15 டிசம்பர், 2009

ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவமே பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள காரணம்

படைவீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் இராணுவத் தளபதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் சரியான தலைமைத்துவமும், வழிகாட்டலுமே இந்த நாட்டில் நிலவிய 30 வருடகால பயங்கரவாதத்தை குறுகிய காலத்திற்குள் வெற்றிகொள்ள காரணம் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

சரியான அரசியல் தலைமைத்துவம் உரிய நேரத்தில் வழங்கப்படாவிடின் இந்த யுத்தத்தில் வெற்றிக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவி த்தார்.

பாரிய வெற்றியை பெற்றுக்கொடுத்த படை வீரர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுப்பதாக தெரிவித்த இராணுவத் தளபதி இராணுவத்தை காட்டிக் கொடுத்துள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது போன்ற குற்றச்சாட்டுகளினால் படைவீரர்கள் தைரியத்தை இழக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் போது களமுனையில் சேவையாற்றிய சகல பிரிவுகளையும் சேர்ந்த இராணுவ அதிகாரிகளினதும், படை வீரர்களினதும் சேவைகளைப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கும் வைபவம் கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது.

அந்நிகழ்வில் மேலும் உரையாற்றுகையில்,

ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரத்ன போன்ற அதிகாரிகள் வடமராட்சி நடவடிக்கையின்போது அன்று புலிகளை இதேபோன்று பலவீனமடைய செய்திருந்தனர். ஆனால் அன்றிருந்த பலவீனமான அரசியல் தலைமைத்துவத்தினால் பெற்ற வெற்றிகள் யாவும் தலைகீழாக மாறியது.

அதேபோன்று வெளிநாட்டு தூதுவர் களின் அழுத்தங்கள் காரணமாக பல திறமையு ள்ள இராணுவ உயர் அதிகாரிகள் பலர் இட மாற்றம செய்யப்பட்டனர். அதேபோன்று அன்று செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கொல்லப்பட்டதுடன், அவதிப்பட்டனர்.

மனிதாபிமான நடவடிக்கை முடுக்கிவிடப் பட்ட காலப்பகுதியில் இந்த வெற்றிகரமான நடவடிக் கைகளைத் தடுப்பதற்கு வெளிநாட்டு சக்திகளும், நாசகார சக்திகளும் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் சரியான அரசியல் தலைமைத்துவம் மூலமாக முழு நாட்டையும் ஒரே கொடியின் கீழ் கொண்டுவர முடிந்தது.

அரசியல் தலைமைத்துவம், மக்கள் சக்தி, இராணுவ பலம் ஆகியவற்றின் மூலமே எதுவித அழுத்தங்களுக்கும் தலைசாய்க்காது மனிதாபிமான நடவடி க்கை வெற்றிகொள்ளப்பட்டது. அரசியல் யாப்பு பிரகாரம் யுத்தத்தையோ அல்லது சமாதானத்தையோ பிரகடனப்படுத்தும் அதிகாரம் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கே உள்ளது.

சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமல் பயங்கரவாதத்தை ஒழித்திருக்க முடியாது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். எனவே தான் இராணுவத்தின் 60 வது ஆண்டு நிறைவு விழாவின்போது நான் கூறியிருந்தேன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும் என்று கூறினார்.

உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதத்தை முழுமையாக அழித்த வீரமிக்க படைவீரர்களுக்கு கட்டளைத் தளபதியாக பணிபுரிய கிடைத்தது குறித்து நான் பெருமையடைகிறேன்.

இலங்கை இராணுவத்தை உலகிலேயே முதல் தர இராணுவமாக உருவாக்குவதே எனது ஒரே நோக்கமாகும். இதற்குத் தேவையான பயிற்சி, மன உறுதி மேம்படுத்தல் மற்றும் நலன்புரி வழங்கப்படும். யுத்தம் தற்பொழுது முடிவுற்றுள்ளது. தாய் நாட்டிற்காக நாங்கள் பெற்ற வெற்றியின் பொறுப்பு இன்னும் முடியவில்லை. மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் மீட்டெடுக்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது எமது பொறுப்பாகும்.

இந்த வெற்றிக்காக எமக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கிய கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நிகழ்வில் இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்க, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 65 வீத வாக்குகள் பெற்று வெற்றியீட்டுவார்

தேசத்துரோகிகளோடு இணைந்துள்ள சரத் பொன்சேகாவைத்தோற்கடித்து 65 வீத வாக்குகள் பெற்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ வெற்றிபெறுவது உறுதியென அமைச்சர் ராஜிதசேனாரத்ன தெரிவித்தார்.

அதன் பின்னர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபெரும்பான்மையைப் பெற்று ஜே. ஆரின் அரசியலைஇல்லாதொழித்து நாட்டை சுபீட்சப் பாதையில் ஜனாதிபதிஇட்டுச் செல்வது உறுதியெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு எதிரான போட்டி சாதாரண போட்டியல்ல. அரசியல்வைராக்கியத்துடன் தேசத்துரோகிகள் மேற்கொள்ளும் போட்டி என்பதை மக்கள்உணர்ந்து செயற்படுவது அவசியமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடளாவிய அரச தொழிற்சங்கங் களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை சந்தித்த நிகழ்வொன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அமைச்சர்இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-

பயங்கரவாதத்தின் வெற்றியை எவரும் தனித்து உரிமை கோரமுடியாது. அதுஇணைந்த செயற்பாட்டின் மூலம் கிடைத்த வெற்றி. சரத் பொன்சேகாஇராணுவத்தளபதி மட்டுமே. நாட்டின் முப்படைத் தளபதியாகவிருந்து ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ வழங்கிய சிறப் பான தலைமைத்துவமே பயங்கரவாதத்திற்கெதிரான வரலாற்று வெற்றி.

இன்று வெற்றி உரிமை கோரும் ஜெனரல்களும் படைகளும் ஆயுதங்க ளும்இதற்கு முன்னர் இந்த நாட்டை ஆண்ட தலை வர்களின் காலத்திலும் இருந்ததைஎவரும் மறந்து விடக்கூ¡டது. எத்தகைய தலைவர்களாலும் செய்ய முடியாததைஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார். இந்த நாட்டின் தேசத்துரோகிகள்என்போருடனேயே இன்று பொன்சேகா இணைந்துள்ளார

நாட்டையும் படையினரையும் பாதுகாக்கும் பொறு

ப்பு என்னுடையது

பிரதான தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பில்ஜனாதிபதி

நாட்டிலுள்ள சகல பிரதான தொழிற்சங்கங் களும் எதிர்வரும்ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத்தமது பூரண ஆதரவினை வழங்குவதாக உறுதி யளித்தன.

சகல துறைகளையும் சார்ந்த பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்றுஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்தனர். இந்நிகழ்வின்போதே சகல தொழிற்சங்கங்களினதும் தவைர்கள் தாம் ஜனாதிபதியைஆதரிப்பதாகவும் அவரது வெற்றிக்காக உழைப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வு நேற்றுக்காலை அலரிமாளி கையில் நடைபெற்றதுடன் அமைச்சர்கள்அதாவுத செனவிரத்ன, ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், மேல்மாகாண ஆளுனர் அலவி மெளலானா ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள்பலரும் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ,

நாட்டின் தொழிலாளி வர்க்கம் எம் முடைனேயே உள்ளது. தொழிலாளர்களின்ஆதரவு இருக்கும் வரை எமது வெற்றி உறுதியே. மஹிந்த சிந்தனை மூலம்தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றியுள்ளோம்.

ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பிளவுபடுத்தி துண்டாடுவதற்கு உடன்படிக்கைமேற்கொண்டார். நாம் தாய்நாட்டை மீட்டு அதனை ஐக்கியப்படுத்தியுள்ளோம். நாம் இந்நடவடிக்கைகளை நேர்மையானதாக முன்னெடுத்தோம்.

நாட்டை மீட்ட படையினருக்கு எதிராகப் பலர் விமர்சிக்கின்றனர். படையினருக்குஎதிராக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோது அதற்கு எதிராக நாம்குரல்கொடுத்தோம். படையினரை அகெளரவப்படுத்துவதற்கு நாம் ஒருபோதும்இடமளிக்கமாட்டோம்.

தாய் நாட்டையோ நாட்டை மீட்டுத்தந்த படையிரையோ காட்டிக்கொடுக்கஎவராலும் முடியாது. நாட்டின் தலைவர் என்றவகையில் நாட்டையும்படையினரையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்குள்ளது. அதேபோன்றுசந்தர்ப்பவாதியாகி படையினரைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என நான்கேட்டுக்கொள்கிறேன்.

எமது இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதுஅவர்கள் இரட்சணிய சேனையில் பணிபுரியக்கூட தகுதியில்லாதவர்களென்றும்ஆணையிறவு என்று பாமன் கடைக்கும், கிளிநொச்சி என்று மதவாச்சிக்கும்சென்றதாகவும் பலர் பரிகாசம் செய்ததை யாரும் மறந்து விடமுடியாது.

சமாதானம் மூலம் அபிவிருத்தியையும் அபிவிருத்தியின் மூலம்சமாதானத்தையும் ஈட்ட முடியும் என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான். அந்தநோக்கத்தில் செயற்பட்டே சகல மக்களும் இணைந்து வாழும் தாய்நாட்டைக்கட்டியெழுப்பியுள்ளோம். இதில் நாம் பெருமையடைய முடிகிறது.

யுத்தத்திற்கு முகங்கொடுத்து நாட்டைப் பாதுகாத்ததுடன் நாட்டில் பாரியஅபிவிருத்திகளையும் எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ளது. ஒரே சமயத்தில்ஐந்து துறைமுகங்களின் நிர்மாணம், மின் உற்பத்தித் திட்டங்கள், விமானநிலையம், நீர்ப்பாசனத்திட்டங்கள் என பல்வேறு அபிவிருத்திகளை எம்மால்மேற்கொள்ள முடிந்துள்ளது.

கிராமிய அபிவிருத்தித் திட்டமானகமநெகுமமற்றும்மகநெகுமபாதைஅபிவிருத்தித்திட்டங்களையும் எம்மால் வெற்றிகரமாக முன்னெடுக்கமுடிந்துள்ளது. அத்துடன் தொழிலாளர் வர்க்கத்தினரின் உரிமைகளை நாம்ஒருபோதும் நிராகரித்ததில்லை.

இந்த வகையில் அரச ஊழியர்களின் தொகையை 6 இலட்சத்திலிருந்து 12 இலட்சமாக எம்மால் அதிகரிக்க முடிந்துள்ளதுடன் நட்புறவு நாடுகளுடன்மேற்கொண்ட நடிவடிக்கைகளுக்கமைய எமது பொருளாதாரத்தையும்கட்டியெழுப்ப முடிந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் எமக்கு அச்சுறுத்தல் விடுக்கும் போதும், எரிபொருளின்விலை 145 டொலராகி நாணயத்தின் பெறுமதி அதிகரித்த போதும் நாம் அவற்றைமுறையாக நிர்வகித்தோம். நாம் மத்திய கிழக்கோடு தொடர்பு கொண்டுமேற்கொண்ட நடவடிக்கைகளினால் எமது பொருளாதாரத்தைப் பாதுகாக்கமுடிந்தது.

நாம் தொழிலாளர்கள் உரிமைகளைத் தொடர்ந்தும் பாதுகாத்து வருகிறோம். வங்கிகள் வீழ்ச்சியடைந்து கைத்தொழில் பேட்டைகள் மூடப்படும் நிலைவந்தபோதும் நாம் எமது தொழிலாளர்களைப் பாதுகாத்தோம்.

அவதூறுகள், பொய்ப்பிரசாரங்கள் சேறுபூசுதல்கள் இடம்பெறுகின்ற போதும்எமது கைகள் சுத்தமானவை. நாம் உங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தலில் தொழிலாளிவர்க்கம் வழங்கிய ஆதரவினைப் போல்எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பூரண ஆதரவினை வழங்குவீர்களென்றநம்பிக்கை எனக்குண்டு எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்றைய இந்நிகழ்வில் 5,000 ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள்கலந்து கொண்டதுடன் தொழிற்சங்கத் தலைவர்களான லெஸ்லி தேவேந்தர, பியதாச போன்றோரும் உரையாற்றினர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக