செவ்வாய்க்கு குரங்கை அனுப்ப ரஷ்யா திட்டம்
செவ்வாய் கிரகத்திற்கு ஒரு குரங்கை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அந்த குரங்குக்குத் துணையாக ஒரு ரோபோவும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த செவ்வாய் பயணத்தின் கால அளவு 520 நாட்களாகும்.
செவ்வாயில் மனிதன் வசிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாஇ முதன் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு ஒரு உயிரினத்தை அனுப்பி வைத்து ஆராயவுள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனம் ஒன்று கூறுகையில்இ செவ்வாய் கிரகத்திற்கு குரங்கு ஒன்றை அனுப்பி வைக்க ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக ரஷ்ய விண்வெளி ஆய்வு அகாடமியுடன் தொடர்பு கொண்டுள்ளோம்.
முன்பு நாங்கள்தான் ரஷ்ய விண்வெளி ஆய்வுக்குத் தேவையான குரங்குகளை சப்ளை செய்துள்ளோம். தற்போதும் நாங்களே செவ்வாய் செல்லவுள்ள குரங்கையும் சப்ளை செய்யவுள்ளோம்" என்றனர்.
முதலில் ஒரு குரங்கு மட்டும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து ஒரு ரோபோவும் அனுப்பி வைக்கப்படும். இந்த ரோபோ தான்இ குரங்குக்குத் துணையாக செவ்வாய் கிரகத்தில் இருக்கும்.
குரங்கைக் குளிப்பாட்டிஇ சாப்பாடு ஊட்டுவது வரை அனைத்தையும் இந்த ரோபோ பார்த்துக் கொள்ளுமாம். குரங்கும்இ ரோபோட்டும் 520 நாட்கள் செவ்வாயில் இருப்பார்கள்.
குரங்கைக் கவனித்துக் கொள்ளும் வகையிலான ரோபோ உருவாக்குவது கடினமான காரியமே அல்ல. உண்மையில் கஷ்டமான சமாச்சாரம் என்னவென்றால்இ குரங்குக்குஇ அந்த ரோபோவை பழக கற்றுக் கொடுப்பதுதான். ரோபோ எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரைவில் குரங்குக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கலகமுவவில் ரயில் தரம் புரண்டதில் 20 பயணிகள் காயம்
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற கல்கமுவ அருகில் ரயில் தடம் புரண்டதில் 20 பயணிகல் காயமடைந்துள்ளனர்.இதன் காரணமாக இன்று காலை யாழ் தேவி ரயில் சேவை தர்காலிகமாக மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது
இந்திய விசா நடைமுறையில் புதிய விதிமுறை
இந்தியாவுக்கு சென்று திரும்பும் வெளிநாட்டவர்கள்இ இரு மாதங்களுக்குள் அங்கு மீண்டும் செல்வதை தடுக்கும் வகையில்இ நீண்ட கால சுற்றுலா விசாக்களுக்கு இந்தியா கடுமையான விதிகளை கொண்டுவருகிறது.
விசாக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவே இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
முன்னைய விதிகளின்படி 5 முதல் 10 வருட கால விசாவை வைத்திருப்பவர்கள் 180 நாட்களுக்குள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும்.
வணிக மற்றும் தொழில் விசாக்களைப் பெறுவதற்கான கஸ்டமான நடைமுறைகளை தவிர்ப்பதற்கான குறுக்கு வழியாக இதனை பல வெளிநாட்டவர்கள்இ குறிப்பாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் பயன்படுத்துகின்றனர்.
இந்த மாற்றங்கள் சீரற்ற வகையில் பிரயோகிக்கப்படுவதாக கூறுகின்ற டெல்லிக்கான அமெரிக்கத் தூதரகம்இ தமது நாட்டவர்கள் பலரை இது பாதிக்கும் என்றும் கூறியுள்ளது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக