூடிய முதலாவது நாடு இல ங்கை தான் என நியூயோர்க் சஞ் சிகை ஒன்று தெரிவித்துள்ளது. அந்த ளவிற்கு சிறந்த நாடாக இலங் கையை உருவாக்க எம்மால் முடிந்து ள்ளது.
அதேபோன்று முதலீட்டுக் கான சிறந்த நாடாகவும் இலங்கை குறி ப்பிடப்பட்டுள்ளது.
இந்நாட்டின் ஜனநாயகம் பாது காக்கப்படவேண்டும். நான் கடந்த வாரம் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய பகுதி களுக்கு விஜயம் செய்தேன் அப் பகுதி மக்கள் என்னை பெருமகிழ்வு டன் வரவேற்றனர். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் பல் லாயிரக்கணக்கான சனத்திரள் முன்னி லையில் நான் உரையாற்றிளேன். அந்நிகழ்வு மாபெரும் நிகழ்வாக அமைந்தது.
ஜெனரல் கொப்பேகடுவ தேர்த லில் போட்டியிட்டு வெற்றிகண்ட தொகுதி அது. இம்முறைத் தேர்த லில் நாம் வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகமென சகல பகுதிகளிலும் வெற்றிபெறுவது உறுதி.
இந்நாடு ஒன்றிணைந்த நாடு. ஒன்றிணைக்ப்பட்டுள்ள நாடு. இதனை எவரும் துண்டாட முடியாது. அத னால்தான் சம்பந்தனின் நிபந்தனை களை நாம் நிகராகரித்தோம்.
இது நாம் பிறந்த நாடு இதனை நாம் அனைவரும் நேசிக்க வேண் டும், துண்டாட இடமளிக்கக் கூடாது.
அரசியல் அனுதாபம் பெற எதிர்க்கட்சிகள் முயற்சி
தமது கூட்டங்களில் தாமே குண்டுத் தாக்குதலை நடத்த திட்டம்
அரசியல் அனுதாபங்களை பெறும் நோக்கில் எதிர்க் கட்சிகள் தங்களது கூட்டங்களில் தாங்களே குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறப் போவதில்லை என்பதை தெரிந்துகொண்ட எதிர்க் கட்சிகள் அனுதாப வாக்குகளுக்காக இதுபோன்ற திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது.
மேல் மாகாண அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தருமான உதய கம்மம்பில கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் விமல் வீரவன்ச எம்.பி. மேலும் உரையாற்றுகையில்:-
நாளுக்கு நாள் தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் எதிர்க் கட்சிகள் தற்பொழுது அனுதாப வாக்குகளை பெறும் பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளமையும், இதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
எதிர்க் கட்சிகளிலிருந்து எமக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி சரத் பொன்சேகாவை ஆதரித்து கலந்துகொள்ளும் கூட்டங்களில் அல்லது எதிர்க்கட்சியின் செய்தியாளர் மாநாட்டின்போது தாங்களே திட்டமிட்டு குண்டுகளை வெடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.
அனுதாப வாக்குகளுக்காக தங்களுக்கு தாங்களே தாக்குதல் நடத்தவுள்ள இதுபோன்ற திட்டங்களைக் கண்டு பொது மக்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று தெரிவித்த அவர், மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தகவல்களை முன்கூட்டி தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தோல்வியடைவது உறுதியான நிலையிலுள்ள எதிர்க்கட்சிகள் இதுபோன்ற தாக்குதல்களை இறுதிக் கட்டத்தில் செய்து விட்டு அதனை அரசின் மீது போடுவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சரத் பொன்சேகாவின் ஊழல் மோசடிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் போன்றவற்றை மறைப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று வன்முறைகளை தூண்டிவிட்டு இதனை எம்மீது போட முயற்சிப்பதாகவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.
எதிர்க் கட்சிகள் எதிர்வரும் 25ம் திகதி நள்ளிரவு வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்காளர்களின் அடையாள அட்டைகளை கொள்ளையிடுவதற்கும், பலாத்காரமாகப் பறித்தெடுப்பதற்கும் திட்டங்கள் தீட்டியுள்ளமையும் தெரிய வந்துள்ளது என்று தெரிவித்த அவர், இதன் மூலம் எமது ஆதரவாளர்களை வாக்களிப்பதிலிருந்து தடுக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஒருவருக்கு சம்பந்தன் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதன் மூலம் சரத் பொன்சேகாவுக்கும், சம்பந்தனுக்கும் இடையிலான ஒப்பந்தம் உள்ளமையும் அதற்காக இணக்கம் காணப்பட்டுள்ளமையும் தெளிவாக தெரிகிறது.
பிரபாகரனை ஒழித்து, பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக ஜனாதிபதியை பழிவாங்கும் வகையிலேயே சம்பந்தன் சரத் பொன்சேகாவுடன் இணைந்து செயற்படுகின் றார்.
5000 இளைஞர், யுவதிகள் ஜனாதிபதிக்கு ஆதரவாக காலியில் பிரசாரம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் 5000 இளைஞர் - யுவதி கள் பங்குபற்றும் பாரிய பிரசார நடவடிக்கைகள் இன்று காலி நபர்ப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.
அமைச்சர் பியசேன கமகேயின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பிரசார நடவடிக்கைகளில் காலி மாவட்ட அமைச்சர்கள், மாகாண மற்றும் பிரதேச சபை அமைச்சர்கள் பங்குபற்றுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக