பாதுகாப்பு அச்சுறுத்தலினால் இரு மணி நேரத்தை விமான நிலையத்தில் கழித்த சந்திரிகா-சென்னை இடைத்தங்கலும் ரத்து
முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, சிறிது நேரம் சென்னையில் தங்கியிருப்பதென எடுத்த தீர்மானத்தை இடைநடுவில் கைவிட்டு கொழும்பு திரும்பியுள்ளார். அவர் கொழும்புக்கு திரும்புவதற்கு முன் வெள்ளிக்கிழமை மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறாமல் விமான நிலையத்திற்குள்ளேயே சுமார் 2 மணித்தியாலங்கள் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கேரளாவிற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்ற திருமதி குமாரதுங்க கொழும்பு திரும்பும் வழியில் சென்னை ஹோட்டல் ஒன்றில் சிறிது நேரம் தங்கியிருக்க தீர்மானித்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கருகிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவர் தங்குவதற்கு அறையும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டிருந்தது என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் வெள்ளிக்கிழமை காலை 10.40 அளவில் சென்னை விமான நிலையத்தில் சென்றிறங்கிய திருமதி குமாரதுங்கவை பாதுகாப்பு முகவர் நிலைய அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை.
ஈழ ஆதரவுக் குழுவினர் திட்டமிட்டிருந்த எதிர்ப்பு ஆர்பாட்டம் தடை செய்யப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களும் அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டார்கள். இதனையடுத்து பிற்பகல் 1.30 அளவில் அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்பு திரும்பினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக