22 டிசம்பர், 2009

24ஆம் திகதி வரை இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கலாம்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தோரின் விண்ணப்பங்கள் இம்மாதம் 24 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள 20 ஆயிரம் வாக்காளர்களும் புத்தளம் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள 25 ஆயிரம் முஸ்லிம்களும் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தோரின் முகாம்களில் உள்ள கிராம சேவையாளர்கள் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை தயார் செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த சேவைகள் நிவாரணம் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சகல முகாம்களில் உள்ள அனைவரும் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் அமைச்சர் கூறினார்

மகனை காப்பாற்ற போதை மருந்தை தின்று உயிர் விட்ட பெண்




பிரேசில் நாட்டில் உள்ள அலாகஸ் மாகாணத்தில் உள்ள மக்கியோ நகரை சேர்ந்தவர் ஜோசெலிடா டி மொரேஷ் (வயது 60). இவரது 16 வயது மகன்இ “கொகைன்” போதை மருந்து கடத்தல் தொழில் செய்து வந்தான்.

இதை அறிந்த போலீசார் அவனை தேடிவந்தனர். அவன் போதை மருந்துகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

அவனது தாயார் ஜோசெலிடாவிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே தனது வீட்டுக்கு போலீசார் வருவதை அறிந்த ஜோசெலிடா தனது மகன் பதுக்கி வைத்திருந்த கொகைன் போதை மருந்தை அழிக்க நினைத்தார்.

அதற்காக அவற்றை வாயில் போட்டு மென்று விழுங்கிவிட்டார். அளவுக்கு அதிகமாக மருந்தை தின்ற அவர் போலீசாரின் விசாரணையின்போதே மயங்கி விழுந்தார்.

உடனேஇ ஆம்புலன்சை வரவழைத்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தனது மகனை காப்பாற்றுவதற்காக தாய் தனது இன்னூயிரை மாய்த்துக் கொண்டார்.



இஸ்ரேலில் ஏசு வாழ்ந்த காலத்து வீடு கண்டுபிடிப்பு





ஏசு கிறிஸ்து பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லேமில் பிறந்தார். பின்னர் அவரது குடும்பம் இஸ்ரேலில் உள்ள நாசரேத் நகரில் குடியேறியது. சிறு வயதில் ஏசு அங்குதான் வசித்து வந்தார்.

தற்போது நாசரேத் 65 ஆயிரம் மக்கள் வசிக்கும் பெரிய நகரமாக திகழ்கிறது.

ஏசு காலத்தில் இந்த நகரம் எப்படி இருந்தது? என்பதை குறிப்பிடும் வகையில் உள்ள பழங்கால கட்டிடங்கள் இல்லை. அந்த காலத்தில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் அழிந்து விட்டன.

இந்த நிலையில் நாசரேத் நகருக்கு வெளியே இஸ்ரேல் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது ஒரு இடத்தில் 50 வீடுகள் புதைந்து கிடந்ததை கண்டு பிடித்தனர். 4 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அவை புதைந்து கிடந்தன. இந்த வீடுகள் ஏசு காலத்து வீடுகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர் யார்தனா அலக்சான்டிரா தெரிவித்தார்.

இந்த வீடுகள் சிறிய அளவில் இருக்கின்றன. சுண்ணாம்பு கற்கள் மற்றும் களி மண்ணை பயன்படுத்தி வீடுகளை கட்டி உள்ளனர். உணவு மற்றும் தண்ணீரை சேகரித்து வைக்கும் பாத்திரங்களும் அங்கு கிடந்தன.

கி.மு. 100-ம் ஆண்டில் இருந்து கிபி. 100-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த வீடுகள் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

நாசரேத் பிற்காலத்தில் ரோம் மன்னர்களின் பிடியில் வந்தது. அப்போது இந்த நகரம் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக