30 நவம்பர், 2010

உலகின் தலைசிறந்த நாடாக இலங்கையை மேம்படுத்தும் பட்ஜெட் பிரதமர்


இந்த வரவு-செலவுத் திட்டத்தை முன்னெடுப்பதினூடாக எமது நாடு உலகில் தலை சிறந்த நாடாக அபிவிருத்தி அடைவதுடன் நாட்டில் புத்தெழுச்சியும் ஏற்படும் என்று பிரதமர் தி. மு. ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவி த்தார். வரவு-செலவுத் திட்டம் மீதான ஆறாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமர் தனதுரையில் மேலும் கூறியதாவது;

மக்களை ஏமாற்றி ஆட்சி பீடமேறி வந்த ஐ.தே.க. நாட்டை அபிவிருத்தி செய்ய எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த வரவு-செலவுத் திட்டத்தினூடாக நாட்டை பொருளாதார ரீதியில் மேம்படுத்தவும் உலகில் சிறந்த நாடாக முன்னேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

யுத்தம் காரணமாக சேதமடைந்த வட பகுதியை அபிவிருத்தி செய்ய பெரு மளவு நிதி செலவிடப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு வீதிகள், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் என்பன மீளமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக வேறு தேவைகளுக்கு ஒதுக்கும் காசு குறைவடைகிறது.

இந்த வரவு-செலவுத் திட்டத்தினூடாக கிராமங்களை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வறியோருக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு கமநெகும, மகநெகும திட்டங்களுக் கும் கூடுதல் நிதி வழங்கப்பட்டு ள்ளது. பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கவும் கர்ப்பிணிகளுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளைக்காரர்கள் இங்கு கொண்டு வந்த பாண், பட்டர், சீனி போன்ற பல்வேறுபட்ட பொருட்களை ஓரம்கட்டி உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். நாம் ஊடக வியலாளர்களின் சுதந்திர செயற்பாடுகளுக்கு இடையூறு செய்ததாக கடந்த காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் ஊடக வியலாளர்கள் கெளரவமாகவும் சுதந்திர மாகவும் செயற்படக்கூடிய சூழலை ஏற் படுத்தவும் ஊடகத்துறையை மேம்படுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் படி ஊடகவியலாளர்களுக்கு புகைப்பட கருவி, கணனி என்பன கொள் வனவு செய்ய 50 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது.

நாட்டில் 12 இலட்சம் அரச ஊழியர்களும் 6 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோரும் உள்ளனர். அரச ஊழியர்களுக்கு இப்போது 5 வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் 25 ஆயிரம் ரூபா கூட வழங்க நாம் தயாராக உள் ளோம். அதனால் வீணாக அரச ஊழி யர்களை தூண்டிவிட வேண்டாமென்று எதிர்க்கட்சியை கோருகிறோம்.

கடந்த காலத்தில் பாகிஸ்தான் எமக்கு பலவகையிலும் உதவியது. பாகிஸ்தான் ஜனாதிபதி இங்கு வருகை தந்திருப்பது குறித்து பெருமையடைகிறோம். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எதிர்க்கட்சியில் உள்ள இளம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக