25 செப்டம்பர், 2009

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் 27ஆம் திகதி மக்கள் பேரலை மாநாடு - ஐ.தே.க.

பொதுத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் ஊழல் மோசடிகளை எதிர்த்தும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் "மக்கள் பேரலை' மாநாடு நடைபெறவுள்ளது.

காலை 9.30 மணிக்கு கொழும்பு விஹாரமாதேவி பூங்கா திறந்த வெளியரங்கில் நடைபெறும் மாநாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் பங்கேற்பார்கள் என்று ஐ.தே.க. வின் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அலரி மாளிகை இன்று அன்னதான மடமாக மாறி விட்டது. மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வீண் விரயம் செய்யப்படுகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக