17 அக்டோபர், 2009

படையினருக்கு இடர்காலக்கடன் கொடுப்பனவாக ரூ. 700 மில்லியன்

படையினர் கோரியிருந்த இடர்காலக் கடன்களுக்கென 700 மில்லியன் ரூபாவை உடனடியாக இலங்கை இராணுவத்துக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது.படையினர் கோரியிருந்த இடர்காலக் கடன்களுக்கென 700 மில்லியன் ரூபாவை உடனடியாக இலங்கை இராணுவத்துக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது என பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வன்னி பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டபோது அங்குள்ள படைவீரர்கள், தாம் கோரியிருந்த இடர்கால கடன் (10 மாத கொடுப்பனவு) இதுவரை கிடைக்க வில்லை என இராணுவத் தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சுமார் 900 க்கும் அதிகமான விண்ண ப்பங்கள் இராணுவ தலைமையகத்துக்கு கிடைத்திருந்தபோதும் நிதி பற்றாக்குறை காரணமாக உடனடியாக இக் கடனை வழங்க முடியாமல் போனது. இவ்விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி ஜனாதி பதியுடனும், பாதுகாப்பு செயலாளருடனும் பேச்சு நடத்தியதன் பயனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 700 மில்லியன் ரூபா வை உடனடியாக வழங்குமாறு திறைசேரிக்கு பணிப்புரை வழங்கினார். தற்போது திறைசேரி 700 மில்லியன் ரூபாவை இராணுவத்துக்கு வழங்கியுள்ளதுடன் இடர்காலக் கடன்கள் தற்போது வழங்கப்பட்டும் வருகிறது என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக