29 செப்டம்பர், 2009

மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான ரயில் சேவை மாற்றம்
மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான பாடும்மீன் மற்றும் உதயதேவி கடுகதி ரயில் சேவைகளில் நாளை ஒக்டோபர் முதலாம் திகதி வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத தினைக்களம் அறிவித்துள்ளது.

இம் மாற்றத்தின் பிரகாரம் பாடும்மீன் நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரதம் தினமும் மாலை 7.15 ற்கு கொழும்புக் கோட்டையிலிருந்து புறப்டப்டு மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தைச் சென்றடையும்

மட்டக்களப்பிலிருந்து இரவு 8.15 ற்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 ற்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையததைச் சென்றடையும் வகையில் இரவு நேர ரயிலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

உதயதேவி நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவையைப் பொறுத்த வரை காலை 8.45 ற்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு மாலை 4.40 ற்கு மட்டக்களப்பைச் சென்றடையும்; .

அதே வேளை மட்டக்களப்பிலிருந்து காலை 7.45 ற்கு புறப்பட்டு மாலை 4.10 ற்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையததைச் சென்றடையும் வகையில் பகல் நேர ரயிலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் பிரதம அதிபரான அருனாசலம் சிவனேசராஜா தெரிவிக்கின்றார்

புதிய மாற்றத்தின் கீழ் இது வரை காலமும் இரவு நேர ரயிலில் இனைக்கப்பட்டிருந்த படுக்கை வசதிப் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக