8 அக்டோபர், 2009





வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் தங்கியிருந்த கர்ப்பிணித்தாய்மாகள் யாழ் செல்ல புதனன்று அனுமதி மறுப்பு
இடம்பெயர் மக்களின் நடமாடும் சுதந்திரம் மறுக்கப்படுவது .நா. சாசனத்துக்கு முரணானது:ஜேன் லம்பெர்ட்





வவனியா கோவில்குளம் சிவன்கோவிலில் தங்க வைக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய்மார்களின் குடும்பத்தினர்களைக் கொண்ட 300 பேருக்கு யாழ்ப்பாணம் செல்வதற்குப் புதனன்று வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் படையினர் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான உரிய இராணுவத்தினரின் ஆவணங்களை எதிர்பார்த்து இவர்கள் கடந்த சில தினங்களாக வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கல்யாண மண்டபத்தில் தங்கியிருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பதற்காக புதனன்கிழமை காலை வவுனியா செயலக அதிகாரிகள் பஸ் வண்டிகளில் ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடிக்கு அழைத்துச் சென்ற போதிலும், இவர்களுக்கான ஆவணங்கள் இன்னும் வந்து சேரவில்லை என்பதால் இவர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப முடியாதென அங்கிருந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து. இவர்கள் மீண்டும் பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு கோவில்குளம் சிவன்கோவிலில் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளார்கள்.

மனிக்பாம் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படுகின்ற கர்ப்பிணித்தாய்மார்கள் அடங்கியோரின் குடும்ப விபரங்கள் வவுனியா செயலகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டு, யாழ் அரச அதிபர் இவர்களுக்குரிய ஆவணங்களை உரிய இராணுவ அதிகாரிகளிடமிருந்து பெற்று அனுப்பிய பின்பே இவர்கள் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றார்கள்.


எனினும் புதன்கிழமை இத்தகைய அனுமதி பெறப்படுவதற்கு முன்பே சிவன்கோவிலில் இருந்த 300 பேரையும் மூட்டை முடிச்சுகளுடன் அதிகாரிகள் ஈரப்பெரியகுளத்திற்கு பஸ் வண்டிகளில் அழைத்துச் சென்றதாக யாழ் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கர்ப்பிணித் தாய்மார்களும், கைக்குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களும், தமது உடல் நிலைமையைக் கருத்திற் கொள்ளாமல் அதிகாரிகள் தங்களை வீணாக இடத்திற்கு இடம் பஸ் வண்டிகளில் ஏற்றி அலைக்கழிப்பதாகக் கவலை தெரிவித்துள்ளார்கள







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக