26 நவம்பர், 2009

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை தங்கம் கொள்வனவு



நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை 10 தொன் தங்கம் கொள்வனவு செய்துள்ளது. இந்தத் தகவலை சர்வதேச நாணய நிதியம் வாஷிங்டனில் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கிக்கு இந்தத் தங்கங்கள், 375 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

உலக பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொள்ளவும், வருமானத்துறையில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவுமே இந்த தங்கக் கொள்வனவு இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்று 1170 டொலர்களாக அதிகரித்துள்ளது.

அதேவேளை இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த இலங்கை மத்திய வங்கி, தங்கக் கொள்வனவு என்ற விடயத்தை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக