ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவருடைய பாரியார் கூறியதை முற்றாக மறுத்துள்ள இராணுவப் பேச்சாளர், சரத் பொன்சேகாவின் உடல்நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கொழும்பு தேசிய வைத்தியசாலையைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர் ஒருவர், ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை குறித்து இன்று பரிசோதனை செய்தார். அவருடன் கடற்படையைச் சேர்ந்த விசேட வைத்தியர் ஒருவரும் மேலும் ஒரு வைத்தியரும் அங்கிருந்தனர்.
திருமதி பொன்சேகா குறிப்பிடுவதுபோல அவருடைய உடல்நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்தனர். இவ்வாறிருக்கையில், மக்கள் மத்தியில் வேறு விதமாகப் பிரசாரங்கள் மேற்கொள்வதைச் சம்பந்தப்பட்டவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உரிய வைத்திய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க பொய் கூறுகிறார் என திருமதி பொன்சேகா இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக