27 நவம்பர், 2009

புலிகளின் சீமான் கனடாவில் இருந்து நாடு கடத்தல்!

Filmmaker Sebastian Seeman seen here with Tamil Tiger leader Vellupillai Prabhakaran in a file photo from a Sri Lankan government website.

இலங்கையில் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டதை அடுத்து கைவிடப்பட்ட நிலையில் உள்ள புலிகள் இயக்கத்தை புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி முக்கியஸ்தர்கள் பண வருவாயை நோக்காக கொண்டு அதை தொடர்ந்தும் செயற்படுத்த முனைப்பு கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் சீமானை அழைத்து அவர் மூலம் செத்துப்போன புலிகளுக்கு உயிரூட்டும் முயற்சிக்கு கனேடிய அரசு உடனடியாக ஆப்பு வைத்துவிட்டதாக கனேடிய பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்த மக்களை ஏமாற்றி பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று போலி பரப்புரை செய்யும் முயற்சியில் இறங்கியிருந்த டைரக்டர் சீமான் கனேடிய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டதாக கனடாவில் இருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கனேடிய தமிழர்களிடம் பணவசூலிப்பு பலாத்காரமாக புலிகளால் மேற்கொண்டுவரப்பட்டதை நன்கு அறிந்து கொண்ட கனேடிய அரசு கனேடிய தமிழ்மக்கள் புலிகளால் மேலும் தொந்தரவுக்கு உள்ளாவதில் இருந்து காப்பாற்றும் முகமாகவே மேற்படி சீமானின் நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக கனேடிய பாதுகாப்புதுறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

செத்துபோன பிரபாகரனை வைத்து பண பிழைப்பு நடத்தலாம் என்ற சீமானின் கனவும் கனேடிய புலி பிரமுகர்களின் கனவும் கனேடிய அரசினால் துறைத்தெறியப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக