21 ஜனவரி, 2010

தேர்தல் வன்முறைகள் குறித்து ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கவனம்

No Image


தேர்தலுக்கு முன்னரான வன்முறைகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஐ.நா செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வெவேறான அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை வன்முறையற்ற முறையில் நடாத்துவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

அமைதியான காலப்பகுதியில் நடைபெறும் முதலாவது நாடு தளுவிய தேர்தல் நீண்ட கால அமைதியையும் சமாதானத்தையும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஐ.நா செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை பணிப்பாளர் கத்தரின் அஸ்டன் தனது அறிக்கையில்இஇலங்கையில் தேர்தலுக்கு முன்னரான வன்முறைகள்இ மரணங்கள் குறித்து கவன செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னரும் அதற்கு பின்னரும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள அவர் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் நீண்டகால சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் வன்முறைகளற்ற தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளைஇ இரண்டு பிரதான தரப்பினருக்கும் இடையிலான முறுகல்களினால் வாக்களிப்பில் சகலரும் கலந்து கொண்டு தங்களது அபிலாஷைகளை வெளிப்படுத்துவார்களா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



தேர்தலை
முன்னிட்டு நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்:ஊடகத்துறை அமைச்சர்
No Image


ஜனாதிபதி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் தேசியப் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்இ

"தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனை ஐ.தே.க அல்ல மக்கள் விடுதலை முன்னணியே செய்கிறது. அடையாள அட்டை பிரச்சினை ஏற்படுவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது.

பாதுகாப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும். அரசாங்கத்துக்கு கணிசமான வாக்குகள் கிடைப்பது தொடர்பான உறுதிப்பாடென்று இருக்கிறது. அதனால் வன்செயல் மூலம் வெற்றி பெறுவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வித தேவையும் இல்லை" என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 50 பேர் இன்று விடுதலை

No Image
பய ங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூசா தடுத்து வைக்கப்படிருந்த 50 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட சிலர் பஸ்ஸொன்றி ஏற்றிச் செல்லப்பட்டு பின் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேவேளை நாளை வெள்ளிக்கிழமையும் சில கைதிகள் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக