8 அக்டோபர், 2009

பிரான்ஸ் கடற்படை கப்பல் மீது சோமாலிய கடற்கொள்ளையர்கள்
தவறுதலாகதாக்குதல்


10 இலங்கையர்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி மறுப்பு









எடையுடன் இந்தியக் கடற்பரப்பில் பயணித்த பிரான்ஸ் நாட்டு கடற்படைக் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களின் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளது.

160 மீற்றர் நீளமுடைய பிரான்ஸ் கடற்படைக் கப்பலான 'த குறூ ஒப் லா சோமே' மீது சோமாலிய கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.

சிறிய ரக ஆயுதங்களுடன் இரு படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் இக் கப்பலை வர்த்தகக் கப்பல் என எண்ணி கொள்ளையிடும் நோக்கத்துடன் முன்னேறி தாக்கியுள்ளனர். ஐந்து கடற்கொள்ளையர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என பேச்சாளர் அட்மிரல் கிரிஸ்டோபி பிரசுக் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாங்கள் தவறுதலாக தாக்கியது கடற்படை கப்பல் என அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர். எனினும் அவர்களை துரத்திய கடற்படையினர் ஒரு படகில் இருந்த கொள்ளையர்களை மட்டும் கைது செய்துள்ளனர். அச்சமயம் மற்ற படகில் வந்த கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பாரிஸில் வைத்து அட்மிரல் கிரிஸ்டோபி பிரசுக் தெரிவித்துள்ளார்.



தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என கருதப்படும் 10 இலங்கைத் தமிழர்கள், இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் சேகரித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 64 பேரில் இந்த 10 பேரும் அடங்குகின்றனர்.

வயது மற்றும் உடல் நலம் என்பவற்றை கருத்திற் கொண்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இவர்கள் நாட்டில் இருந்து வெளியேற தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தநிலையில் அவர்கள் இந்தியாவிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையை தமிழக பொலிஸ் நிராகரித்துள்ளது. தமிழகம் செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக