30 நவம்பர், 2010

பண்டிகைக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, விலையேற்றத்தை தடுப்பதில் அரசு தீவிர கவனம்


பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டு க்குள் வைத்திருப்பது தொடர்பில் தமது நேரடி கவனத்தைச் செலுத்தப் போவதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரி வித்தார்.

அதேவேளை பிரேஸிலில் இருந்து சீனி இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் இரண்டாவது தடவையாகவும் வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சராகப் பொறுப்பேற்று ள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ; மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் தேவையான சகல அத்தியா வசியப் பொருட்க ளையும் பண்டிகைக் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விநியோ கிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

போதுமானளவில் அரிசி கையிருப்பில் உள்ளதால் தேவைப்படும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை இந்தியா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானித்துள் ளதாகத் தெரிவித்தார்.

அனைத்துப் பொருட்களையும் கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த அவர், பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடின்றி பொருட்களை கொள்வனவு செய்வதும் உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, பிரேஸில் தூதுவர் பெட்ரோ ஹென்றிலொப்ஸ்சுக்கும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வுக்குமிடையிலான சந்திப்பொன்று வர்த் தக நுகர்வோர் அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பிரேஸிலில் இருந்து சீனியை குறைந்த விலையில் இறக்குமதி செய்வதற்கு உதவுவதாக பிரேஸில் தூதுவர் தெரி வித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி யில் அரசாங்கம் தலையிட்டு நேரடிக் கொள்வனவை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இடைத்தரகர் களின் தலையீடின்றி பொருட்களை கொள்வனவு செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப் படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ராஜதந்திர ரீதியில் இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்ட அமைச்சர் கறுப்புச் சந்தை வர்த்தகர்களுக்கு எதிராக செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக