21 அக்டோபர், 2009

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இறந்தது எப்படி? பசில் ராஜபக்ஷே இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவுக்கு விளக்கம்!


இலங்கை கடற்பகுதியில் போடப்பட்டிருந்த ஆறு அடுக்கு பாதுகாப்பை உணராத பிரபாகரன், தப்பிச் செல்லும் போது தான், சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், 30 ஆண்டுகாலமாக சிங்கள ராணுவத்திடம் போரிட்டு வெற்றி கண்ட அவர், எப்படி ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார் என, இன்னும் சிலர் நம்ப மறுக்கின்றனர்.

அவர் இறப்பதற்கு முன் அவரது நடவடிக்கைகள் எப்படி இருந்தன என்பது பற்றி பசில் ராஜபக்ஷே, தமிழக எம்.பி.இக்கள் குழுவினரிடம் கூறியதாவது: மக்களை கேடயமாக முன் நிறுத்தி தான் புலிகள் இந்த போரை நடத்தினர். மக்கள் வெளியேறாதபடி அவர்களின் அடையாள அட்டையை புலிகள் பறித்துக் கொண்டுவிட்டனர். விடுதலைப் புலிகள் பலம் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வந்தது.

புலிகளைச் சுற்றிலும் பலம் வாய்ந்த ராணுவ வளையம் இறுகியது. புலிகளுக்கு ஆயுதம் வருவதற்கும் வழியில்லாமல் போனது. தப்பிப்பதற்கும் வழியில்லை. மக்களும் குண்டு அடிபட்டு உயிருக்கு போராடி பரிதவித்த நேரம். பெரிதாக எதிர்பார்த்திருந்த இந்தியாவில் இருந்து போரை நிறுத்துவதற்கான வழி இனி வரப் போவதில்லை என உறுதியானது. சண்டை போட வைத்திருந்த ஆயுதத்தையும் படிப்படியாக இழந்துவிட்டனர். பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவரலாம் என பிரபாகரன் முடிவு செய்து, நடேசன் மூலமாக பேச்சுவார்த்தைக்கு தூது அனுப்பினார். பிரபாகரன் இறப்பதற்கு முதல் நாள் போர் உச்சக்கட்ட நிலையை அடைந்திருந்தது.

திடீரென அன்று காலை 12 மணிக்கு நடேசன், பசில் ராஜபக்ஷேவை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து பேச விரும்புகிறோம். போரை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம். விரைவில் ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அப்போது புலிகளிடமிருந்து வரும் தகவல் நம்பகமானதா அல்லது வழக்கமான திசை திருப்பும் தந்திரமா என யூகிக்க முடியாதவாறு, “சரி ஏற்பாடு செய்வோம்’ என, ராஜபக்ஷேவுடன் கலந்து பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு நார்வே தூதரும் போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார். அப்போது தான், புலிகள் இறங்கி வந்திருப்பதாக ராணுவம் உணர்ந்தது.

இதற்கிடையே புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்கள் மெல்ல மெல்ல, ராணுவ பாதுகாப்பு முகாமிற்கு வர தொடங்கினர். புலிகளும் பொது மக்கள் செல்வதை அனுமதித்தினர். அதற்காக ஒரு சிறிய பாதை ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் பொது மக்கள் சென்றுக் கொண்டிருந்தனர்.

இரவு 9 மணிக்கு பொது மக்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்த பாதையில், புலிகள் இரண்டு வேன்களில் வந்து திடீரென தாக்குதல் நடத்தினர். அந்த நேரத்தில் திட்டமிட்டபடி பின்புறமாக பிரபாகரன் முல்லைத்தீவு கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, கடல் பகுதியில் ஆறு அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததை சற்றும் உணராத பிரபாகரன், ராணுவ தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.

ஆனால், பிரபாகரனை நோக்கி தாக்கியது ராணுவத்திற்கும் தெரியாது.மறுநாள் காலையில் தாக்குதல் நடந்த இடத்தில் கிடந்த பிரேதத்தை பார்த்த போது தான் பிரபாகரன் உடல் கிடந்தது ராணுவத்திற்கே தெரிந்தது. இவ்வாறு பசில் ராஜபக்ஷே கூறினார்.

கண்ணி வெடிகளை அகற்ற தாமதம்: இலங்கையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள்இ 60 நாட்களில் வேறு இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்பது விதி. ஆனால்இ இலங்கை அரசு அதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. போர் நடந்த பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஏராளமான கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர்.

மேலும், விடுதலைப் புலிகள், தமது ஆயுதங்களை பூமிக்கு அடியிலேயே பதுக்கி வைத்துள்ளதாக ராணுவ தரப்பில் நம்பப்படுகிறது. அவற்றை முழுவதுமாக அகற்றும் பணியில் இந்தியா, இலங்கை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். முற்றிலுமாக அகற்றப்பட்டதாக சான்றிதழ் கொடுத்தால் தான், முகாம்களில் உள்ளவர்களை குடியமர்த்த முடியும். அவசர அவசரமாக கண்ணி வெடிகளை மட்டும் அகற்றிவிட்டு தமிழர்களை குடியமர்த்தினால், ஏற்கனவே விடுதலைப்புலிகள் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை ஏந்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால் தான், காலதாமதமாவதாக இலங்கை அரசு தரப்பில் கூறப்படுகிறது.

திருமாவை கிண்டலடித்த ராஜபக்ஷே தமிழக எம்.பி.க்கள் குழுவுடன் இலங்கைக்கு சென்றிருந்த திருமாவளவனை ராஜபக்ஷே கிண்டலடித்தார். இலங்கை சென்றிருந்த தமிழ் எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெற்றிருந்தார். ஏற்கனவே புலித்தலைவர் பிரபாகரனை சந்தித்தவர்கள் பட்டியலில் திருமாவளவன் இருந்ததால், அவர் மீது ராஜபக்ஷே தனிக்கவனம் செலுத்தினார். தமிழக எம்.பி.க்கள் குழுவை வரவேற்ற ராஜபக்ஷே, திருமாவளவனை மட்டும் கட்டித் தழுவினார். அத்துடன் நீங்கள் பிரபாகரனோடு தொடர்ந்து இருந்திருந்தால் நீங்களும் அழிந்திருப்பீர்கள். நல்ல வேளையாக தப்பித்துக்கொண்டீர்கள் என கிண்டலடித்தார் ராஜபக்ஷே.

இதைக்கேட்ட உடனிருந்த எம்.பி.இக்கள், என்னமோ நடக்கப்போகிறது என அச்சமடைந்தனர். ஆனால், திருமாவளவன், ராஜபக்ஷேவின் கேலி பேச்சுக்கு பதிலடி கொடுக்காமல் சிரித்துக் கொண்டே அமைதி காத்தது மற்ற எம்.பி.இக்களுக்கு வியப்பாக இருந்தது.

அடையாள அட்டை இல்லாததால் பெரும் பிரச்னை இலங்கையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் முகாம்களில், அடையாள அட்டை இல்லாதவர்கள் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளனர். இலங்கையில் குடியுரிமை பெற்றவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட போரின்போது, விடுதலைப் புலிகள், ராணுவ தாக்குதலில் இருந்து தப்பிக்க பொது மக்களை கேடயமாக பயன்படுத்தி வந்தனர். அப்போது, போர் முனையிலிருந்து தப்பிச் சென்றுவிடாதபடி தமிழர்களின் அடையாள அட்டையை விடுதலைப் புலிகள் பறித்து வைத்திருந்தனர்.

தற்போது, முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள பல தமிழர்களுக்கு அடையாள அட்டை கிடையாது. அதற்காக அவர்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு புகைப்படம் எடுத்து, சேகரிக்கப்படும் முகவரியை அந்தந்த மாவட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட அடையாள அட்டை நகலோடு ஒப்பிட்டு பார்க்கின்றனர். தவறான தகவலை கூறும் தமிழர்கள், விடுதலைப் புலிகளாக இருப்பார்களோ என சிங்கள ராணுவத்தினர் பிடித்துச் சென்று தனியாக அடைத்து வைக்கின்றனர். அவ்வாறு 12 ஆயிரம் பேரை பிடித்து தனியாக அடைத்து வைத்துள்ளனர். இதுபோன்ற சம்பவத்தால் தான் முகாமில் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக