28 செப்டம்பர், 2009

நாடுகளின் உள் விவகாரங்களில் ஐ.நா சபை தலையிடக்கூடாது-64 ஆவது பொதுக்கூட்டத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க உரை


ஐக்கிய நாடுகள் சபை எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது. ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கூடாது என கூறும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2(7) சரத்தை மதித்து நடக்க வேண்டியது அவசியமாகும். பயங்கரவாதம் தேசிய பாதுகாப்புக்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாகவே அமையும். பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்துள்ளமை யை உலக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதன்பெறுபேறுகள் இலங்கை மக்களுக்கு மட்டமல்லாது சமாதானத்தை விரும்பும் சகலருக்கும் கிடைத்த வெற்றியாகும். என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்துடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடிமர்த்துவதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும். இடம்பெயர்ந்தவர்களுடன் இணைந்து புலிகளும் முகாம்களில் உள்ளனர். அவர்களை மக்களுடன் இணைந்திருப்பதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர் சொன்னார். ஐக்கிய நாடுகள் சபையின் 64ஆவது பொதுச் சபைக்கூட்டத்தில் நேற்று முன்தினம் இலங்கையின் சார்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் 63 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியதன் பின்னர் இலங்கையில் பல்வேறு வேறுபாடுகள் இடம்பெற்றுள்ளன. எனது நாடு தொடர்பில் புதிய எதிர்ப்பார்ப்புடனேயே இந்த வருடத்தில் சபையில் உரையாற்றுகின்றேன். ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தலையிடக்கூடாது எனக் கூறும் ஐக்கியநாடுகள் சாஸத்தின் 2 (7) சரத்தை மதித்து நடத்த வேண்டும். பல்லின தன்மை என்பது, சக்திவாய்ந்த நாடுகளின் சிறுபான்மை இனத்தின் கோரிக்கைகளை செவிசாய்ப்பது மட்டுமல்ல சக்தியற்ற பெரும்பான்மை இனத்தின் நலன்களை பாதுகாப்பதுமாகும்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது எனற ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2 (7) சரத்தில் பிரதிபலிக்கும் தடை அனுசரிக்கப்பட வேண்டியது என்பது தட்டிக்கழிக்க முடியாத ஒன்றாகும்.

இந்த சாசனம் எம்மை ஒன்றிணைப்பதால் அது எமது வழிகாட்டல் கருவியாக இருக்க வேண்டும். எவ்வேளையிலும் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை மதிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினதும் பாதுகாப்பு சபையினதும் சீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பல்லின தன்மையை பலப்படுத்துவது, ஜனநாயகம், வெளிப்படைத் தன்மை, ஆக்கசக்தி, பொறுப்புடைமை ஆகியவற்றை மேலும் ஜனநாயக ரீதியிலான ஐக்கிய நாடுகள் முறைமையில் ஊக்குவிப்பதே சீரமைப்பதன் குறிக்கோள் என்று இலங்கைத் தூதுக்குழு நம்புகிறது. ஜனாதிபதி ஒபாமா தெளிவாக எடுத்துக் கூறியது போன்று எதிர்காலத்தின் இன்றியமையாத அம்சங்களாக கருதப்படும் மேற்கூறப்பட்ட நான்கு அம்சங்களையும் கடைப்பிடிக்க தூண்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.

சர்வதேச பிரஜைகளினால் கொடூரமான பயங்கரவாதம் என்று இனங்காணப்பட்டன. எமது நாட்டில் 30 வருடங்களாக நிலவிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை நிறைவிற்கு கொண்டுவரப்பட்டதுடன் கடந்த மே மாதத்துடன் இலங்கையிலிருந்து பயங்கரவாதம் முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தேசிய பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாகவே அமையும். பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்துள்ளதை உலக மக்கள் ஏற்றுக்கொள்ளவார்கள் அதன் பெறுபேறு இலங்கை மக்களுக்கு மட்டுமல்லாது சமாதானத்தை விரும்புகின்ற சகல சர்வதேச மக்களுக்கு கிடைத்துள்ளது.மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் நீண்ட காலத்திற்கு சமாதானம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் வரையிலும் அதனை தொடர்ச்சியாக நிலையானதாக நிலைநாட்டுவது எமது முன்னிலையில் இருக்கின்ற சவாலாகும் என்றே எமக்கு தெரியும்.

பயங்கரவாதத்தை தோற்கடித்து எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை எம் முன்னால் நிலைநிறுத்திக்கொள்ளவேண்டும் அதற்காக எமக்கு ஒத்துழைப்பு நல்கிய உதவிய சகல நட்பு நாடுகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் எமது நோக்கம் மற்றும் முரண்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் மோதல்கள் நிறைவடைந்தததன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது உயர்மட்ட நபர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கீ மூன் ஆவார்.

இலங்கையில் ,இவ்வருடன் மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் புலிகளின் பிடியிலிருந்த வடக்கின் அப்பாவி பொதுமக்கள் அண்ணளவாக 290,000 பேரை மீட்டெடுத்தோம். மீட்டெடுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பாதுகாப்பு, கௌரவம், நிரந்தரமான மீளக்குடியமர்த்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருக்கின்றோம். தற்போது தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு மக்களுக்கு தேவையான நலன்புரி விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், சர்வதேச மற்றும் தேரிய ரீதியிலான சிவில் சமூகத்தினரிடமிருந்து கிøட்த்த ஒத்துழைப்பு காரணமாகவே இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்க முடிந்தது.

எம்முடன் அண்ணளவாக 57 உறுப்பினர்கள் இந்த நலன்புரி கிராமங்களில் தொடர்ச்சியாக சேவையாற்றிவருகின்றனர். நலன்புரி கிராமங்களில் வாழ்கின்றவர்களுக்கு உணவு மற்றும் தற்காலிக உறைவிடத்தை அமைத்துக்கொடுப்பது மட்டுமற்றி அவர்களுக்கு தேவையான ஏனைய வசதிகளான வங்கி,பாடசாலை,தபால் காரியாலயம் மற்றும் சுகாதார பாதுகாப்பு மத்திய நிலையம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. புலிகளினால் இல்லாதொழிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வியை மீண்டும் அந்த பிள்ளைகளுக்கே பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையும் இந்த முகாம்களிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. அங்கு பிள்ளைகளும் கல்வியை பயிலுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

அரசின் அபிலாஷை

சர்வதேச சமூகத்துடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்துவதேச அரசாங்கத்தின் அபிலாசையாகும் . சுனாமி அனர்த்தத்திற்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட மீள் குடியேற்றத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவமும் இருக்கின்றது. அதனால் மீள் குடியேற்றம் நேர்த்தியாக மற்றும் நிரந்தரமான பொறுப்புடன் செய்யவேண்டுமாயின் அதனை பலவந்தமான செய்யமுடியாது.

நடைமுறையில் இருக்கின்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட சகல மனிதாபிமான மூலதர்மத்திற்கு எதிராக புலிகளால் வடக்கில் சிவில் நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடிகள் ,பயன்படுத்த கூடாத வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன. காலத்தை சீரழிக்கின்ற மிகவும் நிதானமாக முன்னெடுக்கவேண்டிய கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மறுபுறத்தில் பல உயிர்களை இழந்து மக்கள் காப்பாற்றப்பட்ட போதிலும் பெருந்தொகையான புலிகள் இடம்பெயர்ந்தவர்களுடன் இணைந்து இருக்கின்றனர். அவர்களையும் இடம்பெயர்ந்துள்ளவர்களுடன் இருப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தில் இடமளிக்க கூடாது.மோதல்கள் நிறைவடைந்தத்தன் பின்னர் மீள் குடியமர்த்தல் ,அபிவிருத்தி மற்றும் அரசியல் ரீதியில் அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தல் மீள்குடியமர்த்தல் மற்றும் சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன எங்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றன.

வடக்கில் தேர்தல்

மோதல்கள் நிறைவடைந்த மூன்று மாதங்களுக்குள் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சகல பிரதேசங்களிலும் ஜனநாயகம் கட்டியெழுப்புவதற்கு தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டத்திட்டங்கள் தொடர்பில் சர்வதேச கொள்கைகளை முன்னெடுப்பதில் பொறுப்புடன் செயற்படுகின்றோம். அதேபோல கடந்த காலங்களில் நாம் பெற்றுக்கொண்ட அனுபவத்தை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலிகள் சிறுவர்களை தங்கள் அமைப்பில் போராளிகளாக இணைத்து கொண்டு அவர்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். பிள்ளை பருவத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தேசிய ரீதியில் மட்டுமல்லாது தனிப்பட்ட ரீதியிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். முன்னாள் சிறுவர் போராளிகளின் வாழ்க்கையை புதிதாக ஆரம்பிப்பதற்கு புனர்வாழ்வுக்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

புலிகளுக்கு புனர்வாழ்வு

ஐக்கிய நாடுகள் மற்றும் உதவிவழங்குவோரின் ஆதரவுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் மீண்டும் சிவில் சமூகத்தில் இணைந்து கொள்வதற்கு தேசிய திட்டங்கள் எம்மால் வகுக்கப்பட்டதுடன் அண்ணளவாக பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ள 10 ஆயிரம் புலி உறுப்பினர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் முதல் தடவையாக எமது மக்களின் மனித சக்தி, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இணைந்து பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. மீள் கட்டுமானத்திற்காக உதவி வழங்கும் நாடுகள் சர்வதேச அமைப்புகள் நிதி மற்றும் திட்டமிடல் ரீதியில் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

பல வருடங்களுக்கு பின்னர் கிழக்கின் நவோதயம் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வடக்கின் வசந்தம் எனும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளில் தொழில்களில் ஈடுபடுவதற்கு வசதிவாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. சீர்குலைந்திருந்த வீதி,நீர்நிலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் திருத்தியமைக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக வடக்கு பொருளாதார நடவடிக்கை நாட்டின் ஏனைய மாகாணங்களின் பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைந்துள்ளது. வடக்கில் பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் ,பாடசாலைகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீர்வுத்திட்டம் மோதல்கள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நீண்ட காலம் நிலைத்து நிற்ககூடிய விதத்தில் தீர்வுத்திட்டத்திற்கு சர்வக்கட்சி ஆலோசனை குழு சகல கட்சிகளின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டுள்ளது.இந்த இணக்கப்பாட்டுடன் ஏற்படுத்த போகும் தீர்வானது தேசிய ரீதியில் உருவாக்கப்பட்ட தீர்வாகவே அமையும். உலக மயமாக்கல் மூலமாக எம்முன்னிலையில் இருக்கின்ற சவால்கள் அதிகமானதாகும். அது ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்றது. இதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் தனித்தனியாக தலையிட்டு தீர்வு காண இயலாது. அதேபோல பயங்கரவாதம் சர்வதேச பொருளாதார பிரச்சினை,காலநிலை மாற்றத்தில் பெறுபோறுகள், உணவு மற்றும் மின்சக்தியின் பாதுகாப்பு போன்றவற்றில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.சார்க் அமைய நாடுகளில் அங்கத்துவம் பெறுகின்ற நாங்கள் இவ்வாறான பிரச்சினைக்கு வலய ரீதியில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அதேபோல புலி பயங்கவாதிகளின் பயங்கவாத குற்றச்செயல்கள் தேசிய எல்லையை மீறி சென்றிருந்தது. ஆயுத கடத்தல்கள் மட்டுமல்லது போதைப்பொருள் கடத்தல்களையும் அவ்வமைப்பினர் மேற்கொண்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. புலி பயங்கரவாதிகளினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான செயற்பõடுகளுக்கு சர்வதேச மட்டத்திலிருந்தே நிதி கிடைத்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது. புலிகளின் வெளிநாட்டு பிரஜைகள் என்று கூறிக்கொள்பவர்கள் புலிகளுக்கு ஆயுதங்களையும் நிதியையுமே திரட்டியுள்ளனர்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பினர் மூலமாக இவ்வாறான நடவடிக்கை இன்னமும் முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை எம்மால் மிகவும் நேர்த்தியான முறையில் அழிக்கப்பட்டுள்ளது . என்பதுடன் புலிகளின் சட்டவிரோதமான நடவடிக்கைகளை முற்றாக ஒழிப்பதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு நல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

புலிகள் கடந்த காலங்களில் கடல்மார்க்கமாக ஆயுதங்களை கடத்தியிருந்தனர் இது வலயநாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும். எனினும் ஆயுத கடத்தலை எமது கடற்படையினர் முற்றாக முறியடித்தது மட்டுமல்லாது ஆயுதங்களை ஏற்றிவந்த கப்பல்களையும் அழித்துள்ளனர். இது வெளிப்படையானது என்பதனால் கடலுக்கு சென்று கப்பல்களையும் ஏனைய இயந்திரங்களையும் சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஏற்ப எமது சட்டத்திட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு அவற்றை சர்வதேச ரீதியில் மேற்கொள்வதற்கான தேவையிருக்கின்றது.அபிவிருத்தியை நோக்காக கொண்ட எமது திட்டங்கள் 2015 ஆம் ஆண்டு வரையிலான தூர நோக்கத்தை கொண்டதாகும் அந்த இலக்கை எட்டுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக