19 மே, 2010

மலையகத்தில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய மாகாணத்தில் நேற்று நண்பகல் முதல் கடும் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய மாகாணத்தில் நுவரெலியா,கண்டி,மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகின்றது.

நுவரெலியா மாவட்டம் சாமிமலை பிரதேசத்தில் அப்கொட் மேற்பிரிவு தோட்டக் குடியிருப்பொன்று ஆற்று வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மழையினால் ஆறுகளும் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன் நீரேந்தும் பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களிலும் நீர் நிறையத் தொடங்கியுள்ளன.

சீரற்ற காலநிலையினால் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட ஏனையவர்கள் தமது தொழிலை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக