13 பிப்ரவரி, 2010


ஜெனரல் பொன்சேகாவின் உடல் நிலைமைகளை கவனிக்க விசேட வைத்தியர்கள் குழு.




ஜெனரல் பொன்சேகாவின் உடல் நிலைமைகளை கண்காணிக்க விசேட வைத்தியர்கள் குழுவொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

இவ்வைத்தியக் குழு 24 மணி நேரம் விழிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவை ஏற்படின் இராணுவ வைத்தியசாலையில் வைத்திய ஆலோசர் மேஜர் ஜெனரல் எஸ்-எச் முனசிங்கவிற்கு ஜெனரல் பொன்சேகாவோ அவரது மனைவியோ எந்த நேரத்திலும் அழைப்பபை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா நேற்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கதினரை தொடர்பு கொண்டு தனது கணவனுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்குவதில் காணப்படும் குறைபாடுகளை தீர்பதற்கு உதவுமாறு கேட்டிருந்தார்.

ஜெனரல் பொன்சேகா மூன்று தடவைகள் குண்டுத்தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அதன்போது அவரது உடலில் புகுந்துள்ள சில குண்டுத்துகள்கள் இதுவரை நீக்கப்படவில்லை எனவும் , இறுதியா இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குலில் தனது கணவரில் ஈரலுக்கு அண்மித்தபகுதில் 1 அங்குல நீழமான குண்டுத்துகள் ஒன்று இருப்பதாகவும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு அவர் ஒவ்வொரு ஆறுமணி நேரமும் மாத்திரைகள் எடுக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்த அவர், தனது கணவனின் உடல் நிலைமை தொடர்பான முழு விபரமும் இராணுவ வைத்தியசாலையின் இயக்குனருக்கே தெரியும் எனவும் அவரை தொடர்ந்தும் தனது கணவனின் உடல் நலத்தினை கவனிக்க அனுமதிக்குமாறும் வேண்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



25-ந் தேதி நிபந்தனையற்ற பேச்சுக்கு பாகிஸ்தான் சம்மதம்










அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று, பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா சம்மதம் தெரிவித்தது. வருகிற 18 அல்லது 25-ந் தேதியில் இஸ்லாமாபாத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பியது. இதில், 25-ந் தேதியை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டு இருக்கிறது.

இதன் படி இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவும், பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷீரும் கலந்துகொள்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் நிபந்தனையற்றதாக அமையும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் அப்துல் பாசித் தெரிவித்தார்.

வெளிநாட்டு வினோதம்
மனிதர்களை தோற்கடித்த மாடுகள்



உலகின் தென்கோடியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ளது நிïசிலாந்து. இந்த நாட்டில் மனிதர்களை விட மாடுகள் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. 2009-ம் ஆண்டு ஜுன் மாதம் எடுத்த கணக்கெடுப்பில் 58 லட்சம் பசுமாடுகள் இருப்பது தெரியவந்து உள்ளது. அந்த நாட்டு மொத்த மக்கள் தொகை 43 லட்சம் தான்.

மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதற்கு மாட்டு பண்ணைகள் லாபகரமாக இயங்குவது தான் காரணம் ஆகும். அதனால் ஆடு முதலிய மிருகங்களை வளர்த்தவர்கள் அதை கைவிட்டு விட்டு மாடுவளர்க்க தொடங்கி உள்ளனர்.



முகத்தில் தாடி முளைத்த மனைவியை விவாகரத்து செய்த அரேபிய தூதர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தூதர் ஒருவருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. அந்த பெண்ணுக்கு முகத்தில் முடி முளைத்து இருக்கும். மாறுகண் வேறு. இதை அவர் பர்தா மூலம் மறைத்து இருந்தார். திருமணம் நிச்சயமான பிறகு இருவரும் சந்தித்தபோது எல்லாம் அந்த பெண் பர்தா அணிந்து இருந்ததால், அவர் முகத்தில் முடி இருந்ததை கண்டு பிடிக்க முடியவில்லை.

திருமண ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்ட பிறகு அவர் மனைவியின் முகத்தில் முத்தமிட குனிந்தபோது தான் அவர் முகத்தில் தாடி இருப்பதை கவனித்தார். அதோடு மாறுகண் என்பதும் தெரியவந்தது. அதன் பிறகு இருவரும் சந்திக்கும்போது எல்லாம் அந்த பெண் பர்தா மூலம் மறைத்துக்கொண்டு கணவருடன் பழகி வந்தார். தாம்பத்திய உறவின் போது கூட அவர் பர்தாவுடன் இருந்ததால் அவரால் மனைவி முகத்தில் தாடி இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அவர் இஸ்லாமிய கோர்ட்டில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். தன் தாயாரே அந்த பெண்ணின் தங்கை போட்டோவை காட்டி தன்னை ஏமாற்றி விட்டார் என்று குற்றஞ்சாட்டி இருந்தார். நகை மற்றும் புடவை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூ.68 லட்சத்தை திருப்பி தரவேண்டும் எனறும் அதோடு தனக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு விவாகரத்து வழங்கியது. மேலும், பணத்தை திரும்ப தர உத்தரவிடவும் இழப்பீடு தரவும் கோர்ட்டு மறுத்து விட்டது.

***

முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்டதாம் மைக்Úல் ஜாக்சன் ஆவி



பாப் இசை உலகில் உலகப்புகழ் பெற்றவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த ஆண்டு தன் 50 வயதில் மரணம் அடைந்தார். இவர் மனைவி மேரி பிரஸ்லி (வயது 42). இவரை 1994-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 18 மாதங்கள் கழித்து அவர்கள் பிரிந்து விட்டனர்.

பிரஸ்லியும், மைக்கேல் ஜாக்சனின் மேக் அப் கலைஞர் கரேன் பயேகாஸ்சும் ஒரு மீடியம் மூலம் அவரது ஆவியுடன் பேசினார்கள். அப்போது அவர் உனக்கு (பிரஸ்லி) செய்த தவறுக்காக என்னை மன்னித்து விடு என்று ஆவி கேட்டுக்கொண்டதாக கரேன் பயேகாஸ் தெரிவித்தார்.

மீடியமாக செயல்பட்டவருக்கு நாங்கள் யார் என்பதும், எங்களுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் எதுவும் தெரியாது என்று கரேன் பயேகாஸ் தெரிவித்தார்.

அவரது தனி டாக்டர் கொனார்டு முர்ரே பற்றியும் அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டு பற்றியும் கூற மைக்கேல் ஜாக்சன் மறுத்து விட்டார்.


இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
ராணுவ நடவடிக்கை எடுத்தால் உங்களை இல்லாமல் செய்து விடுவோம்



இஸ்ரேல் இந்த பிராந்தியத்தில் ஏதேனும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அதை எதிர்த்து நடவடிக்கை எடுப்போம். அதன்பிறகு இஸ்ரேல் என்ற நாடே இருக்காது என்று ஈரான் நாட்டு அதிபர் மக்மூத் அகமதினிஜாத் எச்சரித்தார்.

ஈரான் அதிபர், சிரியா அதிபர் பாஷர்அல் ஆசாத்திடம் டெலிபோனில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது

2006-முதல் 2009-ம் ஆண்டு கால கட்டங்களில் காசா மக்களிடமும், லெபனான் ஹிஸ்பொல்லா தீவிரவாதிகளிடமும் ஏற்பட்ட தோல்விக்கு எந்த வகையிலும் பழி வாங்கலாம் என்று இஸ்ரேல் ஆலோசித்து வருவதாக நம்பகமான தகவல் எனக்கு கிடைத்து உள்ளது. இஸ்ரேல் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்த்து முழு அளவில் போர் நடத்தப்பட வேண்டும். இந்த போர் மூலம் எதிரியை இல்லாமல் ஒழிக்கவேண்டும்.

இவ்வாறு அகமதினிஜாத் கூறினார்.


மேலும் இங்கே தொடர்க...
பொன்சேகாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை?




பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார். இது குறித்து அதிபர் மகிந்த ராஜபட்ச சகோதரரும்,​​ பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபட்ச கூறியதாக மலேசியாவில் இருந்து வெளியாகும் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை.​ எனவே,​​ அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர் மீதான ராணுவ விசாரணை விரைவில் தொடங்கும்.​ அவர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி ராணுவத்தில் பிளவை உண்டாக்க முயன்றார்.​ ராணுவத்தில் அரசியலை நுழைக்க முயன்றார். தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.​ இலங்கையில் ராணுவ ஆட்சி கொண்டு வர சதித் திட்டம் தீட்டினார். 2009 ஜனவரியில் பத்திரிகையாளர் லசந்தா விக்ரமதுங்கே கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் பொன்சேகா மீது சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும். லசந்தா விக்ரமதுங்கே கொல்லப்பட்டது தொடர்பாக ​ உண்மை விரைவில் வெளிவரும். அமெரிக்கா, ​​ நார்வே மீது குற்றச்சாட்டு:​ அதிபர் தேர்தலில் பொன்சேகா பிரசாரத்துக்கு சில மேற்கத்திய நாடுகள் உதவி செய்துள்ளன.​ அமெரிக்கா,​​ நார்வே உள்ளிட்ட நாடுகள் ஏராளமாக பணம் செலவழித்துள்ளன. இலங்கை அரசுக்கு எதிராக எழுத பத்திரிகையாளர்களுக்கு நார்வே அரசு பணம் கொடுத்துள்ளது என்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்றார்.​ ​ பொன்சேகாவுக்கு அமைச்சர் கண்டனம்:​​ போர் சமயத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மைகளை வெளியிடுவேன் என பொன்சேகா கூறியதற்கு செய்தித் துறை அமைச்சர் லட்சுமண் யப அபேயவர்தனே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போர் சமயத்தில் நடந்தவை தொடர்பாக சர்வதேச அமைப்புகளிடம் கூறுவேன் என ஒருவர் கூறினால்,​​ அதுபோன்ற ராணுவ அதிகாரியிடம் விசாரணை நடத்த ராணுவத்துக்கு உரிமை உண்டு என்றார் அவர். பொன்சேகா இதுபோன்று பேசுவது துரோகமாகும் என ஆளும் கூட்டணியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சா கூறினார். மகிந்த ராஜபட்சவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பொன்சேகா கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரது மனைவி அனோமா,​​ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.​ அந்த வழக்கின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளுடனான போரின்போது இலங்கை அரசு அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது என மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.​ பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிவில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றால் உண்மைகள் வெளிவரக் கூடும் என்பதால் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

பொன்சேகாவின் கைது இராணுவ ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை
எதிர்க்கட்சித் தலைவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடப் பட்ட போதும் சரத் பொன்சேகாவின் கைது தொடர்பிலேயே விசேட கவனம் செலுத்தப் பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளமை எவ்வகையிலும் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதொன்றல்ல. இராணுவ ஒழுக்கம் மற்றும் இராணுவ சட்டத்திற் கிணங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி,

தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன் சேகாவுக்குத் தேவையான சகல வசதிகளும் எவ்வித குறைபாடுகளுமின்றி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கைது செய்யப்பட்டமை சம்பந்தமாக நீதிமன்றத்திற்குச் செல்வதற்கும் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

சரத் பொன்சேகா தொடர்பான விசா ரணை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு ள்ளதுடன் அவர் குற்றமிழைத்திருக்காவிட் டால் அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க; தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன் சேகாவிற்கு உணவு எடுத்துச் செல்லும் அவரது மனைவி அனோமா பொன்சேகா வுக்குப் பதிலாக வேறு ஒருவரை அனுமதிக்க முடியுமா என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி; அதனை இராணுவத் தளபதியே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமது கணவரைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அனோமா பொன்சேகா தொடர்ந்தும் ஊடகங்களினூடாக வேண்டுகோள் விடுத்ததை தாம் பார்த்ததாக ஞாபகப்படுத்திய ஜனாதிபதி; அனோமா பொன்சேகா விரும்பினால் அவரது கையினாலேயே உணவு வழங்குவது மிகவும் பொருத்தமானது எனவும் குறிப் பிட்டுள்ளார்.

அன்று நாம் மக்களுக்காகச் செயற்படப் போய் சிறையிலடைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கர்ப்பிணியாகவிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ காலையிலும் மாலையிலும் தமக்கு உணவு எடுத்துக் கொண்டு தம்மைப் பார்க்க வந்ததை ஜனாதிபதி இங்கு நினைவுகூர்ந்துள்ளார்.


சத்துணவு நஞ்சாகியதில் 10 வயது மாணவி மரணம்

மேலும் 62 மாணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி: மாத்தளை சிங்கள மகா வித். பரிதாபம்



சத்துணவு விஷமாகியதால் பத்து வயது பாடசாலை மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாத்தளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மேலும் 62 மாணவர்கள் மாத்தளை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் ஒரு சிலரின் நிலை கவலை க்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டார ங்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவை உண்டதையடுத்து மாணவர்கள் மயக்கமுற்றதாகவும் சிலர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இறந்துபோன மாணவி மாத்தளை பலாபத்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் பத்து வயதுடைய தனஞ்சனி கமகே என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் பலாபத்வெல புத்தகோஸ தொம்பவெல, கவட்டயாமுனை ஆகிய மூன்று பாடசாலை மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கடன் வட்டி வீதம் குறைப்பால் கிராமிய பொருளாதாரத்துக்கு புத்தூக்கம்

இலங்கை வங்கியின் தலைவர்


கடன்களுக்கான வட்டி வீதம் குறைக்க ப்பட்டதையடுத்து கிராமிய பொருளாதாரம் புத்தூக்கம் பெற்றிருப்பதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தொழில் முயற்சிகளுக்காகப் பெறப்படும் கடனுக்கான வட்டி 12% ஆகக் குறைக்கப்ப ட்டுள்ளது. இதனையடுத்து கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சிகள் புத்தூக்கம் பெற்றுள்ளன. புதிய புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகின்றன. இதனால் கிராமத்தில் சலக மட்டத்திலும் பொருளாதாரத்துக்கான நகர்வுகள் சுறுசுறுப்படைந்துள்ளதென்று கலாநிதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை வங்கி தலைமையக த்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக் கமைய நாட்டின் பொருளாதார த்தில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்துவ தற்கான சகல நடவடிக்கைகளையும் இலங்கை வங்கி மேற்கொண்டு ள்ளது.

புதிய புதிய துறைகளிலும் கால் பதித்து முதலீட்டுச் செயற்பாடுக ளையும் முன்னெடுக்கிது. இதன் மூலம் அரசாங்கத்தின் செயற்றி ட்டங்களுக்குக் கைகொடுப்பதற்கு இலங்கை வங்கி தயாராக உள்ளதென்றும் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புகடன்களுக்கான வட்டி வீதத்தை நான்கு தடவை குறைத்துள்ளோம். நாம் வட்டியில் தங்கியிருப்பதால் கடன்களுக்கான வட்டியைக் குறைத் ததால் தாக்கம் ஏற் பட்டது. எனினும் அதனைச் சமப்படுத்துவ தற்கான ஏனைய நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டோம். கிராமத்தில் பெண்களை வலுவூட்டு வதற்காக ஆயினும் மகளிர் குழுக் களை அமைத்துச் செயற்படுத்துகின் றோம்பூ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வயிற்றுக்குள் ஹெரோயின் உருண்டைகள்;
மூன்று பாக். பிரஜைகள் மடக்கிப்பிடிப்பு



பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் போதைப் பொருளை கடத்திவந்த மூன்று பாகிஸ்தானியர்களை சுங்கத்திணைக்களத்தினர் கைது செய்ததாக சுங்கத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.

ஹரோயின் போதைப்பொருளை உருண்டைகளாக விசேட பாதுகாப்பு உரையில் இட்டு விழுங்கியே ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்தி வந்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான இம்மூவரையும் சுங்கத் திணைக்களத்தினர் ஸ்கேன் செய்தபோதே வயிற்றுக்குள் ஹெரோயின் உருண்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சுமார் 40 க்கும் மேற்பட்ட ஹெரோயின் உருண்டைகள் நேற்று மாலை வரை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை

மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் மார்க்
சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்கின்றவர்கள் மீது பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் கிராமத்திலுள்ள ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க்; இக்கிராமத்தின் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டப்பட்டு காணாமற்போயுள்ளது.

இதையடுத்து இக்கிராமத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பொறுமை கார்த்தது போன்று பொதுமக்கள் தொடர்ந்து பொறுமை காக்க வேண்டும்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸார் தம்மாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்றார்.

இதேவேளை, ஆரையம்பதி சிகரம் கிராமத்திலுள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு காணாமற்போன விடயம் தொடர்பாக மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேர்திவத்த தெரிவித்தார்.

கடந்த 10.02.2010 புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரையில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இது விடயத்தில் இன்னும் சில சந்தேகநபர்களை கைது செய்யவேண்டியுள்ள தாகவும் அச்சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

இராணுவ வாகனம் விபத்து சாரதி உட்பட மூவர் காயம்


இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு மதிய உணவினை வழங்கி விட்டு, தியத்தலாவை இராணுவ முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்த இராணுவ வாகனம், ரிதிபான என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இவ்விபத்தில், இராணுவ வாகனத்தில் வந்த சாரதி உட்பட மூன்று பேர் காயங்களுக்குள்ளாகி, பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, விசேட சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேகமாக வந்து கொண்டிருந்த இராணுவ வாகனத்தின் சில்லுகள் இரண்டு கழன்றதினாலேயே, இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்ட பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தின் போது இராணுவ வாகன சாரதி, வாகன இயந்திரத்திற்குள் சிக்கியதினால் பெரும் தீக்காயங்களுடன், ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத். பொருட்களின் விலைக் கட்டுப்பாடு; தேவைகள்;



மாவட்டங்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைக்கட்டுப்பாடு மற்றும் உணவுத் தேவைகள், உணவுப் பாதுகாப்பு குறித்து விசேட கூட்டமொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு உட்பட

நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ங்களிலுமுள்ள மாவட்ட செயலா ளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நிதி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங் களினதும் உணவுத் தேவை மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட் களின் தொகை அத்துடன் உணவுப் பாதுகாப்பு குறித்தும் ஆராயப்பட்டு ள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமான இக்கூட்டம் நேற்றும் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள சனத் தொகைக்கு ஏற்றவாறு உண வைக் கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பாகவும், மேலதிக உணவை பற்றாக்குறை நிலவும் மாவட்ட த்திற்கு பகிர்ந்தளிப்பது குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட் டுள்ளது.


மேலும் இங்கே தொடர்க...

11 பிப்ரவரி, 2010

488 பொலிஸ் நிலையங்களில் தேர்தல் கண்காணிப்புப் பிரிவு - காமினி நவரட்ன



பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள 488 பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் கண்காணி ப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவொ ன்று இன்று முதல் ஆரம்பிக்கப்ப டும் என சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவி த்தார்.

அத்துடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை உள்ளடக் கிய 75 தேர்தல் நடவடிக்கை அலு வலகங்களும் இயங்கும் என தேர் தல் நடவடிக்கைகளுக்கு பொறுப் பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரி வித்தார். அத்துடன் பொலிஸ் நிலைய மட்டத்தில் 413 தேர்தல் முறைப்பாட்டுக்கென விசேட பிரிவுகளும் நிறுவப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்று மட்டத்தில் நிறுவப்படும் விசேட கண்காணிப்பு நிலையத்தின் பணிகள் யாவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம், மாவட்ட பொலிஸ் அலுவலகம், பிரதேச பொலிஸ் நிலையம் என்ற மட்டத்தில் பணிகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்


வடக்கு, கிழக்கில் புதிய கிளைகள்;
சுயதொழிலை ஊக்குவிக்க இலங்கை வங்கி கடன் திட்டம்



வடக்கு, கிழக்குப் பகுதிகளில் புதிய கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே இயங்கி வந்த கிளைகளைப் புனரமைப்பதுடன், புதிதாக 30 கிளைகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வட பகுதியில் வங்கிச் சேவையை மேம்படுத்து முகமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவென எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) யாழ்ப்பாணத்திற்குச் செல்வதாக வங்கியின் தலைவர் கூறினார்.

இலங்கை வங்கியின் எதிர்காலத் திட்டங்கள், இலக்குகள் குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று (11) முற்பகல் கொழும்பிலுள்ள வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மேலும் விளக்கமளித்த விக்கிரமசிங்க, யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு 5 பில்லியன் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

ஐம்பதினாயிரம் முதல் இரண்டரை மில் லியன் வரை கடன் பெற்றுக் கொடுக்கப் பட்டுள்ளது. மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட தொழிற்துறையினருக்கு அவர் களின் தொழில் முயற்சியை மேம்படுத்த கடன் வழங்கப்பட்டுள்ளது.

வடபகுதி மக்கள் தாமாகவே முன்னேற முடியும். அவர்கள் இலங்கை வங்கியை ஒரு வாகனமாகப் பயன்படுத்தி அபிவிருத்தி நோக்கி பயணிக்க முடியும். புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகள் நிலவிய காலகட்டத்திலும் வன்னியில் இலங்கை வங்கியின் கிளைகள் இயங்கின.

கிளி நொச்சி, மல்லாகம், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இயங்கிய கிளைகளை மீளத் திறப்பதுடன் புதிய கிளைகளையும் ஆரம்பிக்கவுள்ளோம். தற்போது வடக்கில் 30 கிளைகளும் கிழக்கில் 34 கிளைகளும் உள்ளன.

மேலும் 30 கிளைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றோம். இலங்கை வங்கி கடந்த 60 ஆண்டு காலமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகிறது. வங்கியின் வளர்ச்சிக்கு வடபகுதி மக்கள் பாரிய பங்களிப்புகளை நல்கியுள்ளார்கள். எதிர்காலத்திலும் அவர் களின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.



ஜி
.எஸ்.பி சலுகை நீக்கப்படலாமென்ற பயப்பிராந்தி அவசியமற்றது




ஆடைக் கைத்தொழில் துறை முக்கியஸ்தர்கள் கருத்து; புதிய உலக சந்தை வாய்ப்பை தேடுமாறும் வேண்டுகோள்
மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படலாம் என்று இலங்கையில் காணப்படும் பயப்பிராந்தி அவசியமற்றது. இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் புதிய உலக சந்தை வாய்ப்புகளை தேடிப்பெற வேண் டும். நேற்று முன்தினம் கொழும்பு ஹில்டன் ஹோட்டல் அரங்கில் இடம்பெற்ற சர்வதேச ஆடைத் தொழில் கண்காட்சி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போது அங்கு உரையாற்றிய ஆடைக் கைத்தொழில் துறை முக்கி யஸ்தர்களினால் இக்கருத்து முன்வைக்கப் பட்டது.

செம்ஸ் குளோபல் நிறுவனத்தின் தலைவரும் குழும முகாமைத்துவ பணிப்பாளருமான மெஹ்ரூன் இஸ்லாம் இது தொடர்பாக தெரிவிக்கையில், ஜி. எஸ்.பி. பிளஸ் சலுகை சுனாமி அனர்த்தத் தின் பின்னர் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒன்றெனவும் இச்சலுகை இல்லா விட்டால் வேறு வழியே கிடையாது எனக் கருதுவது தவறான அணுகுமுறை எனவும் குறிப் பிட்டார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, தென்னாபிரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் என நாம் முயற்சி செய்யாத பல ஆடை ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புகள் உலகெங்கும் உள்ளன. இச் சந்தைகளில் ஊடுருவி புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் முன்வர வேண்டும். நமது ஆடை உற்பத்தித் தரம் உயர் மட்டத்தில் பேணப்படுவதாகவும், தரம் கொண்டதாகவும், உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாகவும் இருக்குமானால் புதிய சந்தை வாய்ப்புகளை பெறுவதில் சிரமம் இருக்காது.

இவை மட்டுமன்றி, பெற்றுக் கொள்ளும் கட்ட ளை களை உரிய நேரத்தில் முடித்து சரியான தருணத்தில் அனுப்பி வைத்தல், வாக்குறு தியை காப்பாற்றுதல் என்பனவற்றிலும் ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்று மதியாளர்கள் நம்பகமாக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் ஜி. எஸ். பி. சலுகையை இழப்பது பற்றி கவலை கொள்ள வேண்டியிருக்காது. இலங்கை ஏற்றுமதியாளர்கள் முயற்சிகளை கைவிட்டு விடக்கூடாது.

இவ்வாறு இங்கு ஊடகவியலாளர் களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மெஹ்ரூன் இஸ்லாமும் ஏனைய பிரமுகர் களும் பதிலளிக்கையில் தெரிவித்தனர்.

ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை இலங்கை இழக்கலாம் என்ற கருத்து நிலவும் காலக் கட்டத்தில் சர்வதேச நாடுகள் கலந்து கொள்ளும் ஆடைத் தொழில் கண்காட்சி கொழும்பில் நடத்தப்படுவது எவ்வாறு சாத்தியமானது என்ற கேள்விக்கு பதிலளிக் கையில், ஆடைத் தொழில்துறையில் இலங்கை சாதகத்தன்மைகளுடன் இருப்ப தையே இது எடுத்துக்காட்டுவதாக இங்கு பதில் அளிக்கப்பட்டது.

கொழும்பு டீ.ஆர். விஜேவர்தன மாவ த்தையில் அமைந்துள்ள கண்காட்சிக் கூடத்தில் எதிர்வரும் மார்ச் 4ம் திகதி முதல் 6ம் திகதி வரை மூன்று பிரிவுகளாக இந்த இலங்கை ஆடை உற்பத்தித்துறை கண்காட்சி நடைபெறுகிறது. சுமார் இருபது நாடுகளில் இருந்து இருநூறு முதல் 500 சர்வதேச பார்வையாளர்களும் கொள்வனவாளர்களும் இந்த இலங்கை ஆடைத் தொழில்துறை கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.


தகவல், ஊடகத்துறை அமைச்சு ஜனாதிபதியால் பொறுப்பேற்பு

தகவல், ஊடகத்துறை அமைச்சை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப் பேற்றுள்ளார். தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா விடுத்த வேண்டுகோளையடுத்தே ஜனாதிபதி மேற்படி அமைச்சைப் பொறுப்பேற்றுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, எதிர்வரும் பாராளுமன் றத் தேர்தலில் நான் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளேன். அதற்கு கால அவகா சம் தேவைப்படுகிறது. அதனால் அமைச்சுப் பதவியில் இருந்து விடுவிக்குமாறு ஜனா திபதியை கோரியுள்ளேன். அதற்கு ஜனா திபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் ஊடக அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்கிறார். எனவே அமைச்சரவை முடிலுவுகளை அறிவிக்கும் இந்த ஊடகவிய லாளர் மாநாடு நான் பங்குபற்றும் இறுதி ஊடகவியலாளர் மாநாடாகக் கூட இருக் கலாம். எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஊடகவியலாளர்கள் அடங்களான சகல தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்றார்.


அரசியல் என்பது சண்டித்தனமோ பழிவாங்குதலோ அல்ல




நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கையை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி
அரசியல் என்பது சண்டித்தனமோ பழிவாங்குதலோ அல்ல. மக்களைப் பயமுறுத்தி அரசியல் நடத்திய யுகத்தை இம்முறை ஜனாதிபதித் தேர்தலோடு நாட்டிலிருந்தே தம்மால் ஒழிக்க முடிந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை நகரில் நேற்று நடைபெற்ற நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க் கையை ஆரம்பிக்கும் மக்கள் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எழுபதுகளில் தமது அரசியல் வாழ்க்கைக்கு ஆசீர்வாதம் வழங்கிய மக்கள் மத்தியில் தற்போது தமது புதல்வரின் அரசியல் வாழ்க்கை ஆரம்ப நிகழ்வில் கருத்துக்களைப் பரிமாறக்கிடைத்தமை தமக்குக் கிடைத்த பாக்கியமெனவும் ஜனாதிபதி குறிப் பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் கூறியதாவது: எவருக்கும் அரசியல் செய்யக் கூடிய உரிமைகள் உள்ளது. எனினும், நாட்டை மீண்டும் பயங்கரவாதி களுக்குக் காட்டிக்கொடுப்பதற்கோ நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைப்பதற்கோ எவருக்கும் உரிமை கிடையாது.

2500 வருடங்கள் பெளத்த உபதேசங்களால் போதிக்கப்பட்ட நன்றியுணர்வுடைய மக்கள் வாழும் இந்த நாட்டில் எப்போதும் வாய்மையே வெல்லும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ; சகல இன, மத, சமூகங்களையும் கொண்ட இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொண்டு இந்நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்ப ணிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, ஆசியாவிலேயே சிறந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அம்பாந்தோட்டை மக்களுடன் இணைந்து தாமும் அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் தெரிவித்த அவர்; தமது அன்பான தாயாரின் நிழலில் கல்விக் கண் திறந்து முதலெழுத்தைப் படித்தது போல் தந்தையாரின் அரவணைப்பிலிருந்து அரசியல் அரிச்சுவடியைக் கற்பதனைத் தாம் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுக்கு முன்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தங்காலை நகரில் அமைந்துள்ள பீ. ஏ. ராஜபக்ஷவின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்த சமரவீர உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையருடன் அமைச்சர் சமரசிங்க சந்தித்துப் பேச்சு




இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தின் முன்னேற்றம் மற்றும் அதனை பேணுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள், அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (10) ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனிதம் பிள்ளையை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இலங்கையில் மனித உரிமைகளை பேணுவதை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் தேசிய செயற்பாட்டு திட்டமொன்றை வகுப்பதில் முன்னேற்றம் காட்டப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு நடை பெற்ற மனித உரிமைகள் சபை கூட்டத்தில் இடம்பெற்ற உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் மீளாய்வு நடவடிக்கைகளின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியின் வெளிப்பாடே இந்த தேசிய செயற்பாட்டு திட்டமாகும்.

இந்த செயற்பாட்டு திட்டத்தின் முதலாவது நகலை பூரணப்படுத்துவது தொடர்பாக இதுவரை எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை மற்றும் அடுத்த கட்டமாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை ஆகியவை பற்றி அமைச்சர் விளக்கமாக கூறினார்.

குறிப்பிட்ட செயற்பாட்டு திட்டம் மேலும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படு வதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தில் ஆலோசிக்கப்பட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமென்று அமைச்சர் கூறினார். இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தின் முன்னேற்றம் மற்றும் அதனை பேணுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள், அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (10) ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனிதம் பிள்ளையை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இலங்கையில் மனித உரிமைகளை பேணுவதை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் தேசிய செயற்பாட்டு திட்டமொன்றை வகுப்பதில் முன்னேற்றம் காட்டப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு நடை பெற்ற மனித உரிமைகள் சபை கூட்டத்தில் இடம்பெற்ற உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் மீளாய்வு நடவடிக்கைகளின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியின் வெளிப்பாடே இந்த தேசிய செயற்பாட்டு திட்டமாகும்.

இந்த செயற்பாட்டு திட்டத்தின் முதலாவது நகலை பூரணப்படுத்துவது தொடர்பாக இதுவரை எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை மற்றும் அடுத்த கட்டமாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை ஆகியவை பற்றி அமைச்சர் விளக்கமாக கூறினார்.

குறிப்பிட்ட செயற்பாட்டு திட்டம் மேலும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படு வதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தில் ஆலோசிக்கப்பட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமென்று அமைச்சர் கூறினார். அரசியல் எல்லைகளுக்கு அப்பால் பரந்துபட்ட ஆதரவை பெறும் வகையில் அனைத்துத் தரப்பினரும் இணங்கக் கூடிய ஆவணமொன்றை தயாரிப்பதே இதன் நோக்கமென்று அமைச்சர் குறிப்பிட்டதுடன் பூரணப்படுத்தப்பட்ட இறுதி நகல் அமைச்சரவைக்கு அதன் கருத்துரை மற்றும் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனிதம் பிள்ளை நாட்டில் மனித உரிமைகளின் நிலை மோதல்களின் பின்னரும் தேர்தலின் பின்னரும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


தேர்தலில் போட்டியிட்டதற்காக
பொன்சேகாவுக்கு விசேட சலுகைகள் வழங்க சட்டத்தில் இடமில்லை




வாதங்களை முன்வைக்கவும்,
தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு
செய்யவும் சட்டத்தில் இடமுண்டு


நாட்டில் கலவரம் வெடிக்கும் என்பதாலோ அரசியல் காரணங்களுக்காகவோ சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்தாமல் இருக்க முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமனாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதற்காக அவருக்கு விசேட சலுகை எதனையும் வழங்க சட்டத்தில் இடமில்லையென ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தின் பிரகாரமே சரத் பொன்சேகா மீது இராணுவ நீதிமன்றத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ சட்டம் 1949 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்படுத்தப்படுகிறது. இராணுவ ஒழுக்கவிழுமியங்களை பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் நோக்கமோ தலையீடோ கிடையாது. இந்த வழக்கில் தமது தரப்பு சாட்சியங்களையும் ஆவணங்களையும் முன்வைக்கவும் அரச தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும் பொன்சேகா தரப்புக்கு அவகாசம் உள்ளது.

இங்கு மனித உரிமை மீறல் தொடர்பாக எதுவித பிரச்சினையும் எழாது. பொன்சேகா தரப்பிற்கு தமது தரப்பு வாதங்களை முன்வைக்க முழுமையான அனுமதியும் வழங்கப்படும். தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது. பொன்சேகாவை பழிவாங்கும் நோக்கத்துடன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரா ணுவத்தில் இருந்த போது செய்த தவறு கள் தொடர்பிலேயே இராணுவ சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவை கைது செய்ததால் நாட் டில் கலவரம் வெடிக்கும் என்பதாலோ குழப்பம் ஏற்படும் என்பதாலோ சட்டத்தை அமுல்படுத்தாதிருக்க முடியாது.

ஜனாதிபதிக்கும் வெளிநாட்டுத் தூதுவர் களுக்கும் எதிராக மாத்திரமே வழக்குத் தொடர்வதற்கு சட்டத்தில் இடமில்லை. பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு விசா ரணையில் அரசியல் தலையீடு எதுவும் இடம்பெறாது. இராணுவம் சுயாதீனமாகவே இந்த விசாரணைகளை முன்னெடுக்கிறது.

பொன்சேகா விவகாரத்தை பூதாகரமாக்கி அரசியல் லாபம் பெற எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

இலங்கை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் தவறான கருத்தை உருவாக்கவும் இலங்கையை மோசமான நாடாக காட்டவும் முயற்சி செய்யப்படுகிறது. இலங்கையுடனான கொடுக்கல் வாங்கலை யும் ஜி.எஸ்.பி. சலுகையையும் நிறுத்தவும் முதலீடுகளை தடுக்கவும் பொருளாதார ரீதியில் இலங்கையை மட்டந்தட்டவும் சதி செய்யப்படுகிறது. இந்த நோக்கங்களை அடைய ஒருபோதும் இடமளியோம் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா, ஜனநாயகத்தை பாதுகாப்பது அரசாங் கத்தின் மட்டுமன்றி எதிர்க் கட்சியினதும் பொறுப்பாகும். ஆனால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டை சுமத்த சில நாடுகள் முயற்சி செய்கின்றன. இதற்கு சாட்சி வழங்க பொன் சேகா தயாராகிறார். ஆனால் இராணுவ ரகசியங்களை ஓய்வுபெற்ற பின்னரும் வெளியிட முடியாது என்றார்.


ஜெனரல்
பொன்சேகாவின் மருமகன் நாட்டை விட்டு வெளியேறத் தடை




சரத் பொன்சேகாவின் மருமகன் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல முடியாத வகையில் தடை செய்யுமாறு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன, குடிவரவு-குடியகல்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஹைகோர்ப் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் விவகாரததில் தனுனவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனுன இரகசியமான முறையில் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றதாகவும், அதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, தனுன திலகரட்ன கோரிய முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக கோரப்பட்ட முன் பிணை மனு கோரிக்கையை கோட்டே நீதவான் நிராகரித்துள்ளார்




ஜெனரல் சரத் கைது : இந்திய காங்கிரஸ்-பாரதீய ஜனதா கட்சிகள் விமர்சனம்



முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவருமான ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக, இந்திய அரசின் சார்பில் இதுவரை கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியும் அந்தக் கைது நடவடிக்கை குறித்து விமர்சித்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதேசிகன் கூறும்போது, "யார் குற்றம் செய்திருந்தாலும், அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்படக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை எதி்ர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.




தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் 16ம் திகதிமுதல் 22ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும்-

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 16ம்திகதி முதல் 22ம் திகதிவரை தபால்மூலம் வாக்களிப்போரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமணசிறி தெரிவித்துள்ளார். தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை நிறுவன அதிகாரிகளின் ஊடாக மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தபால்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களின் பெயர்ப் பட்டியல்கள் அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலகங்களிலும் காட்டிப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மகரகமவில் ஜெனரல் கைதினைக் கண்டித்த ஆர்ப்பாட்டம்மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்-

ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து இன்றையதினம் பிற்பகல் 3.00மணியளவில் கொழும்பு புறநகரான மகரகமை நகரில் ஆர்ப்பாட்டமொன்று ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் நடத்தப்பட்டது. ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கப்படும் வரை நாட்டில் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருப்பதாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் மகரகமையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது பொலீசார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டத்தைக் கலைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் சரத்பொன்சேகாவை விசாரிக்க ஐந்துபேர் கொண்ட குழு-

கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய 5பேர் அடங்கிய விசாரணைக் குழுவொன்றை நியமிக்கவுள்ளார். இந்த விசாரணைக் குழுவில் கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் உள்ளடங்குவதாக உயர்பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளின்போது தமது சார்பில் சட்டத்தரணி அல்லது இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரியொருவரை பொன்சேக்கா தெரிவுசெய்ய முடியும். சரத் பொன்சேக்காவுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதேவேளை போர்குற்றங்கள் குறித்து தான் சாட்சியமளிக்க போவதாக பொன்சேக்கா விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்து தொடர்பாகவும் இராணுவ அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்திவருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் சில யுத்த தோல்விகள் குறித்தும் சில சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இராணுவ நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உட்டுபடுத்தப்பட்டிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் போட்டியிடுவது பற்றி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடனும் ஈ.பி.டி.பி.யுடனும் அரசு பேச்சு-

தஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடனும் ஈ.பி.டி.பி.யுடனும் நேற்றுமுதல் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள சகல கட்சிகளும் இம்முறை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. வட பகுதியில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுட னும், கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாக கிழக்கு முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுடனும் பேசவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை 20லட்சம்பேர் வரையில் பார்வையிட்டனர்-நிதியமைச்சர்

- கண்டி பள்ளேகலயில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்த கிட்டத்தட்ட 20லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மஹிந்த சிந்தனை கொள்கையின்கீழ் அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தி தொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்கியிருந் ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அடுத்த தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பதுளை மாவட்டத்தில் நடத் துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பள்ளேகலயில் நடைபெற்ற கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தவதற்கு உதவிய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் வாக்களிப்புக்கென இடம்பெயர்ந்தோரின் விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் ஆரம்பம்-

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 17ம் திகதிவரை சமர்ப்பிக்க முடியுமென்று தேர்தல்கள் செயலக ஆலோசகர் பந்துல குலதுங்க தெரிவித்துள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் 14மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 08ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காகவும் 2008ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பே பயன்படுத்தப்படுவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. பொதுத்தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 16ம் திகதிமுதல் 22ம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ராஜபக்சேவுக்கு சுஷ்மா சுவராஜ் கோரிக்கை



இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை கொலை செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பீபீஅண்டை நாடான இலங்கையில் இத்தகைய சம்பவம் நடைபெறுவதை, மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளமுடியாதுபீபீ என்று கூறியுள்ளார்.



சந்திரயான் மீண்டும் சாதனை


அகமதாபாத்: சந்திரயான் மூலம் அனுப்பப்பட்ட ‘எம்-3’ கருவி, நிலவில் மெக்னீசிய வகை பாறைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. நிலவில் நீர் மூலக்கூறு இருப்பதை கண்டுபிடித்த சந்திரயானுக்கு இது அடுத்த வெற்றியாக கருதப்படுகிறது. சந்திரயான் ‘எம்&3’ (மூன் மினராலஜி மேப்பர்) என்ற கருவியை நாசா அனுப்பியிருந்தது. நிலவில் தண்ணீர் இருப்பதை இக்கருவி கண்டுபிடித்தது. இந்நிலையில், மெக்னீசிய தனிமம் அதிகம் உள்ள பாறைகள் நிலவில் இருப்பதை ‘எம்&3’ கருவி தற்போது கண்டுபிடித்துள்ளது. சந்திரயான் தொடர்பாக அகமதாபாத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானி கார்லே பீட்டர்ஸ் தெரிவித்தார். சந்திரயான் பயணத்தின் அடுத்த சாதனையாக இது கருதப்படுகிறது.


பதவிக்காக மக்களை துன்புறுத்த வேண்டாம்: ராஜபக்சேவுக்கு புத்த துறவிகள் கண்டனம்


அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சரத்பொன்சேகாவை இலங்கை அரசு திடீரென கைது செய்துள்ளது. அவர் எங்கு சிறை வைக்கப்பட்டு இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பொன்சேகா மனைவி அனோமா கூறியுள்ளார். பொன்சேகா கைதுக்கு ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளன. இலங்கையில் சக்தி வாய்ந்தவர்களாக கருதப்படும் புத்த துறவிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மகாநாயகர் என்று அழைக்கப்படும் புத்த துறவி சித்தார்த்த சுமங்கல தேரா இதுபற்றி கூறியிருப்பதாவது, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்தது ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டுக்கு சேவை செய்த ராணுவ அதிகாரியை கைது செய்த விதம் மிகவும் மோசமானது. தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களை பிரச்சினைக்கு உட்படுத்தி வருகிறது. ராஜபக்சே அரசு நாட்டுக்கு நல்லதை செய்யும் என்று எதிர்பார்த்து தான் நாங்கள் அவருக்கு வாக்குகளை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அரசு அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மக்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிராக சாத்வீக முறையில் தங்கள் எதிர்ப்பை வெளியிட வேண்டும். அதிபர் தேர்தலில் அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சிலர் வீடுகளில் இருந்து வெளியேறி காடுகளில் வசிப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இது கவலை தருகிறது என்று கூறியுள்ளார். உருகம புத்தரகித்த தேரா எனும் இன்னொரு புத்த துறவியும் சரத் பொன்சேகா கைதை கண்டித்து உள்ளார். அவர் அரசு தங்கள் எதிர்ப்பாளர்களை விரோதிகளாக நடத்துவதாக கூறியுள்ளார்.


10.02.2010 தாயகக்குரல்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஜனாதிபதி பதவி ஏற்கும் காலம் 2010 நவம்பர் 19ம் திகதி என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்து பொது தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டபடி பாராளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டதாக அரசாங்கவர்த்தமானி தெரிவிக்கின்றது. வர்த்தமானி அறிவித்தலின்படி
பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் இம்மாதம் 19 திதி முதல் 26ம் திகதி வரை இடம்பெறும். பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட முன்னமே பிரதான கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டன. வேட்பாளர்களை கட்சிகள் அறிவிக்கமுன்னரே வேட்பாளர் என சிலருடை தேர்தல் சுவரொட்டிகள் தலைநகரெங்கும் காணப்படுகின்றன.


ஜனாதிபதி தேர்தலில் இரு வேறு அணிகளாக செயற்பட்ட கட்சிகளின் கூட்டு பொதுத் தேர்தலில் தொடருமா என்பது சந்தேகமே. குறிப்பாக எதிர்கட்சிகள் கூட்டாக போட்டியிடுவதானால் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் அவர்களிடையே முரண்பாடு காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சின்னமான அன்னமா? அல்லது பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானையா பொது தேர்தல் சின்னம் என்பதுதான் எதிர்கட்சிகளிடையே தோன்றியுள்ள இழுபறி நிலைக்கு காரணமாகும்.

யானைச் சின்னத்திலேயே பொது தேர்தலைச் சந்திக்க வேண்டும் என ரணில் தெரிவிக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும்பாலோர் யானைச் சின்னத்தையே வலியுறுத்துகின்றனர். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.). ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு(மங்கள சரவீர), ஜனநாயக மக்கள் முன்னணி;(மனோ கணேசன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன பொது சின்னமாக அன்னத்திலேயே போட்டியிடுவதை விரும்புகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானித்தால் ஜே.வி.பி.; மணிச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கிறது. ஜனநாயக மக்கள் முன்னணி;, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் யானைச் சின்னத்திலே போட்டியிட்டிருந்தன. எனவே அவர்கள் அன்னத்தில் கேட்பதற்கு ஆதரவு தெரிவித்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் சில இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையில் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இருப்பதால்;; வடக்கு கிழக்கில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சில விட்டுக்கொடுப்புக்களை செய்யலாம்.
கிழக்கில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலிலும் மாகாணசபை தேர்தலிலும் ;பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டது. வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி. வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட்டது. பொது தேர்தலில் தனித்த போட்டியிடப்போவதாக ஈ.பி.டி.பி. மற்றும் த.ம.வி.பு. ஆகியன அறிவித்திருந்தபோதிலும் மேற்படி இரு கட்சிகளும் அரசாங்கத்தின் அழுத்தத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்ட ஸ்ரீ காந்தாவும் அவரது சகாக்களும்; சுயேட்சையாக போட்டியிடலாம். இன்னும் சில கட்சிகள் தேர்தல் தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை இன்னமும் வெளியிடவில்லை. பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் எதிர்கட்சி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் இரவு இராணுவப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்தபோது ராணுவ விதிகளை மீறிய குற்றசாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவருடைய கைது தொடர்பாக பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களை சாதகமாகவும், பாதகமாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வு பெற்ற நிலையிலும் இராணுவச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவராவார். ஓய்வு பெற்ற ஆறு மாதங்களுக்குள் அவர் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சுக்கு பூரண அதிகாரமுண்டு. இதன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகா ராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கிறார்.

அண்மையில் சரத் பொன்சேகா பி.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயார் எனத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே சரத் பொன்சேகாவை இலங்கை அரசு கைது செய்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.
பயங்கரவாதக் குழுவிடம் இருந்து இந்த நாட்டை காப்பாற்றிய படையினருக்கு துரோகம் இழைப்பது தொடர்பில் சரத் பொன்சேகா உறுதியாக இருந்தார் என்பது பி.பி.சி. செய்தி சேவைக்கு சரத் பொன்சேகா அளித்த பேட்டியில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகிவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவின் கைது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிமசிங்கா தெரிவித்துள்ளார். ஐ. நா., அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் சரத் பொன்சேகா கைது குறித்து கவலை தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா ராஜாங்க திணைக்கள பேச்சாளர் பிலிப் குறோலி, எந்த நடவடிக்கையும் இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைவானதாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

சரத் பொன்சேகா கைது உள்நாட்டு சட்டவிதிமுறைகளுக்கு அமையவே இடம் பெற்றிருப்பதா கூறும் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம இவ்விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடுகள் தலையிடமுடியாது என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் அனைத்து விதமான விமர்சனங்களையும் முற்றாக நிராகரிப்பதாக தேர்தல் ஆணையாளர் கடந்த மூன்றாம் திகதி பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் மோசடிகள் தொடர்பான சர்ச்சை குறைய இப்போது எதிர்கட்சிகள், சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டதை கருவாக வைத்து அரசுக்கெதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இந்த விவகாரம் சூடுபிடிக்குமா? புஸ்வாணமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

10 பிப்ரவரி, 2010


பொன்சேகாவின் கைதை அரசியலாக்கி தேர்தலில் பயன்படுத்த எதிர்க்கட்சி முயற்சி

கைது அரசியல், தனிப்பட்ட ரீதியானதொன்றல்ல



சரத் பொன்சேகாவின் கைது அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியானதொன்றல்ல. இராணுவச் சட்டதிட்டங்களை மீறிப் பாரிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் உட்பட்டமையே கைதுக்கான காரணமாகுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எனினும் சரத் பொன்சேகாவின் கைதை அரசியலாக்கி, எதிர்வரும் தேர்தலில் அதனைப் பயன்படுத்தும் நோக்கிலேயே எதிர்க்கட்சி பல்வேறு கருத்துக்களை நாடுமுழுவதும் பரப்பி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணை அரசாங்கம் சம்பந்தப்பட்டதல்ல. முழுமை யாக இராணுவம் சம்பந்தப்பட்டது. இதில் சிவில் மக்களை சம்பந்த ப்படுத்த வேண்டாமென சகல அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவி த்தார்.

தகவல், ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்த தாவது:

இராணுவச் சீருடையிலிருந்து கொண்டே அரசியல் நடவடிக்கை களில் ஈடுபட்டமை, முப்படைகளின் தளபதிக்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டமை, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படையினரை ஆயிர க்கணக்கானோருக்குப் பாதுகாப்பளி த்தமை, இராணுவ ஆயுதக் கொள் வனவுகளில் இடம்பெற்றுள்ள மோசடிகள் என பல்வேறு குற்றச் சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிணங்க முறைப்படி விசார ணைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

விசாரணைகள் முடிவுறும் வரை இது குறித்து கருத்துக்களை வெளி யிடக்கூடாது. இன்னும், விசார ணைகள் முற்றாக நிறைவடைய வில்லை என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இராணுவ சட்டதிட்டங்களின்படி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி யொருவர் இராணுவ சட்டதிட்டங் களை மீறுவாறேயாகில் இராணுவப் பொலிஸாரால் அவர் கைது செய்ய ப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் நிமித்தம் இராணுவ நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது வழமையான தொரு நடைமுறையாகும்.

இதன்படி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் இராணுவ சட்டமுறைமைகளுக்கமைந்த செயற்பாடே. எனினும் சிவில் பிர ஜைகளோ அல்லது வெளியாரோ கருத்துக்களை வெளியிடுவது இவ் விசாரணைகளுக்குப் பங்கமாக அமையலாம். விசாரணை முடிவில் அவரது குற்றங்கள் வெளியிடப்படும்.

சரத் பொன்சேகா பி.பி.சி.க்கு வழ ங்கிய பேட்டியொன்றில் அவர் சர்வ தேசம் சென்று சாட்சி சொல்லவும் தயார் எனக் குறிப் பிட்டிருந்ததுடன் சவால்களையும் விடுத்திருந்தார்.

நாட்டின் இராணுவத் தளபதி யொருவர் இவ்வாறு தெரிவிக்க முடியுமா? அவ்வாறு அவர் செயற் பட்டால் நாட்டுக்கு அபகீர்த்தியும் பாரிய நட்டமுமே ஏற்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


பொன்சேகா மீது தாக்குதல் நடத்தவோ இடையூறு ஏற்படுத்தவோ இல்லை
இராணுவப் பொலிஸார் முற்றாக மறுப்பு; மனைவியும் சட்டத்தரணியும் நேற்று சந்தித்துப் பேச்சு



சரத் பொன்சேகாவை கைது செய்யச்சென்ற இராணுவப் பொலிஸார் அவரை தாக்கவோ அல்லது அவருக்கு இடையூறு ஏற்படுத்தவோ இல்லையென்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர் மோசமாக நடத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளை இராணுவப் பொலிஸ் பிரிவு முற்றாக மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இராணுவப் பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

சரத் பொன்சேகாவை கைது செய்யச் சென்ற அதிகாரிகள் அது பற்றி அவருக்கு எடுத்துக் கூறினர். ஆனால், அவர் தொடர்ந்து அவர்களுடன் ஒத்துழைக்கப் பிடிவாதமாக மறுத்ததால் அவருடைய மறுப்பையும் ஏனைய கருத்துக்களையும் பொருட்படுத்தாது அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை கடற்படைத் தலைமைய கத்தில் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான வதிவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை நேற்று முன்தினம் அவரது மனைவி அனோமா பொன்சேகாவும், அவரால் பிரேரிக்கப்பட்ட சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பார்வையிடச் சென்ற அவர்கள் சுமார் 3 மணித்தியாலங்கள் சந்திப்பு நடத்தினர்.

பொன்சேகா கேட்டுக் கொண்டதற்கமைய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்ப ட்டுள்ளது. இவ்வாறு தடுத்துவைக்கப்படும் ஒருவருக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உணவை மாத்திரமே சாப்பிட முடியும் என்று தெரிவித்த இராணுவப் பேச்சாளர், சரத் பொன்சேகாவின் சுகாதார நலன்கள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரி என்ற விடயங்களை கருத்திற்கொண்டு அவர் விரும்பும் உணவை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது இராணுவப் பாதுகாப்பிலுள்ள சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவச் சட்டத்தின் பிரிவு 57 (1) கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார்.






உச்ச நீதிமன்று முன் ஆர்ப்பாட்டம்: குழப்பம் விளைவிக்க ஐ.தே.க., ஜே.வி.பி முயற்சி
கல்வீச்சில் 3 பொலிஸ் உட்பட ஐவர் காயம்; 12 வாகனங்கள் சேதம் கொழும்பு, புதுக்கடை உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயன்ற ஐ. தே. க., ஜே. வி. பி. ஆதரவாளர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது அவர்கள் கற்களை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். சுலோகங்களை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு கற்களை எறிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நடத்திய தாக்குதல்களில் பொலிஸார் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கல்வீச்சுக்களால் மூன்று பொலிஸாரும், இரண்டு சிவிலியன்களும் படுகாயமடைந்துள்ளதுடன் 12 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். பொலிஸாரின் எட்டு வாகனங்களும், பொதுமக்களின் நான்கு வாகனங்களையுமே ஆர்ப்பாட்டக்காரர்கள் சேதப்படு த்தியுள்ளனர் எனத் தெரிவித்த அவர், நிலைமையை கட்டுப்படுத்த கண் ணீர்ப்புகைப் பிரயோகம் செய்யப் பட்டதாகக் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் வாழைத் தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இராணுவ சட்ட விதிமுறை களுக்கு அமைய இராணுவப் பொலி ஸாரால் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகா வுக்கு ஆதரவு தெரி வித்தே நேற்று எதிர்க்கட்சி ஆதரவா ளர்கள் ஆர்ப்பாட் டத்தை நடத்தினர். நீதிமன்றம் என்பதை மறந்து ஆர்ப் பாட்டக்காரர்கள் அந்த இடத்தில் பெரும் அமளி துமளிகளை ஏற் படுத்தியுள்ளதுடன் கல்வீச்சுக்களை நடத்தியுள்ளனர். ஐ. தே. க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, டாக்டர் ஜயலத் ஜயவர்தன, அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளராக களமிறங்கிய சிறி துங்க ஜயசூரிய உட்பட ஜே. வி. பி. ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்தச் சம்பவத்தை செய்தி சேகரிக்கச் சென்ற பல ஊடகவிய லாளர்கள் கல்வீச்சுக்குள்ளானார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து நீதிம ன்றத்தின் செயற்பாடுகளில் ஸ்தம் பிதநிலை காணப்பட்டதுடன் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரி வித்தார். எதிர்க்கட்சியின் இந்த செயற் பாட்டால் கொழும்பு புறக்கோட்டை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பெரும் வாகன நெரிசல் காணப்பட்டது. கல் வீச்சினால் காயப்பட்ட பொலிஸார் மற்றும் பொதுமக்கள் கொழும்பு தேசிய வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.


பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வேட்பாளர் தெரிவில் கட்சிகள் மும்முரம்

ஆசனங்களை பகிர்வதில் தொடர்ந்தும் மந்திராலோசனை



ஏப்ரல் மாதம் எட்டாந்திகதி நடைபெற வுள்ள புதிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

பாராளுமன்றம் நேற்று முன்தினம் (09) நள்ளிரவிலிருந்து தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் செயற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இம்மாதம் 19ம் திகதி முதல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் பிரகட னப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக வேட்பாளர் பட்டிய ல்களைப் பூர்த்தி செய்ய அரசியல் கட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாண மட்டத்தில் வேட்பாளர்களுக்கான நேர்முக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இன்னும் இரண்டொரு தினங்களில் மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்யவுள்ளதாக முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி களுக்கு மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் களைப் பகிர்வது குறித்து, கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறிய அமைச்சர் பிரேம் ஜயந்த், எவ்வாறெனினும் எதிர்வரும் 20ம் திகதிக்குள் வேட்பாளர்கள் நியமனப்பத் திரங்களில் கைச்சாத்திடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணி இன்னும் தீர்க்கமான முடிவு எதனையும் மேற்கொள்ளவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் அளவில் இந்தத் தேர்தலில் வேட்பாளர்க ளைக் களமிறக்கத் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் சகல கூட்டணிக் கட்சிகளுடனும் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இவ்வாரம் முடிவொன்று எட்டப்படுமென்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சகல மாவட்டங்களிலும் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அதன் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டொரு தினங்களில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிக ளிடையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கருத்து முரண்பாடு எழுந்திருந்தது. இந்நிலையில் கூட்டமைப்பால் போட்டியிடுவது பற்றிய தீர்மானம் எதனையும் கூட்டமைப்பு இன்னும் மேற்கொள்ளவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளுந்தரப்புடன் இணைந்து போட்டியிடு வதென ஏற்கனவே தீர்மானித்துவிட்டது. அந்தக் கட்சியின் சார்பில் 9 பேர் தேர் தலில் களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளபோதிலும், இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஆளுந்தரப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் இன்னும் ஆலோ சனை நடத்தி வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றித் தீர்மானிக்க முடியாமல் அதன் உயர்மட்ட கலந்துரையாடலை நிறுத் தியுள்ளது.

ஜனாதிபதியுடன் மீண்டும் சந்தித் துப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்பே இறுதி முடிவெடுக்க ப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.

பாராளுமன்றம் கலைப்பு

பதின்மூன்றாவது பாராளுமன்ற த்தின் ஆயுட்காலம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதியுடன் நிறைவ டைவதால், நேற்று முன்தினம் (09) நள்ளிரவிலிருந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அரசியலமைப்பின் 70 (1) சரத்தின் 11 ம் பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதி காரத்தைப் பயன்படுத்தி பாராளு மன்றத்தை கலைத்துள்ளார்.

இது தொடர்பான விசேட வர்த்த மானி அறிவித்தல் வெளியிடப்ப ட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் ஏப்ரல் எட்டாந்திகதி தேர்தல் நடைபெறு மென தேர்தல்கள் மேலதிக ஆணை யாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி பிதினகரனுக்பீகுத் தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தலில் பிரகட னப்படுத்தப்பட்டுள்ளவாறு வேட் பாளர் நியமனப் பத்திரங்கள் எதிர்வரும் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 105 ஆசனங் களைப் பெற்று வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங் களையும், தமிழ்த் தேசியயகூட்ட மைப்பு 22 ஆசனங்களையும் பெற்றி ருந்தன. ஜாதிக ஹெல உறுமய 9 ஆசனங்களைப் பெற்ற அந்தத் தேர்தலில் 75% மக்கள் வாக்களித் திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜே.வி.பியுடன் இணைந்து 42 இலட்சத்து 23 ஆயிரத்து 970 வாக்கு களைப் பெற்று (45.60 சதவீத வாக் குகள்), ஐக்கிய தேசிய கட்சி 35 இலட்சத்து 04 ஆயிரத்து 200 வாக்குகளையும் (37.83% சதவீதம்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 6,33,654 வாக்குகளையும், ஜாதிக ஹெல உறுமய 5,54,076 வாக்குக ளையும் பெற்றிருந்தன.

புதிய பாராளுமன்றம்

அடுத்த பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் எட்டாந்திகதி நடை பெறுவதுடன் ஏப்ரல் 22ம் திகதி முதலாவது அமர்வு நடைபெறும்.

புதிதாக அமையவிருப்பது 14 வது பாராளுமன்றம். என்றாலும் 1978ம் ஆண்டின் அரசியலமைப்பின்படி ஏழாவது பாராளுமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்திற்குத் தேர்தல் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களும் போனஸ் மூலம் 29 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப் படவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...


என் கணவரின் உயிருக்கு ஆபத்து: பொன்சேகா மனைவி கண்ணீர்




கொழும்பு,பிப்.9: ​ இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட என்னுடைய கணவர் சரத் பொன்சேகா இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை;​ அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன் என்று அவருடைய மனைவி அனோமா கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

​ ​ தலைநகர் கொழும்பில் சில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்க்கிழமை இரவு விவாதித்துக் கொண்டிருந்தபோதே அவரை ராணுவ அதிகாரிகள் சிலர் சிறிய படையுடன் வந்து கைது செய்தனர்.​ அவர்கள் அந்த அறைக்குள் வரும்போதே கதவை உடைத்துக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள்.

​ என்னை ஏன் கைது செய்கிறீர்கள்,​​ என்னைக் கைது செய்ய வாரண்ட் இருக்கிறதா,​​ ராணுவத்திலிருந்து விலகி சாதாரண சிவிலியனாகிவிட்ட என்னைக் கைது செய்வதாக இருந்தால் போலீஸ் அதிகாரிதான் வரவேண்டும் என்றெல்லாம் மறுத்த பொன்சேகாவை அந்த அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.​ ​

​ எங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு கைதாக உடன்பட்டால் அதிக சேதம் இல்லாமல் உங்களை கூட்டிச் செல்வோம்,​​ இல்லாவிட்டால் பலத்தைக் காட்ட வேண்டியிருக்கும் என்று ஒரு அதிகாரி குரலை உயர்த்தி எச்சரித்ததோடு அவரது கையில் விலங்கை மாட்டி தரதரவென்று இழுத்துச் சென்றார்.​ அப்போது உடன் இருந்த பிற அரசியல் தலைவர்களும் தலையிட்டு அதைத் தடுக்க முயன்றனர்.​ ஆனால் ராணுவ அதிகாரிகளோ தடுத்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அவர்களைத் தங்களுடைய பார்வையாலேயே எச்சரித்துவிட்டு பொன்சேகாவையும் அவரது பத்திரிகைச் செயலரையும் கைது செய்து இழுத்துச் சென்றனர்.​ ​

​ ​ அப்போது ஒரு ராணுவ அதிகாரி சரத் பொன்சேகாவின் பிடறியில் அடித்துக் கொண்டே சென்றதாக பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் பின்னர் நிருபர்களுக்குத் தொலைபேசியில் தகவல் கொடுத்தார்.

​ என் கணவரை ராஜபட்ச கைது செய்வார் என்று எதிர்பார்த்தேன்,​​ ஆனால் இப்படி நாயை இழுத்துச் செல்வதைப் போல இழுத்துச் செல்வார்கள் என்று கனவில்கூட நினைக்கவில்லை என்று கூறி விம்மி அழுதார் அனோமா.

​ ​ என் கணவரை அவர்கள் கைது செய்யவில்லை,​​ துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர் என்பதே உண்மை என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

​ பொன்சேகா இப்போது ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார் என்று கூறப்படுகிறது.​ இனி அவருடைய ஆதரவாளர்களும் தேச பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என்றும்,​​ பொன்சேகாவைப் பற்றி புதிய குற்றச்சாட்டுகளைக் கூறினால் உங்களை விட்டுவிடுகிறோம் என்று ஆசை காட்டி அவருடைய ஆதரவாளர்களில் சிலரை அவருக்கு எதிராகத் திருப்ப முயற்சி செய்வார்கள் என்றும் அரசியல் வட்டாரங்கள் அஞ்சுகின்றன.​ ​

​ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றிக்கு பொன்சேகாவும் பொறுப்பு என்று ஊடகங்களும் எதிர்க் கட்சிகளும் கூறியதால்,​​ தனக்குப் போட்டியாக பொன்சேகா வந்துவிடக்கூடாது என்பதில் ராஜபட்ச குறியாக இருந்தார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​ ​ ராஜபட்சவும் அவருடைய தம்பிமார்களும் இலங்கைப் போரைப் பயன்படுத்தி அடித்த கொள்ளையையும் ஊழலையும் பற்றிப் பிரசாரத்தில் பேசினார் என்பதற்காக அவர் மீது கடும் கோபம் கொண்டார் ராஜபட்ச.

​ அத்துடன் ராஜபட்ச அரசின் ஊதாரித்தன நிர்வாகத்தால் விலைவாசி உயர்ந்து மக்களின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்துவிட்டதையும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 90% பேர் அமைச்சர்களாக இருந்து சுகபோக வாழ்க்கை வாழ்வதையும் அவர் ஒப்பிட்டுப் பேசினார்.

​ எல்லாவற்றுக்கும் மேலாக,​​ ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் குறித்து தனக்குத் தகவல் தெரிவிக்காமல்,​​ சர்வதேச உடன்பாடான ஜெனீவா கோட்பாட்டுக்கு முரணாக சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று அவர் கூறிய கடுமையான குற்றச்சாட்டு மனித உரிமைகள் அமைப்புகளால் பேசப்பட்டு இலங்கை அரசுக்குப் பெருத்த தருமசங்கடத்தை ஏற்படுத்தியது.​ அதிபரையும் அவருடைய தம்பியையும் போர்க்குற்றவாளியாகக் கருதி கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழுந்தன.​ ​

​ எனவே சரத் பொன்சேகாவை இனியும் விட்டுவைத்தால் நமக்கு ஆபத்து என்று கருதியே அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு,​​ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி,​​ ராணுவத்திலிருந்து ஓடியவர்களுக்கு சட்டவிரோதமாகப் புகலிடம் தந்தது ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இனி வெளியுலகையே பார்க்க முடியாதபடிக்கு தண்டித்துவிட இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​ ​ பொன்சேகா மீதான வழக்கை சாதாரண நீதிமன்றங்களில் நடத்தினால் அவருக்கு மக்களிடையே ஆதரவு பெருகிவிடும் என்றும் தங்களுக்கு சங்கடம் தரும் பல உண்மைகள் வெளியாகிவிடும் என்றும் அஞ்சியே ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

​ ​ மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ள இலங்கை அரசின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற மனித உரிமைகள் அமைப்பு கண்டித்திருக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...







எது
நடந்ததோ அது நன்றாகவே நடந்தது








எது
நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது







உலக
நீதி மன்றம்


7ஆண்டுக்குபின்

எது
நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
மேலும் இங்கே தொடர்க...
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது



பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் இம்மாதம் 19ம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அடுத்த பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி கூடுகிறது.

96 தமிழ் கைதிகள் விடுதலை

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 96 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 115 பேர் புனர்வாழ்வு அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி நீதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த பல தமிழ் கைதிகள் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 431 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர் சுமார் 200 கைதிகளே எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.



மனைவியும் சட்டத்தரணியும் சிரமமின்றி பார்வையிடலாம்
இராணுவ பேச்சாளர்



சரத் பொன்சேகாவை அவரது மனைவியும், சட்டத்தரணியும் எந்தவித சிரமமும் இன்றி பார்வையிடலாம். இதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு நேற்று வழங்கியுள்ளது என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சரத் பொன்சேகா பாதுகாப்பாக இருப்பதாகவும் அவருக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் முழுமையாக வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். சரத் பொன்சேகாவின் கைது மற்றும் எதிர்காலத்தில் முன்னெ டுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக் கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில் :- பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரி, முன்னாள் இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு கொடுக்கப்பட வேண்டிய சகல வசதிகளும், கெளரவமும் வழங்கப்பட்டுள்ளன. அவர் விரும்பிய ஒருவரை அவர் தனது சட்டத்தரணியாக தெரிவு செய்யவும் முடியும் என்றும் தெரிவித்தார்.



சரத் பொன்சேகா கைது விவகாரம்; சர்வதேச நாடுகள் தலையிட முடியாது



சரத் போன்சேகாவின் கைது விவகாரம் தொடர்பாக சர்வ தேச நாடுகள் தலையிட முடி யாதென வெளிவிவகார அமை ச்சர் ரோஹித்த போகொல் லாகம தெரிவித்தார். உள்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமை யவே இக்கைது இடம்பெற்றி ருப்பதனால் சர்வதேச சக்திகள் இது குறித்து அழுத்தம் கொடு க்க முடியாதெனவும் அமை ச்சர் போகொல்லாகம சுட்டிக் காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரு ம்பியுள்ள அமைச்சர் அமைச் சில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் சமமானவர்கள்.

ஒருவர் பிழை செய்தால் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கமைய அவரை விசாரிப்பதற்கு முறையுண்டு. அந்தவகையில் சரத் பொன்சேகாவை கைது செய்திருப்ப தற்கான காரணத்தை இராணுவத்தினர் தெளிவாக கூறியுள்ளனர்.

தான் கைது செய்யப்பட்டிருப்பதற்கான காரணத்தை சரத் பொன்சேகாவே நன்கு புரிந்து வைத்துள்ளார். இதுவரை எந்தவொரு நாட்டிடமிருந்தும் பொன்சேகாவின் கைது குறித்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை.

சரத் பொன்சேகா என்பதற்காக இல்லை; நாட்டில் எவரும் சட்ட விதி முறைகளை மீறி நடந்தாலும் அவருக்கெதி ராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமையானதாகும். அதன்படியே, இக்கைது இடம்பெற்றிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.





சரத் பொன்சேகா மீதான விசாரணைக்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும்



இராணுவ அதிகாரியொருவர் ஓய்வுபெற்ற ஆறு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க இராணுவ சட்டத்தில் இடம்
சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பதா அல்லது சாதாரண நீதிமன்றத்தில் விசாரிப்பதா என்பது குறித்து இராணுவ சட்டப் பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்ற பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

பொன்சேகாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலத்தை இராணுவ சட்டப் பிரிவினர் பரிசீலித்து அதனை சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி அது பெறப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தின் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே சரத் பொன்சேகா இராணுவப் பொலிஸாரால் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களு க்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

எந்த ஒரு இராணுவ அதிகாரியோ அல்லது வீரரோ சேவையின் போது இராணுவ சட்டங்களை மீறினால் அவர் ஓய்வு பெற்று ஆறு மாத காலத்திற்குள் அவர் மீது இராணுவம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இராணுவ சட்டத்தின் 57 பிரிவு தெளிவாக கூறுவதாக தெரிவித்த அமைச்சர், அந்த சட்டவிதி விதிமுறைகளுக்கு அமைவாகவே பொன்சேகா இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

சரத் பொன்சேகா கைது செய்யப் பட்டமை மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியா ளர் மாநாடு நேற்று பிற்பகல் நடை பெற்றது.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் :-

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்தபோது இராணுவ விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே பொன்சேகா கைதுசெய்யப்பட்டார்.

பாதுகாப்பு சபையானது ஒரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் உச்சமட்ட சபையாகும். முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி தலைமை வகிக்கும் இந்த பாதுகாப்பு சபையில் இராணுவ தளபதியாக இருந்தபோது பொன்சேகா பாதுகாப்பு சபையின் முன்னணி அங்கத்தவராக இருந்தவர். பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருந்தபோது அரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளுடனும் அவர் தொடர்பு வைத்ததுடன் முக்கிய இரகசிய விடயங்களை பரிமாறிக்கொண்டிருந்திருக்கலாம்.

பாதுகாப்பு சபை உறுப்பினர் என்ற ரீதியில் இது அவர் செய்யக் கூடாத ஒன்றாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட் டினார். சரத் பொன்சேகாவுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புகள் உள்ளனவா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள் விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் :-சரத் பொன்சேகா சேவையில் இருந்தபோது அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்துள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. இதுதவிர மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்ப ட்டுள்ளன. அவை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த விசாரணைகள் முடிவுற்ற பின்னர் அது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெளிநாடுகளுடனான தொடர்புகள் தொடர்பில் விசாரணைகளுக்குப் பின்னரே எதுவும் கூறமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவுடன் மேலும் பல இராணுவ மற்றும் சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர். இரகசிய பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இலங்கையின் எதிர்கால நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம்




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ரஷ்ய ஜனாதிபதி உறுதி

* ஜனாதிபதி நேற்று நாடு திரும்பினார்

* எண்ணெய் எரிவாயு அகழ்வுக்கு ரஷ்யா ஒத்துழைப்பு


இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளு க்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் இலங்கை க்கு பல சாதகமான பிரதிபலன் களைப் பெற்றுத் தந்துள்ளதுடன் இரு நாடுகளுக்கி டையிலான நல்லுறவையும் பலப்படுத்தியுள் ளது. ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவின் விசேட அழைப்பினை ஏற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ரஷ்யா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பினார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதை யடுத்து வேகமாக கட்டியெழுப்பப்பட்டு வரும் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு 300 மில்லியன் டொலர் நிதியை இவ்விஜயத்தின் போது ரஷ்யா கடனுதவியாக வழங்க இணங்கியுள்ளது.

அத்துடன் இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிக்கு ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள மையும் இவ்விஜயத்தின் பாரிய வெற்றியாகும். இவ்வகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கு வதற்கு உலகின் பிரசித்திபெற்ற ரஷ்ய எரிவாயு நிறுவனமான ரஷ்ய கேஸ் ப்ரோம் நிறுவனம் முன்வந்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையில் ஊடகத்துறை சார் நவீன தொழில்நுட்பங்க ளைப் பரிமாறிக்கொள்வது தொடர்பில் விசேட ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள முடிந்துள்ளமையும் ஜனாதிபதியின் இவ் விஜயத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிபலனாகும்.

இலங்கையின் நற்பெயரை சர்வதேச மெங்கும் தெரிவிக்கும் மற்றுமொரு நிகழ்வும் இவ்விஜயத்தின்போது இடம்பெற்றுள்ளது. ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவித்தமையே அந்நிகழ்வாகும்.

உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட சேவைகள், பயங்கரவாதத்தை ஒழித்து கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக முன்னெடுத்த பாரிய சேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் மேற்படி கெளரவ பட்டத்தை வழங்கியுள்ளது. இப்பட்டத்தைச் சுவீகரித்துக்கொண்ட உலகின் ஆறாவது அரச தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் கிடைத்த கெளரவமாகும்.

அதேவேளை, உலகிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொடுத்த ரஷ்ய அரச பரம்பரையை நினைவுகூரும் வகையில் அதன் ஞாபகார்த்தமாக தங்கத்தினாலான மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கிரீடமொன்றை ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ரஷ்ய - இலங்கை நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக இருநாட்டுத் தலைவர்களினதும் சந்திப்பைக் குறிப்பிட முடியும். இச்சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதிக்குத் தம் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி; இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுடனான நல்லுறவை மேலும் பலப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ரஷ்யாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க பல இடங்களை ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவினர் பார்வையிட்டதுடன் ரஷ்யாவின் தேசபிதா லெனினின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய மையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான இத் தூதுக்குழுவில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள் ரோஹீத போகொல்லாகம, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம ஜயந்த, ஜீ. எல். பீரிஸ், மஹிந்தானந்த அளுத்கமகே, விமல் வீரவன்ச எம்.பி. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் சிலரும் இடம்பெற் றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...