18 அக்டோபர், 2009

இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம்; ப.சிதம்பரம்-கருணாநிதி சந்தித்து ஆலோசனை


வடக்கே வவுனியாவில் முகாம்களி்ல் உள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆலோசனை நடத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இலங்கைக்கு விஜயம் செய்த திமுக-காங்கிரஸ் எம்பிக்கள் வழங்கிய அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், "இதுவரை 5,000 தமிழர்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். மற்றவர்களையும் விரைவில் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்புவது குறித்து இலங்கையுடன் மத்திய அரசு பேச்சு நடத்தும்.

அந்த மக்கள் வசித்த பகுதிகள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிகளை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் மத்திய அரசு உதவத் தயாராக உள்ளது.

இலங்கை அரசு கோரினால் அந் நாட்டு மேலும் நிதியுதவி செய்யவும் அரசு தயாராக உள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்த குழு அளித்துள்ள அறிக்கை குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதி்த்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக