யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு 28 முதல் ஆட்சேர்ப்பு
யாழ். குடநாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கினைப் பேணி, சமூக முறைக்கேடுகளைத் தவிர்க்கும் முகமாகவும் சிவில் நிர்வாகத்தை ஒழுங்குற மேற்கொள்ளக்கூடிய வகையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதற்கு இணங்க யாழ். குடாநாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு யாழ். குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளது.
இதன் பிரகாரம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் (ஆண்/பெண்), சாரதிகள் மற்றும் உதவிப் பொலிஸ் அதிகாரி (எஸ்.ஐ.) ஆகிய பதவிகளுக்கே ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
யாழ். குடாநாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணி சமூக மட்டத்தில் நிலவக் கூடிய சீர்கேடுகளை அகற்றும் முகமாக மேற்படி வாய்ப்பினை ஒரு தொழிலாக மட்டுமன்றி ஓர் உன்னத சமூகக் கடமையாகக் கருதி இப்பதவிகளில் இணைந்து கொள்வதற்கு தகுதியானவர்கள் முன்வர வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்படி பதவிகளில் இணைந்து கொள்ளவிரும்புவர்கள் அந்தந்த பிரிவுகளில் உள்ள பிரதேச செயலாளர் உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளில் உரிய விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக