24 டிசம்பர், 2009

செவ்வாய்க்கு குரங்கை அனுப்ப ரஷ்யா திட்டம்

No Image



செவ்வாய் கிரகத்திற்கு ஒரு குரங்கை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அந்த குரங்குக்குத் துணையாக ஒரு ரோபோவும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த செவ்வாய் பயணத்தின் கால அளவு 520 நாட்களாகும்.

செவ்வாயில் மனிதன் வசிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாஇ முதன் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு ஒரு உயிரினத்தை அனுப்பி வைத்து ஆராயவுள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனம் ஒன்று கூறுகையில்இ செவ்வாய் கிரகத்திற்கு குரங்கு ஒன்றை அனுப்பி வைக்க ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக ரஷ்ய விண்வெளி ஆய்வு அகாடமியுடன் தொடர்பு கொண்டுள்ளோம்.

முன்பு நாங்கள்தான் ரஷ்ய விண்வெளி ஆய்வுக்குத் தேவையான குரங்குகளை சப்ளை செய்துள்ளோம். தற்போதும் நாங்களே செவ்வாய் செல்லவுள்ள குரங்கையும் சப்ளை செய்யவுள்ளோம்" என்றனர்.

முதலில் ஒரு குரங்கு மட்டும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து ஒரு ரோபோவும் அனுப்பி வைக்கப்படும். இந்த ரோபோ தான்இ குரங்குக்குத் துணையாக செவ்வாய் கிரகத்தில் இருக்கும்.

குரங்கைக் குளிப்பாட்டிஇ சாப்பாடு ஊட்டுவது வரை அனைத்தையும் இந்த ரோபோ பார்த்துக் கொள்ளுமாம். குரங்கும்இ ரோபோட்டும் 520 நாட்கள் செவ்வாயில் இருப்பார்கள்.

குரங்கைக் கவனித்துக் கொள்ளும் வகையிலான ரோபோ உருவாக்குவது கடினமான காரியமே அல்ல. உண்மையில் கஷ்டமான சமாச்சாரம் என்னவென்றால்இ குரங்குக்குஇ அந்த ரோபோவை பழக கற்றுக் கொடுப்பதுதான். ரோபோ எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரைவில் குரங்குக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


கலகமுவவில் ரயில் தரம் புரண்டதில் 20 பயணிகள் காயம்


No Image


கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற கல்கமுவ அருகில் ரயில் தடம் புரண்டதில் 20 பயணிகல் காயமடைந்துள்ளனர்.இதன் காரணமாக இன்று காலை யாழ் தேவி ரயில் சேவை தர்காலிகமாக மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது


இந்திய விசா நடைமுறையில் புதிய விதிமுறை

No Image


இந்தியாவுக்கு சென்று திரும்பும் வெளிநாட்டவர்கள்இ இரு மாதங்களுக்குள் அங்கு மீண்டும் செல்வதை தடுக்கும் வகையில்இ நீண்ட கால சுற்றுலா விசாக்களுக்கு இந்தியா கடுமையான விதிகளை கொண்டுவருகிறது.

விசாக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவே இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

முன்னைய விதிகளின்படி 5 முதல் 10 வருட கால விசாவை வைத்திருப்பவர்கள் 180 நாட்களுக்குள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும்.

வணிக மற்றும் தொழில் விசாக்களைப் பெறுவதற்கான கஸ்டமான நடைமுறைகளை தவிர்ப்பதற்கான குறுக்கு வழியாக இதனை பல வெளிநாட்டவர்கள்இ குறிப்பாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் பயன்படுத்துகின்றனர்.

இந்த மாற்றங்கள் சீரற்ற வகையில் பிரயோகிக்கப்படுவதாக கூறுகின்ற டெல்லிக்கான அமெரிக்கத் தூதரகம்இ தமது நாட்டவர்கள் பலரை இது பாதிக்கும் என்றும் கூறியுள்ளது .
மேலும் இங்கே தொடர்க...
மனித பேரவலங்கள் இடம்பெற்ற 10 நாடுகளின் இலங்கையும்:எம்.எஸ்.எஃப்
No Image

உலகளவில் பல பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின் போது மிகப்பெரிய மனித பேரவலங்கள் இடம்பெற்ற 10 நாடுகளின் பட்டியலை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு (எம்.எஸ்.எஃப்) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கையையும் அது பட்டியலிட்டுள்ளது. பாகிஸ்தான்இ சோமாலியாஇ ஆப்கானிஸ்தான்இ ஏமன்இ கொங்கோ ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன.

மோதல்களின் போது பொதுமக்கள் அவர்களுக்கான உயிர் காப்பு உதவிகளை பெறுவதில் இருந்து தடுக்கப்படுவது அதிகரித்து வருவதாக பிரான்ஸை தளமாகக் கொண்டு செயற்படும் எம்.எஸ்.எஃப் என்னும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இறுதிக்கட்டப் போரின் போதுஇ ஆயிரக்கணக்கான மக்கள் உதவிகள் துண்டிக்கப்பட்டும்இ மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பராமரிப்புடனும் பெரும் அவதிக்கு உள்ளானதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற வேளையில் அந்தப் பகுதிக்கு செல்ல தாம் அனுமதிக்கப்பட வில்லை என்றும்இ மோதல் வலயத்ததுக்கு வெளியேயே தாம் பணிசெய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார் அந்த அமைப்பைச் சேர்ந்த வனசா வான் ஸ்கோர். அதனால் தாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.



நான் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை:நீதிமன்றில் ராஜ் ராஜரட்னம்

No Image


தாம் எந்தவிதமான நிதி மோசடியிலும் ஈடுபடவில்லை என அமெரிக்கத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் அந்நாட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கெலொன் ஹெட்ஜ் நிறுவனத்தின் ஸ்தாபகரான ராஜ் ராஜட்னம் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜரட்னத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக அவர் நீதிமன்றில் ஆஜராகினார்.'நான் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை' என்ற ஒரே வசனத்தை மட்டுமே அவர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க வராலாற்றில் பங்கு பரிவர்த்னையில் இடம்பெற்ற மிகப் பெரிய மோசடி நடவடிக்கை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.பி.எம்.இ இன்டல்இ மெகன்ஸீ போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கையின் ஊடாக மோசடியான முறையில் ராஜ் ராஜரட்னம் உள்ளிட்ட சிலர் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை லாபமாக ஈட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

100 மில்லியன் ரூபா பிணைத் தொகை வழங்கினால் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள அதேவேளைஇ பிணைத் தொகையை குறைக்குமாறு ராஜ் ராஜரட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஜனாதிபதி தேர்தலில் இடம்பெயர்ந்தோர் தடையின்றி வாக்களிக்க ஏற்பாடு
No Image


மோதல் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமென சில தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு தாம் மீள்குடியேற்றப்பட்ட இடங்களிலும் வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு வவுனியாவிலும் வாக்களிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. கருணாநிதி தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களில் அதிகமானவர் களின் பெயர்கள் 2008 வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளதெனவும் அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்கான சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும் வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இடம்பெயர்ந்த மக்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கிராம சேவகர்களினூடாகப் பதியப்பட்டுள்ளதோடு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்ட வாக்காளர்கள் தேர்தலில் விண்ணப்பிப்பதற்காக (இன்று) 24 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளதோடு மேலும் பலர் இறுதி நேரத்தில் விண்ணப்பிக்கத் தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு வவுனியாவில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நலன்புரி முகாம்களில் உள்ள முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களுக்கு நேரடியாக வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கருணாநிதி கூறினார்.

தேசிய அடையாள அட்டை மற்றும் தற்காலிக அடையாள அட்டை என்பன வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கம் இளைஞர்இ யுவதிகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்ததாலும் தமிழ் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிய தாலும் பெரும்பாலான வன்னி மக்களுக்கு தமது அடையாள அட்டைகள்இ ஆவணங்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்களை இழக்க நேரிட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னி மக்கள் தமது சகல உடைமைகளையும் கைவிட்டு புலிகளிடம் இருந்து தப்பி ஓடி வந்தது தெரிந்ததே.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்குஇ கிழக்கு மாகாணங்களை முழுமையாக மீட்டதையடுத்து வடக்குஇ கிழக்கு மாகாண மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க முதற்தடவையாக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.



ஏற்றுமதி முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் யாழ்ப்பாணம் விஜயம்


No Image

ஏற்றுமதி முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வந்தார்.நேற்றுக் காலை யாழ்ப்பாணத்திற்க்கு வந்த அமைச்சரை சமூகசேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலாலி விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.

யாழ்ப்பாணம் வந்த அமைச்சருடனான குழுவினர் யாழ்ப்பாண அரச செயலகத்தில் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுடன் சந்திப்பு ஒன்றினை நடத்தினார். அமைச்சர் குழுவினருடன் இச்சந்திப்பில் யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம்இ சமூகசேவைகள்இ சமூகநலத்துறை அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாஇ கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பழங்கள் மரக்கறிகளை அறுவடைக்குப்பின் எவ்வாறு பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகள்

அமைச்சர் குழுவினருடன் வருகைதந்த முதலீட்டு அபிவிருத்தி சபையின் நிர்வாக உத்தியோகத்தர் இந்திரகீர்த்தி விவசாயிகளுக்கு பழவகைள் மரக்கறிகள் என்பனவற்றை அறுவடைக்குப் பின் பழுதடையாமல் பாதுகாத்து எவ்வாறு சந்தைப்படுத்தலாம்இ அவற்றிற்கான வழிமுறைகள் என்பன தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

அத்துடன் விவசாயிகளுக்கு பழவகைள் குறிப்பாக மாம்பழங்களை பாதுகாத்து விற்பனைக்குக் கொண்டு செல்லக் கூடிய பிளாஸ்ரிக் பெட்டிகளும் வழங்கப்பட்டன. இவற்றினை முதலீட்டு அமைச்சர்இ சமூகசேவைகள் சமூகநலத்துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினர்.

படிப்படியான முன்னேற்றத்திற்கான உறுதி மொழி வழங்கப்பட்டது.

முதலீட்டு ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றும் போதுஇ "யாழ்ப்பாணம்இ கடந்த 30 ஆண்டு காலமாக யுத்தம் எனும் பிடிக்குள் இருந்து பல வசதிகள் வாய்ப்புக்கள் மற்றும் வளங்களை இழந்துள்ளது. இவற்றினை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை உடனே செய்ய முடியாது படிப்படியாகச் செய்ய வேண்டும்.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் பாதுகாப்பு நடைமுறைகள் இன்னமும் தளர்த்தப்படாமைக்கு காரணம் நடைபெற்று முடிந்த யுத்தம் நீண்ட காலம் நடைபெற்றது என்பதினாலாகும். பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தளர்த்துமிடத்து பாரிய விளைவுகள் ஏற்படலாம். ஆதனை காலப் போக்கில் சீர் செய்வோம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியது போல யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் முதல் தேவையாக மீளக்குடியேற்றம் உள்ளது. அதனை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர் அம்மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும். அவர்களுக்கு உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேற்கொள்ளக் கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

பல கம்பனிகள் தமது தொழிற்சாலைகளை யாழ்ப்பாணத்தில் நிறுவ ஆர்வமாகவுள்ளன. அவற்றில் யாழ். மாவட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுத் தரமுடியும். மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுமிடத்து அவர்களிடம் இருந்து வெளிநாட்டு ஏற்றுமதிக்கான நடவடிக்கைகளைப் பெற முடியும்.

யாழ்ப்பாணத்தின் பல பொருட்கள் இன்று வெளியிடங்களில் விரும்பப்படுவனவாக இருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் மாம்பழம்இ வாழைப்பழம்இ வெங்காயம்இ திராட்சை போன்றன வெளியிடங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

யாழ்ப்பாணத்தின் கடல் வளம் நீண்ட காலமாக சரியாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றது. கடல் வளத்தைச் சரியாகப் பயன்படுத்தும் இடத்து உள்நாட்டிலும்இ வெளிநாட்டிலும் சிறந்த சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கல்வித்துறையில் யாழ்.மாவட்டம் புகழ்பெற்றது. அதனை சுற்றுலாத்துறையிலும் சிறந்த நகரமாக மாற்றவேண்டும். இலங்கையின் சுற்றுலாத்துறை 50 வீத வளர்ச்சியைத் தற்போது கண்டுள்ளது.

அதனை யாழ்.மாவட்டத்திலும் முன்னேற்றினால் யாழ்.மாவட்ட மக்களை அந்நியச் செலவாணியைச் சம்பாதிக்க வைக்க முடியும் இதற்கான ஏற்பாடுகளை தேர்தலின் பின் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.


புலி முக்கியஸ்தர்களின் கொலைக்குற்றச்சாட்டு அரசாங்கம் இரு முகங்களை காட்டுகிறது-அனுர குமார திஸ்ஸாநாயக்க

No Image


வெளிநாட்டுக்கு ஒரு முகத்தைக் காட்டும் அரசாங்கம்இ உள்நாட்டில் மற்றொரு முகத்தைக் காட்டுகின்றது. இறுதிக் கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் எவரும் கொல்லப்படவில்லை என்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் இத்தகைய சம்பவங்களுக்குப் பொறுப்பாளியல்ல எனவும் ஐ.நா.வுக்கு அறிவித்துள்ள அரசாங்கம்இ ஜெனரல் சரத் பொன்சேகா படையினரைக் காட்டிக்கொடுத்து விட்டதாக உள்நாட்டில் பிரசாரம் செய்கின்றது என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம் இரண்டு முகங்களைக் காட்டி ஏமாற்ற முனைகின்றது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். கொழும்பு7இல் அமைந்துள்ள பொது வேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்..

இங்கு அவர் மேலும் கூறியதாவதுஇ .

நீதி விசாரணையற்ற கொலைகள் அல்லது தன்னிச்சையான மரண தண்டனைகள் தொடர்பான ஐ.நா.வின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்ரன் யுத்தத்தில் இறுதிக் கட்டத்தில் புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக வெளியான கருத்துகள் தொடர்பில் அரசாங்கத்திடம் விளக்கம் கோரி கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். இதற்கு மனித உரிமைகள் தொடர்பான அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் ஐ.நா.வின் விசேட பிரதிநிதி அனுப்பி வைத்துள்ள கடிதத்தை வாபஸ் பெற வேண்டுமென்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். .

இதனை விட தேர்தல்கள் நெருங்கும் போது இவ்வாறான குற்றச்சாட்டுகள் மேலும் அதிகரிக்கலாம். இறுதிக் கட்ட யுத்தத்தில் எவரும் கொல்லப்படவில்லை. ஜெனரல் பொன்சேகாவும் இதற்கு பொறுப்பாளியல்ல என்றும் அவர் பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசத்திற்கு இவ்வாறான முகத்தைக் காட்டும் அரசாங்கம் உள்நாட்டில் ஜெனரல் பொன்சேகாவை படையினரைக் காட்டிக் கொடுப்பவராகவும் தேசத் துரோகியாகவும் சித்தரிக்கின்றது. இது தான் அரசாங்கத்தின் இரண்டு பக்கங்களாகும். இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலுக்காக பொன்சேகா மீது சேறு பூசப்படுகின்றது. மேற்கத்திய நாடுகளின் கைப்பொம்மை என்றும் சதிகாரர் என்றும் அரசாங்கம் அவரை வர்ணிக்கின்றது. ஆனால்இ வெளிநாடுகளுக்கு வேறு விதமான பதில்களை அரசாங்கம் வழங்குகின்றது..

அப்படியானால் யார் தேசத் துரோகிகள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். உண்மையில் வெளிநாடுகளுக்கு ஒரு முகத்தையும் உள்நாட்டில் வேறொரு முகத்தையும் காட்டும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றது..

குரோத அரசியல்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நாமே பதவியில் அமர்த்தினோம். அவரோடு எமக்கு தனிப்பட்ட ரீதியில் குரோதம் கிடையாது. ஆனால்இ தனியொரு மனிதனும் அவரது குடும்பமும் நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நடத்துவதை அனுமதிக்க முடியாது. அதனை மாற்றி நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கே முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். .


தேர்தல் ஆணையாளர்.

பொது வேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைக்க வேண்டாமென தேர்தல்கள் ஆணையாளர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால்இ இவையெதனையும் அரசாங்கம் பொருட்படுத்துவதில்லை. ஜெனரலின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள்இ காரியாலயத்தில் கடமையாற்றுவோரின் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன..

காரியாலயத்தில் சேவையாற்றிய ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இதுவரையில் அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாதுள்ளது. .

மங்கள சமரவீர எம்.பி..

அரசாங்கத்தின் அடக்குமுறைஇ சர்வாதிகாரம்இ மனித உரிமை மீறல் போன்ற செயற்பாடுகளின் காரணமாகவே நாட்டின் கௌரவம் பாதிக்கப்பட்டதோடு எம்மவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் விசா வழங்குவதற்கும் மறுக்கப்பட்டது. இதனை மறைக்க அரசாங்கத்தின் அனைத்து பாவங்களையும் ஜெனரல் பொன்சேகா மீது சுமத்தி சேறு பூசுகின்றனர். இடம்பெயர்ந்த மக்களை அடிமைகளாக அடைத்து வைத்தமையும் இதற்குக் காரணமாக அமைந்தது என்று இங்கு கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்..

கடந்த மாதம் மட்டும் அலரி மாளிகையில் விருந்து வழங்குவதற்கு 1 கோடியே 30 இலட்சம் ரூபா செலவாகியுள்ளது. ஆனõல்இ அங்கு பரிமாறப்பட்ட மதுபான வகைகள் தொடர்பிலான ரசீது கிடைக்கவில்லை. கிடைத்ததும் தொகையை வெளியிடுகிறேன்..

அண்மையில் அநுராதபுரத்தில் நடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கூட்டத்தில் தன்னை விவசாயி என அடையாளப்படுத்திக் கொண்டவர் 3 இலட்சம் ரூபாவை வழங்கினார். இவர் உண்மையில் விவசாயி அல்ல. மதுபானசாலை உரிமையாளராவார்..

மதுவுக்கு முற்றுப்புள்ளி என்கிறது அரசாங்கம். ஆனால்இ மதுபானச் சாலை உரிமையாளர்களின் பணத்தில் சுகபோகங்களை அரசாங்கம் அனுபவிக்கின்றது. மகிந்த சிந்தனையில் உறுதியளிக்கப்பட்ட எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...
புலிகளுக்கு பணம் சேகரித்த மூவருக்கு எதிராக மெல்பேர்ன் மன்றில் வழக்கு





புலிகளுக்கு பணம் சேகரித்ததாக ஆரூ ரன் விநாயகமூர்த்தி சிவராஜா யாதவன் மற்றும் ஆறுமுகம் ரஜீவன் ஆகியோர் கடந்த 2007 இல் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை இன்று மெல்பேர்ன் உச்சநீதிமன்றில் விசாரிக்கப்ப ட்டுள்ளது.

இவர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டதும் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள் என மேற்படி மூவருக்குமாக வாதாடுகின்ற வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். நேற்றைய விவாதத்தின்போது இவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மூன்றாவது குற்றத்துக்காக எதுவித சான்றுகளும் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள இரு குற்றங்களை அதாவது பணமும் மின்சார உபகரணங்களும் சேகரித்ததாக கூறப்படுவதை விநாயகமூர்த்தி ஏற்றுக்கொள் ளக்கூடும் என வக்கீல் கூறியுள்ளார்.




இடம்பெயர்ந்தோர் தேர்தலில் தடையின்றி வாக்களிக்க சகல ஒழுங்குகளும் முன்னெடுப்பு

1 1ஃ2 இலட்சம் பேர் வாக்களிக்க முடியாதென்ற குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரிப்பு

மோதல் காரணமாக இடம் பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமென சில தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு தாம் மீள்குடியேற்றப்பட்ட இடங்களிலும் வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு வவுனியாவிலும் வாக்களிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக வவு னியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணை யாளர் ஏ. கருணாநிதி தெரிவித்தார்.

இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களில் அதிகமானவர் களின் பெயர்கள் 2008 வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளதெனவும் அவர் களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிப் பதற்கான சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும் வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இடம் பெயர்ந்த மக்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கிராம சேவகர்களினூடா கப் பதியப்பட்டுள்ளதோடு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்ட வாக் காளர்கள் தேர்தலில் விண்ணப்பிப்பதற்காக (இன்று) 24 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 12 ஆயி ரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பி த்துள்ளதோடு மேலும் பலர் இறுதி நேரத்தில் விண்ணப்பிக்கத் தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு வவுனியாவில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நலன்புரி முகாம்களில் உள்ள முல்லைத் தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களு க்கு நேரடியாக வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கருணாநிதி கூறினார்.

தேசிய அடையாள அட்டை மற்றும் தற்காலிக அடையாள அட்டை என்பன வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கம் இளைஞர்இ யுவதிகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்ததாலும் தமிழ் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிய தாலும் பெரும்பாலான வன்னி மக்களுக்கு தமது அடையாள அட்டைகள்இ ஆவணங்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்களை இழ க்க நேரிட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னி மக்கள் தமது சகல உடை மைகளையும் கைவிட்டு புலிகளிடம் இருந்து தப்பி ஓடி வந்தது தெரிந்ததே.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்குஇ கிழக்கு மாகாணங்களை முழுமையாக மீட்டதையடுத்து வடக்குஇ கிழக்கு மாகாண மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க முதற்தடவையாக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.




பிரபாவின் பெற்றோர்இ சூசையின் மனைவி ஆகியோரையும் இராணுவமே
காப்பாற்றியது





வெள்ளை கொடியுடன் வந்தவர்களை இராணுவம் சுட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டுவது துரோகமானது

(எம்.ஏ.அமீனுல்லாஇ கண்டி தினகரன் சுழற்சி நிருபர்)

இலங்கை இராணுவம் மிலேச்சத்தனமான இராணுவமல்ல. மிலேச்சத்தனம் இராணுவமாக இருந்தால் பிரபாகரனின் தாயார்இ சூசையின் மனைவிஇ ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் காப்பாற்றப்பட்டிருக்க மாட்டார்கள்.

இலங்கை இராணுவம் வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை கொலை செய்த இராணுவமாக உலகிற்கு காட்ட முனைவது துரோகத்தனமானதாகும். இதனை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். மிலேச்சத்தனமான இராணுவம் என்பதை உலக நாடுகளும் ஏற்றுக் கொள்ளாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் பல்கலைக்கழக கல்விமான்கள்இ டாக்டர்கள்இ சட்டத்தரணிகள்இ பெருந் தோட்ட முகாமையா ளர்கள்இ புத்திஜீவிகள் மத்தியில் செவ்வாய்க் கிழமை இரவு (22.12.2009) புத்திஜீவிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஜனாதிபதி தமதுரையில்இ நான் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை விட்டு விட்டு ஐக்கிய நாடுகள் சபைஇ மனித உரிமைகள் சபை ஆகியவற்றின் கேள்விகளுக்கு பதிலளிக் கும் கடமையில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்த நிலைக்கு முன்னாள் தளபதியே காரணமாகும்.

ஏன் இப்படி ஒரு துரோகத்தினை புரிந் தார் என்று தெரியவில்லை. இது ஜனா திபதித் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்க ¡கவா? அல்லது வெளிநாட்டு சக்திகளின் சதி காரணமாகவா? என தெரிய வில்லை. எந்த வெளிநாட்டு சக்திகளுக்கும் நாம் அடிபணியப் போவதில்லை.

யுத்தத்தினை நிறுத்துமாறு பல நாடுகள் கோரிக்கைவிடுத்தன. பல தலைவர்கள்இ ஜனாதிபதிகள்இ பிரதமர்கள் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார்கள்.

சில நாட்டு தலைவர்கள் சிலரை தூதுவிட் டார்கள். நான் உண்மையை தெளிவுபடுத் தினேன். சுதந்திரத்திற்கு முன் அவர்களது காலணித்துவ நாடுகளில் ஒன்றாக நாம் விளங் கினோம். ஆனால் இப்போது இலங்கை உங்கள் காலணித்துவ நாடு இல்லை என தெளிவாக கூறினேன்.

ஆனால் சாதாரண தமிழ் மக்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம் என பல தடவைகள் எமது இராணுவத்திற்கு உத்தரவிட்டேன்.

எமது இராணுவமும் எனது உத்தரவை ஏற்று சாதாரண மக்களைக் காப்பாற்றினார்கள். இதனை உலகம் அறியும்.

யுத்தத்திற்கு எதிராக யுத்தம் செய்யக்கூடிய பலத்தினையும்இ யுத்தத்தினை கொண்டு நடத்தக்கூடிய மனவலிமையையும் மன உறுதியினையும் நான் ஏற்படுத்தினேன். முழு உலகமும் பயந்திருந்த பயங்கரவாதத் தினை முற்றாக ஒழித்தோம்.

எனக்கு இந்நாட்டினை கையளிக்கும் போதும்இ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொருளாதாரத்தினை பற்றி மக்கள் கேட்கவில்லை.

பயங்கரவாதத்தினை அழிக்குமாறே மக்கள் கேட்டனர்.

அதனையே நான் செய்தேன். இனி சுதந்திரமான இலங்கையின் பொருளா தாரத்தை முன்னேற்றுவோம்.

யுத்த காலத்திலும் நீர்மின்திட்டங்கள்இ துறைமுக திட்டங்கள்இ விமான நிலையம் நிர்மாணத்துடன்இ கமநெகுமஇ மகநெகும போன்ற வீதிஇ கிராம அபிவிருத்தி வேலைகளையும் செய்துள்ளோம். நாட் டுக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைஇ கடன் பிரச்சினை ஆகியவற்றை தீர்த்து ள்ளோம். சகல கடன்களையும் செலுத்தி யுள்ளோம்.

ஈரானுடன் பேசி ஏழுமாத வட்டியில்லா கடன் மூலம் பெற்றோல் தேவையை நிறைவேற்றினோம். லிபியாஇ இந்தியாஇ பாகிஸ்தான்இ சீனா ஆகிய நாடுகள் எமக்கு உதவின.

எல்லாவற்றிற்கு மேலாக இந்தியாஇ பாகிஸ்தான்இ சீனா ஆகிய நாடுகளை சமநிலைப்படுத்தி வைத்திருந் தோம். யாருடைய கட்டலைக்கு அடிபணி யாது பொருளாதாரத்திலும்இ யுத்தத்திலும் வெற்றிகண்டோம்.

வடகிழக்கு மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

அவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்கள் முன்கூட்டியே நான்கு வருட முடிவில் நடத்துகிறேன். வட கிழக்கு தமிழ் மக்களும் தமது ஜனாதிபதியை தெரிவு செய்ய உரிமை யுடையவர்கள்.

அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளேன்.

மிஹின் ஏயார் பற்றி பேசுகின்றனர். அன்று அமெரிக்கா ஆயுத உதவி செய்தபின் அந்த ஆயுதங்களுக்கு தேவையான ரவைகள்இ குண்டுகள் அமெரிக்கா தந்து தவிய போது அதனை எடுத்து வர மிஹின் எயாரையே அனுப்பினேன். ஜோர்ஜ் புஷ் நிர்வாகமும் இதற்கு உதவியது.

எமது விமானப்படை சரியான இலக்குகளை தாக்கியது. கப்பற்படை ஆயுத கப்பல்களை அழித்தது. இவையே இராணுவ வெற்றிக்கு காரணமாகும்.

இன்று இராணுவ படையையும்இ வெற்றிகொண்ட 58 வது படையினரையும் முன்னாள் தளபதி காட்டிக்கொடுக்க முயற்சிப்பது எந்தவகையில் நியாயமாகும். இராணுவ வெற்றிக்குஇ அதன் செயற் பாடுகளுக்கு இராணுவ தளபதி முதல் கடைசி இராணுவ வீரர்வரை பங்களித் துள்ளனர். அவர்களை காட்டிக்கொடுப்பது துரோகமில்லையா?

கண்டியில் நடைபெற்ற எதிரணி கூட்ட த்தில் எனது குடும்பத்தைப்பற்றி திட்டித் தீர்த்துள்ளனர். எனது பிள்ளைகளை திட் டியுள்ளதோடு சாபமிட்டுள்ளனர். எனது குடும்பத்துக்கு சாபமிடுவது நியாயமா?

ஏழு தடவைகள் எனது குடும்பத்திற்கு இடிவிழ வேண்டும் என ஒரு கட்சித் தலைவர் சாபமிட்டுள்ளார்.

எனது மகன் போர்படை வீரராக வந்தமை பிழையானதா? ஏனைய குடும்பத்திலுள்ளவர்கள் யுத்தம் புரியும் போது எமது இராணுவத்திற்கு இளை ஞர்கள் தேவைப்பட்ட போது எனது மகனையும் படையில் சேர்த்தது மூலம் நான் முன்மாதிரியாக நடந்து காட்டி யுள்ளேன். இதற்கு சாபமிடுவது சரியா?

எனது சகோதரர்கள் பற்றி மிகவும் கேவலமாக பேசியுள்ளனர். ராஜபக்ஷ சகோதரர் கம்பனி என கூறியுள்ளனர். நான் சொத்துச் சேர்த்ததாக கூறியுள்ளனர். கண்டி நகர சிட்டி செண்டர் காணியில் கட்டப்படும் ஹோட்டல்கள் கொழும்பு 8pகுருநாகல் காணி ஆகியவற்றை நானும் எனது சகோதரர்களும் வாங்கி யுள்ளதாக கூறியுள்ளனர். இதனைநிரூபிக்க முடியுமா. எனது சகோதரர் பசில் ராஜபக்ஷ ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்களை பிரகடனப்படுத்த வேண்டும். அவரது சொத்து பிரகடனத்தினை பார்க்க முடியும். நானும் சொத்து சேர்க்கவில்லை. எனது சகோதரர் கோட்டாபேக்கும் சொத்துகள் இல்லை.

இவை அரசியலின் கீழ்த்தரமான பிர சாரங்களாகும். எமது குடும்பம் சகோதரர் கம்பனிதான். ஏனெனில் 1936 இல் எனது மூத்த தாத்தா உறுப்பினர் அவர் இறந்தபின் அவரது மகனான என்னுடைய தாத்தா உறுப்பினர். அவருக்கு பின் என் தகப்பனார் உறுப்பினர். 1945 ஆம் ஆண்டு சட்டநிறுவன சபையில் எனது அப்பா போட்டியின்றி தெரிவானவர். அதன்பின் நான்இ எனது சகோதரர்கள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம்.

இதற்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை விசுவாசமே காரணமாகும். நீங்கள் புத்தி ஜீவிகள். உங்களுக்கு யுத்தம்இ வெற்றிஇ பொருளாதாரஇ சவால்கள்இ எதிர்கால சவால் கள் பற்றியெல்லாம் தெரியும். நான் இறுதிவரை தாய்நாட்டுக்கு விசு வாச முடையவனாகவே இருப்பேன். சகல மக்களையும் காப்பாற்றுவேன். யாருக்கும் துரோகமிலைக்கமாட்டேன். இராணுவத்தை காட்டிக்கொடுக்க மாட்டேன்.” என்னை சிறைப்படுத்துவதாக கூறியுள்ளனர்.

எனக்கு ஏற்கனவே சிறை அனுபவம் உண்டு. ஜே.ஆர். ஜெயவர்தன என்னை 3 மாதம் சிறையிலிட்டார். இதுதவிர சுனாமியின் போது “ஹெல்ப் அம்பாந்தோட்டை நிதியை மோசடி செய்ததாக கூறினார்கள்.

ஆனால் ஜனாதி பதித் தேர்தலில் அம்பாந் தோட்டையிலேயே அதிகம் வாக்குகளை பெற்றார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

23 டிசம்பர், 2009

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடப் போவதில்லையென ஐரோப்பிய ஒன்றியம் தகவல்-


எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தவார இறுதிக்குள் முடிவு செய்யவுள்ளது! // தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கவில்லை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பேர்ணாட் சவேஜ் தெரிவித்துள்ளார். நிதியொதுக்கீடு மற்றும் நேரப்பிரச்சினை காரணமாக ஜனாதிபதித் தேர்தலின்போது கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமது கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த முடியுமென்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட இரு வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் இணங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

ஜனவரி 26ல் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் மாதிரி தேர்தல் திணைக்களத்தால் வெளியீடு-


இடம்பெயர்ந்த மக்களுக்கும் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கும் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை! // தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானம்!

ஜனவரிமாதம் 26ம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் மாதிரியை தேர்தல்கள் செயலகம் வெளியிட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் சிங்கள மொழிமூல வரிசையின் பிரகாரமே இம்முறை அச்சடிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் 22ம் இடத்திலும் எதிரணியின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகாவின் பெயர் 9ம் இடத்திலும் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் 22பேர் போட்டியிடுவதனால் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு, வரலாற்றிலேயே மிகவும் நீளமானதாக அமைந்துள்ளது இவ்வாக்குச்சீட்டு 56 சென்ரிமீற்றர் நீளத்திலேயே இம்முறை அச்சடிக்கப்படவுள்ளது என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

சம்பள நிலுவைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-இலங்கை ஆசிரியர் சங்கம்-




அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனினும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் சம்பள நிலுவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எதிர்வரும் ஜனவரி மாத சம்பளத்துடன் நிலுவையை வழங்கவுள்ளதாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

dsc080921

23.12.




புளொட் அமைப்பும் வவுனியா நகரசபையும் இணைந்து வவுனியாவில் பாரிய சிரமதானம்-


dsc080851


dsc080821dsc080831dsc080841dsc080851dsc080861dsc080871dsc080881dsc080891dsc080901dsc080911dsc080921dsc080931dsc080941dsc080951dsc080961dsc080981dsc080991dsc081001
















வவுனியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வவுனியா கோவில்குளத்தில் இன்று பாரிய சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப வைபவத்தில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. புளொட் அமைப்பினரும் வவுனியா நகரசபையினரும் இணைந்தே பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகளை முன்னெடுத்துள்ளனர். இதன் ஆரம்ப நிகழ்வு கோவில்குளம் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த நூலகத்தில், வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் புளொட் முக்கியஸ்தருமாகிய ஜி.ரீ.லிங்கநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வுகளில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், நகரசபையின் உபதலைவர் என்.எம்.ரதன், எஸ்.சுரேந்திரன். இ.சிவக்குமார், கே.பார்த்திபன்,

எஸ்குமாரசாமி மற்றும் புளொட்டின் வன்னிப்பிராந்திய அமைப்பாளர் பவன், புளொட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வை.பாலச்சந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். வவுனியாவில் இதுவரையில் 18பேர் டெங்கு நோய்க்குப் பலியாகியுள்ளதாகவும், 700ற்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் காரணமாக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் வேகமாக ஆட்களைப் பலிகொண்டு வரும் இந்த ஆட்கொல்லி நோயைக் கட்டுப்படுத்தி உயிரிழப்புக்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இங்கு உரையாற்றிய அனைவரும் ஒருமுகமாக வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட மல்லாவிக்கு விஜயம்- புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தாhர்த்தன் உள்ளிட்ட புளொட் பிரதிநிதிகள் இன்று முல்லைத்தீவின் மல்லாவிப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளனர். இவ்விஜயத்தில் புளொட் தலைவர் திரு.சித்தார்த்தனுடன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன், புளொட்டின் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் சென்றிருந்தனர். இதன்போது புளொட் பிரதிநிதிகள், மல்லாவியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள், வர்த்தகர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளை சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடியதுடன்,

அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தனர். அவர்களுடைய குறைகளும், ஏனைய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடைய குறைகளைப் போலவே போக்குவரத்து, வீட்டு வசதி, சுகாதாரம் போன்ற குறைபாடுகளாக இருக்கக் காணப்பட்டன. அத்துடன் தங்களுடைய விவசாய உபகரணங்கள், உழவு இயந்திரங்கள், உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் உடமைகள் யாவும் முல்லைத்தீவு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும், அவற்றை மீளவும் தங்களுக்குப் பெற்றுத் தருமாறும் அம்மக்கள் கேட்டுக் கொண்டனர். அத்துடன் தமது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மீளமைக்கவும், வியாபார ஸ்தாபனங்களை மீளக் கட்டுவதற்கும் உதவிகளைப் பெற்றுத்தருமாறும் கேட்டுக் கொண்டனர்.

இதன்போது கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள், இங்கிருக்கின்ற சிரமங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக அரசாங்க உயர்மட்டத்தினருக்கு எடுத்துக் கூறி, மிக விரைவில் இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுத்தர முயற்சிப்பதாக உறுதியளித்துள்ளனர். இதேவேளை மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட மல்லாவி பகுதியில் சிறுசிறு வர்த்தக நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான ஆரம்பத்தினைக் காணக்கூடியதாக இருந்ததாக புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
திருச்செந்தூர்: திமுக வெற்றி





திருச்செந்தூர்இ டிச.23: திருச்செந்தூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலி்ல் பதிவான வாக்குகளை எண்ணும்பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

அனிதாராதாகிருஷ்ணன் ( தி.மு.க)இ அம்மன் நாராயணன் ( அ.தி.மு.க)இ கோமதி்கணேசன் ( தே.மு.தி.க.இ) உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர்.

இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 46இ861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

14-வது மற்றும் இறுதிச் சுற்று

அனிதாராதாகிருஷ்ணன் (தி.மு.க) - 75223

அம்மன் நாராயணன் ( அ.தி.மு.க) - 28362

கோமதி்கணேசன் ( தே.மு.தி.க.) - 4186



வந்தவாசி: திமுக வெற்றி




செய்யார், டிச. 23: வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலி்ல் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

வந்தவாசி தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் செய்யார் அரசு கலைக் கல்லூரியில் எண்ணப்பட்டன.

கமலக்கண்ணன் ( தி.மு.க), முனுசாமி ( அ.தி.மு.க.),

ஜனார்த்தனம் ( தே.மு.தி.க.) உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர்.

இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்திருக்கும் நிலையில் திமுக வேட்பாளர் கமலக்கண்ணன் 38,017 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

16-வது மற்றும் இறுதிச் சுற்று

கமலக்கண்ணன் ( தி.மு.க): 78,827

முனுசாமி ( அ.தி.மு.க.): 40,210

ஜனார்த்தனம் ( தே.மு.தி.க.): 7,068


மேலும் இங்கே தொடர்க...
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்க சட்டமா அதிபர் இணக்கம்-மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

No Image


கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலõளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்க ஆட்சேபனை எதுவுமில்லை என்று சட்டமா அதிபர்இ மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து திஸ்ஸநாயகம் மேன்முறை யீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ததை அடுத்துஇ தம்மைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜே.எஸ். திஸ்ஸநாயகம் 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதிக்கும்இ 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதிக்கும் இடையே இன நல்லுறøவச் சீர்குலைக்கும் வகையில் வட. கிழக்கு மாதாந்த சஞ்சிகையை எழுதிஇ அச்சிட்டு விநியோகித்தார் என்றும்இ இது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரிய குற்றமாகும் என்றும் அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தி தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்..

மேற்படி சஞ்சிகையை நடத்துவதற்கு நிதி சேகரித்தமைஇ இதன் மூலம் பயங்கரவாத்தை ஊக்குவித்தமை போன்ற அவசரகாலப் பிரமாணங்களின் கீழ்இ தண்டனைக்குரிய குற்றச்செயல்களைப் புரிந்த குற்றவாளியாகவும் அவர் இனம் காணப்பட்டார். 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட தமது நண்பர் யசிகரனையும் அவரது மனைவியையும் பார்ப்பதற்காக மறுதினம் திஸ்ஸநாயகம் பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்குச் சென்றபோது கைதுசெய்யப்பட்டார்




அவுஸ்திரேலிய அகதி அந்தஸ்து கோருவோரில் புலி உறுப்பினர்களும் உள்ளனர்:இலங்கை


No Image


அவுஸ்திரேலியாவிற்கு அகதி அந்தஸ்து கோரி சட்டவிரோதமாகச் சென்ற இலங்கையர்களுள் 3 விடுதலை புலி உறுப்பினர்களும் அடங்குவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷிய துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள் அவுஸ்திரேலிய அகதி அந்தஸ்து கோரும் ஏனைய 255 பேரினது அகத் அந்தஸ்து கோரிக்கையிலும் இது பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெகார்த்தாவிலுள்ள இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் இவர்களை அடையாளம் கண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதுவர் சேனக வல்கம்பாய 'த அவுஸ்திரேலியன்' இற்கு தெரிவித்துள்ளார்.விடுதலை புலிகள் தொடர்பாக கிடைத்த புகைப்படங்களின் அடைப்படையில் இவ் முன்னாள் போராளிகள் இனங்காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள இவ்வறிப்பை அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மறுத்துள்ளதுடன்இ அவுஸ்திரேலியா விடுதலை புலிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் 'த அவுஸ்திரேலியன்' இற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் மாதிரியை தேர்தல்கள் செயலகம் வெளியிட்டுள்ளது.

No Image

வேட்பாளர்களின் பெயர்கள் சிங்கள மொழிமூல வரிசையின் பிரகாரமே இம்முறை அச்சடிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் 22 ஆம் இடத்திலும் எதிரணியின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகாவின் பெயர் 9 ஆம் இடத்திலும் இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் 22 பேர் போட்டியிடுவதனால் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுஇ வரலாற்றிலேயே மிகவும் நீளமானதாக அமைந்துள்ளது இவ் வாக்குச்சீட்டு 56 சென்ரிமீற்றர் நீளத்திலேயே இம்முறை அச்சடிக்கப்படவுள்ளது என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
ஐ.நா விளக்கம் கோரிய விவகாரம்:
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய முக்கியத்துவமான பிரச்சினை





‘சண்டே

லீடர்’ பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக்

கொண்டு ஐ.நா. விளக்கம் கோரியிருப்பதை நாட்டுப் பிரச்சினையாக அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வே

ண்டுமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.

‘இதனையொரு அரசியல் பிரச்சினையாகப் பார்க்காமல் தேசியப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று மாலை விசேட செய்தியாளர் மாநாடு நடந்தது. பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாஇ ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கணேகல ஆகியோர் கலந்துகொண்டனர்.

‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு பொன்சேகா வழங்கிய பேட்டி தொடர்பாக ஐ.நா. விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கிய அவர் மேலும் கூறியதாவது;

ஐ.நா. சபை டிசம்பர் 18ம் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றை எழுதியுள்ளது. மே 17ம் திகதி யுத்தம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில்இ வெள்ளைக்கொடியுடன் வந்த புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்இ இதில் மூன்று புலி முக்கியஸ் தர்களின் பெயர்களினதும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அவ்வாறான சம்பவங்கள் நடந்திருந்தால் பூரண விளக்கம் தருமாறு ஐ.நா. கோரியுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

‘இவ்வாறான சம்பவமொன்று நடக்காத நிலையில் விளக்கமளிக்குமாறு ஐ.நா. கேட்டிருக்கிறது. இதனை எந்த வகையிலும் ஏற்க முடியாது’ என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக தனிநபர் எவரையும் நான் குறை கூறவில்லையெனத் தெரிவித்த பிரதமர்இ முன்னாள் அதிகாரியான பொன்சேகாஇ சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங் கிய பேட்டியை அடிப் படையாகக் கொண்டே இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றார்.

“யார் இதனைக் கூறியிருந்தாலும் ஒரு தனிநபர் பிரச்சினையாக இதனைக் கருத முடியாது. நாடு என்ற ரீதியிலேயே நாம் இதனை எதிர்கொள்ள வேண்டி யிருக்கிறது. நடக்காத ஒரு பிரச்சினைக்கு நாம் எந்த வகையில் விளக்கம் கொடுக்க முடியுமெனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார். “சர்வதேச அழுத்தங்கள்” வந்த வண்ணமே இருக்கின்றன. அவை ஒவ்வொரு வடிவத்தில் வருகின்றன.

இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று பட்டுச் செயற்பட வேண்டும். நாடு என்ற ரீதியில் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.


இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டைஅரசாங்கம் முற்றாக நிராகரிப்பு

ஐ. நா. அதிகாரிகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார்


எந்தவொரு இராணுவ அதிகாரியையும் யுத்தக் குற்றச்செயல் விசாரணைகளுக்;கு ஆஜர்ப்படுத்தப் போவதில்லை -அரசாங்கம் தெரிவிப்பு! // ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயம் தீக்கரை!

இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரிப்ப துடன் சரத் பொன்சேகாவின் கூற்றை அடிப்படையாகக் கொண்ட ஐ. நா. சபையின் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் செயற்படவுள்ளதாகவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இது விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது நேரடி அவதானத்தைச் செலுத்தியுள்ளதுடன் ஐ. நா. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளாரெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்இ பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரும் கலந்து கொண்ட இம் மாநாட்டில் அமைச்சர் டளஸ் அழகப் பெரும மேலும் தெரிவித்ததாவது:-

இவ்விவகாரத்தை எவரும் தேர்தலோடு சம்பந்தப்படுத்தக் கூடாது. இது தாய் நாட்டையும் தாய் நாட்டை மீட்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத்தினரையும் களங்கப்படுத் தும் விடயமாகும். பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு முழு உலகத்தின் பாராட்டுக்கும் உரித்தான எமது படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள இக் குற்றச்சாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் தமிழ்இ சிங்களம்இ முஸ்லிம் என்றில்லாமல் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.

இது சரத் பொன்சேகா வெற்றி பெறுவதற்கான போராட்டமல்லஇ படையினரையும் நாட்டையும் அபகீர்த்திக்குள்ளாக்கவே பொன்சேகா ஜனாதி பதி வேட்பாளராக வந்துள்ளார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். (ஸ)

தமிழ்க் கைதிகளின் விடுதலை; முக்கிய அறிவிப்பு அடுத்தவாரம்

ஒரே தடவையில் தீர்க்கும் நடவடிக்கை










வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானகரமான முடிவொன்று எட்டப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இது தொடர்பில் நேற்றைய தினம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையா டலின் பெறுபேறாக கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது.

தமிழ்க் கைதிகளின் விடுதலைக்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி யின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிடம்இ மலையகத் தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் ஹட்டனில் வைத்து வேண்டுகோள் விடுத்திருந்தன. இந்தப் பின்னணியில்இ நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நீதிஇ சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

அனைத்துக் கைதிகளின் பிரச்சினைக ளையும் ஒரே தடவையில் தீர்த்துவைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் கூறினார். வழக்குகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டனர்.

அதேநேரம்இ தமது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர்களை அனுப்பிவைத்திருந்தனர். இதன் விளைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமையஇ கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிசட்ட மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இதற்கிணங்கஇ கைதிகள் கோவைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவென பத்துச் சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்படி வழக்குத் தொடர்வதற்கு அவசியமில்லாதவர்களை விடுதலை செய்யவும் ஏனையவர்களுக்கு வழக்குத் தொடரவும் ஒழுங்குகள் மேற்கொள்ள ப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும்இ தற்போது அனைத்துக் கைதிகள் தொடர்பிலும் ஒரே தடவையில் நடவடிக்கை எடுப்பது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாகவே நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் அடுத்தவாரமளவில் கைதிகளின் விடுதலை குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாகவு ள்ளது. வழக்குகள் எதுவுமின்றி பல்வேறு சிறைகளில் சுமார் 600 தமிழ்க் கைதிகள் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்ப ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

22 டிசம்பர், 2009

ஜெனரல் சரத்பொன்சேகா பங்குபற்றும் பொதுக்கூட்டம் கல்முனையில்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-




எதிர்வரும் 24ம் திகதி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா பங்கேற்கும் பொதுக்கூட்டம் அம்பாறை மாவட்டம் கல்முனையில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் தாம் திருப்தியடைந்துள்ளதாகவும் ஹக்கீம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நாட்டுக்கு வந்து ஒருமாதம் தங்கியிருப்போர்க்கு பொலீஸ் பதிவு தேவையில்லையென அறிவிப்பு





கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வெளிநாடுகளிலிருந்து தமது உறவினர்களைப் பார்ப்பதற்கு நாட்டிற்கு வருகைதந்து ஒருமாத காலம் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் பொலீஸ் நிலையங்களில் தம்மைப் பதிவுசெய்து கொள்வது அவசியமில்லையென பொலீஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரியவினால் சகல பொலீஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலீஸ் மாஅதிபரினால் விடுக்கப்பட்டுள்ள இவ்வுத்தரவு நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறு நாட்டிற்கு வந்துள்ளவர்கள் நேற்றுமுதல் ஒருமாத காலத்திற்குமேல் நாட்டில் தங்கியிருப்பார்களானால் மாத்திரமே பதிவு செய்துகொள்ள வேண்டுமென பொலீஸ் மாஅதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலீஸ் மாஅதிபரினால் நேற்று சகல சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர்கள், பிரதிப் பொலீஸ் மாஅதிபர்கள் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலீஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட ஏனைய சகல பொலீஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜெனரல் சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி கடத்தப்பட்டதாக தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு-


No Image
எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டு பயமுறுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாட்டை சரத் பொன்சேகா தேர்தல் ஆணையாளரிடம் இன்று தெரிவித்துள்ளார் குறித்த பாதுகாப்பு அதிகாரி இளைப்பாறிய இராணுவ அதிகாரி என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சரத் பொன்சேகா கடந்தவார இறுதியில் அம்பலாங்கொடையில் சில மணித்தியாலங்களாக தங்கியிருந்த வீடு ஒன்றை விசேட பொலிஸ் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர். இன்றுகாலை இந்த சோதனை இடம்பெற்றுள்ளது. இந்த சோதனை நடவடிக்கை நீதிமன்ற கட்டளையின்றியே இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு-









ஜனாதிபதித் தேர்தலின்போது எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்றுபிற்பகல் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 12 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. மேலும் இடம்பெற்ற கலந்தாலோசனை இணக்கப்பாடின்றி நிறைவடைந்ததாகவும், இந்நிலையில் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பிலான முடிவு எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படுமென்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இது குறித்து இறுதி முடிவெடுக்கும் கூட்டம் எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பணியாளர்களுக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளில் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை-

இலங்கைப் பணியாளர்களுக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளில் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கைப் பணியாளர் ஒருவர் தொழில் வாய்ப்புக்காக அபிவிருத்தியடைந்த நாட்டுக்கு செல்வது இலகுவான விடயமல்ல என பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் மத்திய கிழக்கு நாடுகள் அல்லாத நாடுகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அடுத்த வருடம் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்த எண்ணியுள்ளதாகவும் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.



இந்தியத்
தூதுவர் அசோக் கே.காந்தா உள்ளிட்ட தூதுக்குழுவினர் வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளுக்கு விஜயம், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும்
பங்கேற்பு-
plotesiddarthan
India assures it is with Sri Lanka 2-12-09



இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா இன்று வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்தியத் தூதுவருடன், பிரதித் தூதுவர் சிறீ விக்ரம் மிர்ஷி, தூதரக அரசியல்செயலர் சியாம் மற்றும் தூதரகத்தின் இராணுவஅதிகாரி ஆகியோhரும் இவ்விஜயத்தில் இணைந்திருந்தனர். மேற்படி தூதுக்குழுவினர் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களைப் பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து கொண்டதுடன், மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கும் விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபையிருடனான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதில் ஆலய பரிபாலன சபை சார்பில் அதன் தலைவர் நமசிவாயம், செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது குறித்த ஆலயத்தில் இராஜகோபுரம் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை பரிபாலன சபையினர் முன்வைத்தனர். இதன்போது கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் சிறப்பு தொடர்பிலும், அதனை மிகவும் சிறப்புற புனர்நிர்மாணம் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் இந்தியத் தூதுக்குழுவினருக்கு விளக்கியதுடன், இராஜகோபுரத்தைக் கட்டுவதற்கு உதவும்படியும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். இதன்போது கருத்துரைத்த இந்தியத் தூதுவர், இவ்விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவதாகவும், இந்தியாவுடன் தொடர்புகொண்டு அங்கிருந்து சிற்பக் கலைஞர்களை வரவழைத்து இதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மிகத் துரிதமாக மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியத் தூதுக்குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் கச்சேரியில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த கூட்டத்திற்கு மன்னார் மாவட்ட அரசஅதிபர் திரு.நீக்கிளாப்பிள்ளை தலைமை வகித்தார். இந்தக் கலந்துரையாடலில் மீனவ சங்கப் பிரதிநிதிகள், பிரஜைகள் குழுவினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளும், பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் மற்றும் புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

இக்கூட்டத்தின்போது இந்தியத் தூதுவரிடம் இதில் கலந்து கொண்டிருந்தவர்கள் தற்போதைய நிலைமைகள், இடம்பெயர்வுகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேள்விகளையும் கேட்டனர். இதற்கு பதிலளித்த இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா, தாங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு செய்கின்ற உதவிகள் தொடர்பில் விரிவாக எடுத்துக் கூறியதுடன், இந்திய, இலங்கை மீனவர்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இவ்வாறான தீர்வினைக் காண்பதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து புளொட் தலைவர் சித்தார்த்தன் உரையாற்றுகையில், இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் சுட்டிக்காட்டி, இந்தியாவினுடைய உதவிகளுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சரியான நிரந்தர அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதையும், இதற்கு இந்தியா தனது முழுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...
24ஆம் திகதி வரை இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கலாம்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தோரின் விண்ணப்பங்கள் இம்மாதம் 24 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள 20 ஆயிரம் வாக்காளர்களும் புத்தளம் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள 25 ஆயிரம் முஸ்லிம்களும் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தோரின் முகாம்களில் உள்ள கிராம சேவையாளர்கள் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை தயார் செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த சேவைகள் நிவாரணம் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சகல முகாம்களில் உள்ள அனைவரும் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் அமைச்சர் கூறினார்

மகனை காப்பாற்ற போதை மருந்தை தின்று உயிர் விட்ட பெண்




பிரேசில் நாட்டில் உள்ள அலாகஸ் மாகாணத்தில் உள்ள மக்கியோ நகரை சேர்ந்தவர் ஜோசெலிடா டி மொரேஷ் (வயது 60). இவரது 16 வயது மகன்இ “கொகைன்” போதை மருந்து கடத்தல் தொழில் செய்து வந்தான்.

இதை அறிந்த போலீசார் அவனை தேடிவந்தனர். அவன் போதை மருந்துகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

அவனது தாயார் ஜோசெலிடாவிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே தனது வீட்டுக்கு போலீசார் வருவதை அறிந்த ஜோசெலிடா தனது மகன் பதுக்கி வைத்திருந்த கொகைன் போதை மருந்தை அழிக்க நினைத்தார்.

அதற்காக அவற்றை வாயில் போட்டு மென்று விழுங்கிவிட்டார். அளவுக்கு அதிகமாக மருந்தை தின்ற அவர் போலீசாரின் விசாரணையின்போதே மயங்கி விழுந்தார்.

உடனேஇ ஆம்புலன்சை வரவழைத்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தனது மகனை காப்பாற்றுவதற்காக தாய் தனது இன்னூயிரை மாய்த்துக் கொண்டார்.



இஸ்ரேலில் ஏசு வாழ்ந்த காலத்து வீடு கண்டுபிடிப்பு





ஏசு கிறிஸ்து பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லேமில் பிறந்தார். பின்னர் அவரது குடும்பம் இஸ்ரேலில் உள்ள நாசரேத் நகரில் குடியேறியது. சிறு வயதில் ஏசு அங்குதான் வசித்து வந்தார்.

தற்போது நாசரேத் 65 ஆயிரம் மக்கள் வசிக்கும் பெரிய நகரமாக திகழ்கிறது.

ஏசு காலத்தில் இந்த நகரம் எப்படி இருந்தது? என்பதை குறிப்பிடும் வகையில் உள்ள பழங்கால கட்டிடங்கள் இல்லை. அந்த காலத்தில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் அழிந்து விட்டன.

இந்த நிலையில் நாசரேத் நகருக்கு வெளியே இஸ்ரேல் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது ஒரு இடத்தில் 50 வீடுகள் புதைந்து கிடந்ததை கண்டு பிடித்தனர். 4 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அவை புதைந்து கிடந்தன. இந்த வீடுகள் ஏசு காலத்து வீடுகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர் யார்தனா அலக்சான்டிரா தெரிவித்தார்.

இந்த வீடுகள் சிறிய அளவில் இருக்கின்றன. சுண்ணாம்பு கற்கள் மற்றும் களி மண்ணை பயன்படுத்தி வீடுகளை கட்டி உள்ளனர். உணவு மற்றும் தண்ணீரை சேகரித்து வைக்கும் பாத்திரங்களும் அங்கு கிடந்தன.

கி.மு. 100-ம் ஆண்டில் இருந்து கிபி. 100-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த வீடுகள் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

நாசரேத் பிற்காலத்தில் ரோம் மன்னர்களின் பிடியில் வந்தது. அப்போது இந்த நகரம் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...