மையோன் முஸ்தபா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானம் | |
உயர் கல்வித் துறை பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான இவர் ,அக்கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்து பிரதி உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகின்றார்.. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இன்று தனது மாவட்டத்திலுள்ள ஆதரவாளர்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை பெறவிருக்கின்றார்.. அவரது சாய்ந்தமருது இல்லத்தில் இது தொடர்பான சந்திபொன்று நடைபெறவிருப்பதாகவும் ,இச்சந்திப்பின் போது தனது இன்றைய நிலைப்பாடு குறித்து மையோன் முஸ்தபா விளக்கமளிப்பார் என்றும் தெரியவருகின்றது.. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என எடுத்துள்ள தீர்மானத்தின் பேரில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக தனது பிரதி அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.. தனக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தாலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தன்னால் சேவையாற்ற முடியவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார் |
13 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக