17 அக்டோபர், 2009

இரு கனடா எம்பிக்களுக்கு இலங்கை வர விசா மறுப்பு
இலங்கையரான உலகப் புகழ்பெற்ற அமெரிக்க வர்த்தகர் கைது
l

வர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையரான, புகழ் பெற்ற அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.


உலகப் பிரசித்தி பெற்ற கெலொன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்த வரிசையில் 559ஆம் இடத்தை வகிப்பவருமான ராஜ் ராஜரட்னம் நேற்றைய தினம் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியான முறையில் இலாபமீட்டியுள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற இவ்வாறான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி உதவி வழங்குவதாக ராஜரட்னம் ஒப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


கனடா கன்ஸர்வேட்டிவ் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வருவதற்கு விசா வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பற்றிக் பிரௌன் மற்றும், போல் கலேன்ட்ரா ஆகியோருக்கே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இலங்கையின் வவுனியாவில் அமைந்துள்ள தடுப்பு முகாம்களைப் பார்வையிடுவதற்காக இலங்கை வரவிருந்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கு விசா மறுக்கப்பட்ட விடயம் கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தாம் இடம்பெயர்ந்தோரின் நிலையைப் பார்வையிடவிருந்ததாக பற்றிக் பிரௌன் தெரிவித்துள்ளார்
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம் : மாலைதீவு அரசு தீர்மானம்



அடியில் முதல் தடவையாக அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்த மாலைத்தீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலகம் வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றை வலியுறுத்தும் நோக்கில் இந்த விசித்திர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து ஆறு மீற்றர் ஆழத்தில் நீச்சல் உபகரணங்களுடன் மாலைத்தீவு அமைச்சரவை அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

உலக காபனீரொட்சைட் வெளியீட்டு அளவைக் கட்டுப்படுத்தக் கோரி விசேட ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.

கடலுக்கு அடியில் மாநாடு நடத்துவது தொடர்பில் மாலைதீவு அமைச்சர்களுக்கு விசேட பயற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

14 பேரைக் கொண்ட மாலைதீவு அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் மட்டும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

குறித்த மூன்று அமைச்சர்களும் நீருக்கு அடியில் மாநாடு நடத்தக் கூடிய அளவுக்கு மருத்துவ ரீதியில் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி நசீட் கடலுக்கு அடியில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

அனைத்து அமைச்சர்களுக்கும் விசேட பயற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக