1 அக்டோபர், 2009

30.09.2009 தாயகக்குரல்21

இந்த நாட்டில் இனவாதம் இருக்கக்கூடாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழிலும் சிங்களத்திலும் அடிக்கடி கூறிவந்தாலும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படாதவரை இனவாதத்தை இல்லாமல் செய்யமுடியாது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே மக்கள் தொடர்ந்து அரசியல் வாதிகளால் இனவாத உரு ஏற்றப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இதிலே தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதற்கு சிங்கள தலைவர்களே காரணம் என தமிழ் தலைவர்கள் சிங்களத் தலைவர்கள்மேல் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் உண்மையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதில் தமிழ் தலைவர்களுக்கும் பங்குண்டு என்பதை மறைக்கமுடியாது.


இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் போனதில் தமிழ் தலைவர்களும் தவறு இழைத்துள்ளனர். கடந்த காலங்களில் தேசியம் பேசிப்பேசியே தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றக் கதிரையை நிரப்பிவந்த தமிழ் மிதவாத தலைவர்களிடம் ஏமாந்த தமிழ் மக்கள் பின்னர் திவிரவாதிகள் பக்கம் சென்றனர். அவர்களும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் யதார்த்தமான அணுகுமுறைகளை கையாளாததால் இன்று தமிழ் மக்கள் முன்னர் அனுபவித்த உரிமைகளையும் இழந்து நிர்க்கதியாக உள்ளனர்.


1994ல் ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்கா இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்தார். அவர் ஜனாதிபதித் தேர்தலின்போதும் அந்த வாக்குறுதியையே அளித்திருந்தார். எனவே அவருடைய காலத்தில் சமாதானம் ஏற்படலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்பட்டது. அவருடைய காலத்தில் சமாதானத்துக்கான வாய்ப்பு ஏற்பட்டபோதிலும் அதை சரியான முறையில் பயன்படுத்த தமிழ் தலைவர்களும் புலிகளும் தவறிவிட்டனர்.
ஜனாதிபதி பிரேமதாசா காலம் முதல் ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா, மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வரையான தலைவர்களும் புலிகளும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் பலதடவைகள் பேச்சுவார்த்தையை மேற்கொண்ட போதிலும் எதுவும் வெற்றியளிக்கவில்லை.
பலமுறை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இறுதிக்காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தை என்பது சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையா அல்லது பாரிய யுத்த தயாரிப்;புக்கான காலஅவகாசமா என்ற பரவலான சந்தேகம் மக்களிடையே காணப்பட்டது.


மக்கள் சந்தேகித்தபடியே 2002 யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் அரசும் புலிகளும் யுத்த தயாரிப்புக்களையே செய்துள்ளனர் என்பது இறுதி யுத்தத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. கிழக்கில் மாவிலாறில் ஆரம்பித்த யுத்தம் வடக்கில் புதுமாத்தளனில் முடிவுற்றது. யுத்தத்தில் புலிகள் அழிக்கப்பட்டதும் தமிழர்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை, தீர்வு எதுவும் தேவையில்லை என்ற குரல்கள் தெற்கில் ஒலிக்கத் தொடங்கின.
மொழி, கல்வி, தொழில், காணி சம்பந்தமான பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு இருப்பதை 1957ல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா அரசு ஏற்றுக்கொண்டதன் பின்னணியில்தான் பண்டா செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து டட்லி செல்வா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம், மற்றும் பொதுசன ஐக்கிய முன்னணி அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தீர்வுத் திட்டம் முதலியவை எல்லாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டதன் பின்னணியேயாகும்.


யுத்தம் முடிந்த பின்னர் இனப்பிரச்சினை பின்தள்ளப்பட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகளை மீள்குடியேற்றுவது தொடர்பான பிரச்சினையே எல்லாத் தரப்பிலும் முன்னிலை வகிக்கிறது. அனைத்து கட்சிகளும் மீள்குடியேற்றம் பற்றியே அரசின்மேல் குற்றம் சாட்டி வருவதால் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய நெருக்கடிகள் அரசுக்கு தற்காலிகமாக குறைந்துள்ளன.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தென்மாகாணசபைத் தேர்தலில் ஆகக்கூடிய பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று வெற்றி பெறவேண்டும் என்பதே அரசின் தற்போதைய இலக்காகும். அடுத்த இலக்கு ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் ஆகிய இரண்டிலும் அதிக கூடிய பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவேண்டும் என்பது. அதன் பின்னரே இனப்பிரச்சினைக்கான அரசின் அரசியல் தீர்வு பற்றிய உண்மையான நிலைப்பாடு தெரிய வரும்.
இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடியும்வரை அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இப்போது அதன் கூட்டாளி கட்சிகளான ஹெலஉருமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகியவற்றையும் அனுசரித்துப் போகவேண்டி நிலையில் அரசு உள்ளது.


இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியால் ஏற்படுத்தப்;பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தமது அறிக்கையின் சாராம்சத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டு அவரின் பதிலுக்காக காத்திருக்கிறது.
ஜனாதிபதியிடம் கையளித்த அரசியல் தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக வெளியிடவேண்டும்; என்று ரணில் கேட்டிருக்கிறார். அறிக்கையை வைத்து ஒரு அரசியல் இலாபம் தேட ரணில் நினைத்திருக்கலாம்.
ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது பொதுத் தேர்தலுக்கு முன்னரோ இனப்பிரச்சினை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை வெளியிட்டு மக்கள் ஆதரவை குறைத்துக்கொள்ள ஜனாதிபதி விரும்பமாட்டார்.
அதேவேளை யுத்தம் முடிவுற்றதால் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் அரசு தாமதம் காட்டினாலும் சர்வதேச சமூகம் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதில் அக்கறை காட்டுகின்றன. ஆனால் இவர்களுடைய அக்கறை நிரந்தரமானது என எதிர்பார்க்கமுடியாது.


ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு முன்பாகவே இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு யோசனையை முன்வைக்கவேண்டும்; என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிக்கும்வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதில்லை என்ற தோரணையில் இலங்கை ஜனாதிபதி நடந்துகொள்வது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என அமெரிக்கா தெரிவிக்கிறது.
ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் எதிர்பார்க்கலாம். ஆனால் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்தப்படவேண்டும்.
என்ன நிர்ப்பந்தம் இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலும்;, பொதுத் தேர்தலும் முடிந்த பின்னரே இனப்பிரச்சினை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை எதிர்பார்க்கலாம்.

மேலும் இங்கே தொடர்க...
யாழ்தேவி பாதையை மீளமைக்க விடுக்கும் அழைப்புக்கான ஊடக பிரசாரம் நேற்று கொழும்பில் ஆரம்பம்


'உத்துரு மித்துரு தெற்கின் தோழன் இதயத்திற்கோர் டிக்கெட்' யாழ்தேவியின் பாதையை மீளமைத்திட விடுக்கும் அழைப்புக்கான ஊடக பிரசார விளம்பரத்தின் அங்குரார்ப்பண வைபவம் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் அடிப்படையில், போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில், வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைக்கும் தாண்டிக்குளம் முதல் காங்கேசந்துறை வரையிலான 154.89 கிலோ மீற்றர் ரயில் பாதையை மீள நிர்மாணிக்கும் திட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதற்கென இலங்கை மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கவென, அவர்களுக்குப் போதிய விளக்கத்தினை அளிப்பதே இவ் ஊடக விளம்பரத்தின் பிரதான நோக்கமென இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்நிகழ்வில் ஓமந்தை தொடக்கம் காங்கேந்துறை வரையான ரயில் நிலையங்களை மீளமைக்கும் திட்டத்தைப் பொறுப்பேற்றிருக்கும் நிறுவனங்களுக்குப் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும உத்தியோக பூர்வமாக அது தொடர்பான பணிகளைக் கையளித்தார்
புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கக் கூடாது : அமெ. அரசு தெரிவிப்பு




தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ் தொழிற் கட்சி ஆகிய தடை செய்யப்பட்ட இயங்கங்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என ஒபாமா அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

குறித்த இரண்டு அமைப்புக்களுக்கும் ஆதரவு வழங்கப்பட வேண்டுமென லொஸ் ஏஞ்சல்ஸை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்க நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளன.

எனினும், இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும், 2010ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் இந்த வழக்கு விசாரணைகள் மீதான தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இவ்வாறு பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவோருக்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுட் காலம் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானதென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், குறித்த இரண்டு அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவதைச் சட்ட ரீதியாக அங்கீகரிக்குமாறு அமெரிக்க மனித உரிமை நிறுவனம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சட்ட அங்கீகாரம் வழங்குமாறு தெரிவித்து குறித்த நிறுவனம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இடம்பெயர்ந்தோரை நாகரிகமான முறையில் மீள்குடியமர்த்த வேண்டும் : எஸ்.எம். கிருஷ்ணா


வடபகுதியில் இடம்பெயர்ந்தோர் நாகரிகமான முறையில் மீள் குடியேற்றப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் முகாம்களில் தங்கியுள்ள மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்கும் என இந்தியா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகாம்களில் தங்கியுள்ள 2,50,000 அப்பாவித் தமிழ் பொதுமக்களை மீள்குடியேற்றும் முயற்சிகளுக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்தோர் விவகாரத்தில் கூடுதல் அவதானம் செலுத்தும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களைப் போன்றே இலங்கை இடம்பெயர்ந்தோருக்கு இந்தியா சகல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்
போர்ச் சூழலில் பாலியல் வன்முறைகளைத் தடுக்க விசேட பிரதிநிதி : ஐ.நா.சபையில் தீர்மானம்


உட்பட்ட நாடுகளில் யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகள் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், இவை இடம்பெறுவதைத் தடுக்கும் முகமாக பாலியல் வல்லுறவுகள் தொடர்பிலான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க, ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



ஆபிரிக்காவின் ருவான்டாவில் மாத்திரம் 1990 ஆண்டு காலப்பகுதியில், ஐந்து லட்சம் பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்குப் பலியாகியுள்ளனர்.

சியாரோ லினோனில் 64 ஆயிரம் பெண்கள் இவ்வாறான துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் பெணகள் தொடர்பான இந்தப் பிரச்சினை ஆபிரிக்காவுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், இலங்கை மற்றும் பர்மாவிலும் யுத்தத்தின் போது ஓரு ஆயுதமாகப் பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் பால்மா உட்பட உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு-- ஜே.வி.பி.


வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் பால்மா உட்பட உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2,000 ஆயிரம் ரூபாவுக்குக் கூட சிறுவர்களுக்கான பால்மாவினைப் பெற்றுக்கொள்ள முடியாத அவலநிலை அங்கு உருவாகியுள்ளது என்று ஜே.வி.பி எம்.பி.யும், இடம்பெயர் முகாம் மக்களின் நலன்பேணும் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டாளருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகவுள்ள பருவ மழையினால் முகாம் வாழ் மக்களின் நிலைமை இன்னமும் மோசமடையும். அரசாங்கத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்பிலான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இடம்பெயர் முகாம் மக்களின் நலன் பேணும் மத்தியநிலையத்தின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று புதன்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டாளரும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறியதாவது: கடந்த கால உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தற்போது முகாம்களில் வாழும் அப்பாவி பொதுமக்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் மந்த போக்கை கடைப்பிடித்ததனால் நிலைமை மோசமடைந்துகொண்டே வருகின்றது. எமது மத்திய நிலையத்திற்கு இதுவரையில் 723 முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை அவற்றின் பெரும்பாலானவை காணாமல் போதல் தொடர்பாகவும் விரைவான மீள்குடியேற்றம் தொடர்பானதாகவே உள்ளமை. முகாம்களில் உணவுத்தட்டுப்பாடு தலைதூக்கி உள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சிறுவர்களுக்கான பால் மாவுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாவிற்கு கூட பால்மா பைக்கற்றுக்களைப் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. சுமார் 50 குடும்பங்கள் குழுவாக சமைத்து உண்ண வேண்டிய நிலை காணப்படினும் அதற்கான அத்தியாவசிய உணவுப்பொருட்களோ சமையல் உபகரணங்களோ இல்லாத நிலை காணப்படுகின்றது.

சமைப்பதற்கு விறகு தேடவேண்டிய தேவை காணப்படினும் அதற்கு அனுமதி கிடைப்பது இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளின் ஒன்றே கடந்த சனிக்கிழமை குறிப்பிட்ட முகாம் ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் வரை சென்றுள்ளது. ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் கூறும் கருத்தோ உண்மைக்கு புறம்பானதாகும் சதோச போன்ற விற்பனை நிலையங்கள் முகாம்களில் காணப்பட்டபோதிலும் மக்களிடையே போதியளவு பண வசதி இன்மையால் பயன்பெறமுடியாத நிலை உள்ளது.

மலசலகூடங்களின் நிலை

70 ஆயிரம் பேருக்கு 200 மலசலகூடங்களே காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை நிரம்பி வழிகின்றன. உடைகளுக்கு பாரியளவு தட்டுப்பாடுகள் காணப்படுகின்றது. ஆண்களுக்கு கிரம் வழங்கப்படுவதாகவும் பெண்களுக்கு அதுவும் வழங்கப்படவில்லை என்றே தெரியவருகிறது. அதேபோன்றே அரசாங்கத்தின் மீள் குடியேற்ற பணிகளிலும் நம்பகத்தன்மை காணப்படவில்லை. வடக்கின் பிரதேசங்களில் மிதி வெடிகளை காரணம் காட்டி மீள்குடியேற்றத்தை தாமதப் படுத்தும் அரசாங்கம் அதே நேரம் ""வடக்கின் வசந்தத்தின்''கீழ் அதே பிரதேசங்களில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி வருகின்றது.

மெனிக்பாம் முகாம்களில் இருந்து அண்மையில் 60 ஆயிரம் குடும்பங்களை அரசாங்கம் மீள் குடியேற்றியதாக கூறுகின்ற போதிலும் உண்மையில் அங்கு மீள்குடியேற்றம் ஒன்று இடம்பெறவில்லை. மீள்குடியேறுவதாக கூறி கைதடி, மிருசுவில் போன்ற பிரதேசங்களிலுள்ள முகாம்களில் இவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதேபோன்றே கிழக்கு பகுதிகளிலும் நிலைமை காணப்படுகின்றது.

20 ஆயிரம் பேர் முகாம்களில் இருந்து ஓடிவிட்டதாகவும் அரசாங்கம் கூறிவருகின்றது. மீள்குடியேற்றம் தொடர்பாகவும் இடம்பெயர் முகாம்களை பராமரிப்பது தொடர்பாகவும் இந்த அரசாங்கத்திற்கு எவ்விதமான அடிப்படை அறிவுமே கிடையாது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையால் முகாம் மக்களின் பிரச்சினைகள் கட்டுப்படுத்த முடியாதளவு விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இதனால் சர்வதேச தலையீடுகளும் அதிகரிக்கும்.

Wednesday, September 30, 2009

இந்தோனேஷியா, பசுபிக்தீவில் பு+கம்பம் 13 அடி உயரத்திற்கு மேல் சுனாமி அலை

150 பேர் வரை பலி; கிராமங்கள் தரைமட்டம்: மேலும் பலர் புதையுண்டிருக்கலாமென அச்சம்

பசுபிக் பெருங்கடலிலுல், இந்தோ னேசியாவின் தென் பகுதிக் கட லிலும் பாரிய பூகம்பங்கள் ஏற்பட்டு ள்ளன.

இதில் 113க்கும் அதிகமானோர் கொல் லப்பட்டு மேலும் நூற்றுக்கணக்கா னோர் காயமடைந்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் உள்ள சமோவோ தீவில் 8.3 ரிச்டர் அள விலான பாரிய பூகம்பம் இலங்கை நேரப்படி நேற்று முன்தினமிரவு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் இலங்கை நேரப்படி நேற்றுப் பிற்பகல் 3.46 இற்கு பத்தான் நகருக்கு அருகில் 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட் டது. இது கொழும்பிலிருந்து 2380 கிலோ மீற்றர் தொலைவில் இலங் கைக்குத் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.85 கிலோ மீற்றர் கடல் ஆழத்திலேயே இந்தப் பூகம் பம் ஏற்பட்டுள்ளது.

பூகம்பத்தினால் 10 நிமிடங்கள் வரை அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய் தியால் இலங்கையிலும் கரையோரப் பிரதேசங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பி.ப. 4.10 மணி அளவில் இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், 5.10 மணி அளவில் வாபஸ்பெறப்பட்ட தாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்தது.

அமெரிக்காவின் பசுபிக் பெருங் கடல் தீவான சமாவோவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள னர். பல கிராமங்கள் முற்றாக அழி ந்துள்ளன. நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

நியூசிலாந்துக்குக் கிழக்கே இருக்கும் இந்தக் குட்டித்தீவின் தென் கிழக்கே 120 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இல ங்கை நேரப்படி நேற்று முன்தினம் நள் ளிரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நில அதிர்வு 8.3 ரிச்டர் அளவில் பதி வாகியுள்ளதாகவும் அமெரிக்க பசுபிக் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்தது.

கடலோரத்தில் உள்ள பகுதிகளில் இராட்சத அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். நூற்றுக்கணக் கானோரை காணவில்லை. சில உடல்கள் மண்ணில் பாதி புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளன. மண்ணுக்குள் பலர் புதைந்திருக்கலாம் என்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

சுனாமி அனர்த்தத்தால் சிக்கித் தவிக்கும் மக்களுக்குத் தேவையான நிவாரண உத விகளை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டு விமானப் படை யினருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து சி 130 விமானங்கள் நிவாரணப் பொருட்க ளுடன் சமாவோ போய்ச் சேர்ந்தன.

இதேவேளை, டொங்கன் தீவில் 13 அடி உயரத்திற்கும் கடல் அலைகள் மேலெழும்பி யதாகவும் இதில் ஐந்து பேர் பலியானதாகவும் நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்தது.

ஜப்பானில் சூறைக்காற்று

இதேவேளை, ஜப்பானிய அரசாங்கம் கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பாடசாலைகள் மூடப்பட்டதுடன் மீனவர்கள் கரைக்குத் திரும்பியதாக அறி விக்கப்பட்டது. ஜப்பானில் சூறைக்காற்று வீசியதுடன், கடும் மழையும் பெய்ததால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தோனேஷியாவில் பூகம்பம்

அதேநேரம், நேற்றுப் பிற்பகலில் இந் தோனேஷியா, இந்தியா, மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தோனே ஷியாவில் 7.9 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதாக வானிலை அவதான மையம் அறிவித்தது. எனினும், பாதிப்புகள் குறி த்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

நியூசிலாந்து அரசாங்கம் இந்தச் சுனாமி யின் தாக்கம் இங்கும் உணரப்பட்டதாக அறிவித்துள்ளதுடன் ஐந்து பேர் இதில் காயங்களுக்குள்ளானதாகவும் அறிவித்துள்ளது. இப்பிரதேசம் முழுதும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்களை விளிப்புடன் இருக்கும்படி அறிவிக்கப்பட்டது. சமோவோத் தீவில் கடல் பாரிய இரைச்சலுடன் குமிறியதாகவும் மலை போன்ற உயரத்தில் கடல் அலைகள் எழும்பியதாகவும் அறிவிக்கப்பட்டது.

காணாமல் போனோரைத் தேடும் பணிகள் முடிவடைந்த பின்னரே உயிரிழந் தோரின் சரியான எண்ணிக்கையை அறிய முடியுமென மீட்புப் பணியாளர்கள் தெரி வித்துள்ளனர். மீட்கப்பட்ட பிரேதங்கள் பொது இடங்கள் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. சொந்தங்களை இழந்தோரின் விபரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன
மேலும் இங்கே தொடர்க...

29 செப்டம்பர், 2009

மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான ரயில் சேவை மாற்றம்
மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான பாடும்மீன் மற்றும் உதயதேவி கடுகதி ரயில் சேவைகளில் நாளை ஒக்டோபர் முதலாம் திகதி வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத தினைக்களம் அறிவித்துள்ளது.

இம் மாற்றத்தின் பிரகாரம் பாடும்மீன் நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரதம் தினமும் மாலை 7.15 ற்கு கொழும்புக் கோட்டையிலிருந்து புறப்டப்டு மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தைச் சென்றடையும்

மட்டக்களப்பிலிருந்து இரவு 8.15 ற்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 ற்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையததைச் சென்றடையும் வகையில் இரவு நேர ரயிலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

உதயதேவி நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவையைப் பொறுத்த வரை காலை 8.45 ற்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு மாலை 4.40 ற்கு மட்டக்களப்பைச் சென்றடையும்; .

அதே வேளை மட்டக்களப்பிலிருந்து காலை 7.45 ற்கு புறப்பட்டு மாலை 4.10 ற்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையததைச் சென்றடையும் வகையில் பகல் நேர ரயிலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் பிரதம அதிபரான அருனாசலம் சிவனேசராஜா தெரிவிக்கின்றார்

புதிய மாற்றத்தின் கீழ் இது வரை காலமும் இரவு நேர ரயிலில் இனைக்கப்பட்டிருந்த படுக்கை வசதிப் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட வேண்டும் எனக்கோரி, அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை மாலை கை விட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் அனுராதரபுரத்திற்கு விஜயம் செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்பே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் இந்தப் பிரச்சினை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக ஐந்து வார கால அவகாசம் கோரி, அக்காலப்பகுதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு எப்படியும் முடிவு காணப்படும் என அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்குத் தமிழ் அரசி்யல் கைதிகள் முன்வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளின் நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் கோரியுள்ள கால அவகாசத்தினுள்ளே தமது பிரச்சினைக்கு முடிவேற்படாவிட்டால் தாங்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அனுராதபுரத்தில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி செவ்வாய்க்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...
இன்று மட்டு. முகாம்கள் மூடப்பட்டன : மக்கள் சின்னக்குளத்தில் தற்காலிகமாக குடியமர்வு


மாகாணத்தில் 2006ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த அனைத்து இடைத்தங்கல் முகாம்களும் இன்றுடன் மூடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் இன்று கொக்குவில் முகாம் மூடப்பட்டு அங்கு இறுதியாகத் தங்கியிருந்த சம்பூர், கடற்கரைச்சேனை மற்றும் கூனித்தீவு ஆகிய கிராமங்களின் 97 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேர் 15 பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டு மூதூர் பிரதேச செயலக அதிகாரிகளிடம் வெருகலில் வைத்து ஒப்படைக்கப்பட்டனர் என மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வுத் திட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஷரீப் தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இக்குடும்பங்கள் தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற முடியாத நிலையில் சின்னக்குளத்தில் தற்காலிகமாக குடியமர்த்தப்படவிருக்கின்றார்கள்.

இதற்கென அங்கு இடைத்தங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு நேரடியாக இவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல் மற்றும் ஈச்சிலம்பத்தை ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 7,300 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரம் பேர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து 75இற்கும் மேற்பட்ட முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம், விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பின்பு இக்குடும்பங்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த வருடம் முற்பகுதியில் முடிவடைந்தன.

இருப்பினும் மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 1523 குடும்பங்களைச் சேர்ந்த 6074 பேரில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இக்குடும்பங்களை அப்பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டாலும் 123 குடும்பங்களைக் கொண்ட 465 பேர் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். சுய விருப்பத்தின் பேரில் அவர்களையும் அடுத்த வாரம் அந்தந்தப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நீடிப்பு : ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆராயும்
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நீடிப்பது பற்றி பரிசீலனை செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழு இந்த வருட இறுதியில் இது சம்பந்தமாக இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த மாத நடுப்பகுதியில் இது தொடர்பாகக் கூடி ஆராய இருக்கிறது.

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன.

இலங்கைக்கு மேற்படி வர்த்தக சலுகை வழங்கப்பட வேண்டுமா என்பது பற்றி அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆராயும். அதன் பின்னர் அது பற்றி இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு மேலும் இரண்டு மாதங்கள் செல்லும் என்று இவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மேற்படி வர்த்தக சலுகையைப் பெறுவதற்காக பிரஸ்ஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம் அரசாங்கத்தின் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மனித உரிமைகளைப் பேணுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கிக் கூறி, மிக முக்கியமான வர்த்தக சலுகையை பெற்றுக் கொள்வதற்கென அண்மையில் அமைச்சர்கள் மட்ட குழு ஒன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது
அமைச்சர்களின் பாதுகாப்பு செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் : மங்கள சமரவீர

- "யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்காக 50 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அதிகமான குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறைக்கப்பட வேண்டும்" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் எம்.பியுமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

இலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பிலும் இதனால் நாட்டில் ஏற்படும் பாதுகாப்பு செலவினம் குறித்தும் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ராஜகிரிய ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு கூட நமது நாட்டு ஜனாதிபதிக்கான பாதுகாப்புகளைப் போல் வழங்கப்படவில்லை. ராஜபக்ஷ குடும்பத்துக்கான பாதுகாப்பும் அந்த குடும்பங்களின் உறவினர்களில் இருந்தே பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிப்பதும் வரையறையை மீறுவதாக உள்ளது.

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கென குவிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை 50 ஆகக் குறைப்பதன் ஊடாகவும் அதேபோல் அநாவசிய வாகன விரயத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவரது பாதுகாப்புக்கென வழங்கப்பட்டிருக்கும் வாகனங்களை ஐந்தாக குறைப்பதற்கும் தேசிய பாதுகாப்பு சபைக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன்.

நாட்டின் நலன்கருதி தேசிய பாதுகாப்பு சபை, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான் முறைப்பாட்டினைச் சமர்ப்பிக்கும் போது, அது தொடர்பான விசாரணைகளை நேரடியாக நடத்தும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும்.

சூழ்நிலைக்கேற்ப, பாதுகாப்பு செயலாளர், படை அதிகாரிகள் ஆகியோர் இது தொடர்பில் கலந்தாலோசித்து ஒரு தீர்வினை எடுக்க வேண்டும்.


விமான சேவைகள் நஷ்டம்

இதுவரை காலமும் இலாபத்தில் இயங்கிவந்த நிறுவனங்கள் இன்று நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதற்குக் காரணம் இன்றைய அரசாங்கமே.

1980 ஆம் ஆண்டிலிருந்தே விமான சேவையாற்றிவரும் நிறுவனம் இலங்கை விமான சேவை. இன்று இது நஷ்டத்தில் இயங்கும் நிலை தோன்றியுள்ளது.

வெளிநாடுகளிடம் கடன்வாங்கி அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இன்று கொழும்புத் துறைமுகம் வீழ்ச்சி அடைந்து காணப்படுகின்றது. துறைமுக ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தென்மாகாண சபை தேர்தலுக்காகப் பல அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு மோசடிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்
மேலும் இங்கே தொடர்க...
widgeo

வடக்கின் அபிவிருத்தியைத் துரிதப்படுத்த சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புல்டோசர், பெக்கோ இயந்திரங்களை படத்தில் காணலாம். 2353 மில்லியன் ரூபா செலவில் இவ்வியந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ், பிரான்ஸ் அமைச்சர்கள்
போகொல்லாகமவுடன் சந்திப்பு

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குச்னர், பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரை அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்துப் பேசியுள்ளார்.

நியூயோர்க்கில் வெள்ளியன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப் பின் போது வடக்கில் இடம்பெயர்ந் தவர் களின் நிலை தொடர்பாக ஆராயப் பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

(விரிவான செய்தி உள்ளே)

பிரிட்டிஷ், பிரான்ஸ் அமைச்சர்கள்

போகொல்லாகமவுடன் சந்திப்பு

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குச்னர், பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரை அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்துப் பேசியுள்ளார். நியூயோர்க்கில் வெள்ளியன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது வடக்கில் இடம்பெயர்ந்தவர் களின் நிலை தொடர்பாக ஆராயப்பட்ட தாக வெளிவிவகார அமைச்சு தெரி வித்துள்ளது.

வடக்கில் செயற்படுகின்ற மனிதாபிமான அமைப்புகள் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களின் தேவையின் அடிப்படையில், தடையின்றிக் கிடைக்கும் வகையில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனரென அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பயங்கரவாத அமைப்பிலிருந்து சரணடைந்துள்ளவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கே இதன் போது கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் போகொல்லாகம இதன் போது குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமென பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதகதியில் முடிவடையும் பட்சத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த முடியுமென அமைச்சர் கூறினார்.

கண்ணிவெடியகற்றும் பணிகளுக்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உதவி வரும் பட்சத்தில் இன்னும் பல நாடுகளின் உதவிகள் கோரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

இதேவேளை இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்வைக்கப்படவிருக்கும் அரசியல் தீர்வு குறித்தும் அமைச்சர் குச்னர் மற்றும் மிலிபான்ட் ஆகியோருக்கு விளக்கமளித்துள்ளா

சகல மக்களினதும் எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றும் தீர்வு விரைவில்

ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் உரை நாட்டுக்கே உரிய தனித்தன்மையான தீர்வு
இடம்பெயர்ந்தோரை பாதுகாப்பாக மீள் குடியேற்றுவதில் அரசு முன்னுரிமை

மூன்று தசாப்தகாலமாக நீடித்த பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த செயற்பாடுகளை தடுக்க சில தரப்பினர் மறைமுகமாக சதி செய்து வருவது கவலைக்குரிய விடயம் என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 64வது அமர்வில் கலந்து கொண்ட பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க மேற்கண்டவாறு கூறினார். இங்கு உரையாற்றிய பிரதமர் ரத்னசிறி மேலும் கூறியதாவது,

உலக பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக காணப்பட்ட நிலையிலே இலங்கை அரசாங்கம் புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்தது. இதன் பலனை இலங்கை மட்டுமன்றி சமாதானத்தை விரும்பும் சகல சர்வதேச சமூகத்தினரும் அனுபவிக்கின்றனர்.

மோதல்கள் முடிவுற்ற நிலையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எம்முன் உள்ள முக்கிய சவால்களாகும்.

மோதல் முடிவடைந்த பின்னர் எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகவும் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் நாம் ஐ.நா.வுடன் பேச்சு நடத்தினோம். இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பாகவும் கெளரவமாகவும் மீள்குடியேற்றும் நடவடிக்கைக்கு எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப இடம்பெயர்ந்த மக்களுக்கு வசதிகள் அளிக்கப்படுவதோடு, இந்தப் பணிகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சமூக அமைப்புகள் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன. சர்வதேச தரப்பின் ஒத்துழைப்பு டன் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்றுவதே எமது நோக்கமாகும்.

மீள்குடியேற்றல், அபிவிருத்தி, அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்குதல், மறுசீரமைப்பு, நிரந்தர சமாதானம், பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (விரிவான செய்தி உள்ளே)

சகல மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வு துரிதம்

ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர்

பயங்கரவாதம் முழுமையாக ஒடுக்கப்பட்டுள்ள சகல பிரதேசங்களிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் தேர்தல்கள் நடத்தப்படும்.

இலங்கை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாக செயற்பட்டு வருகிறது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இலங்கைக்கு பொருத்தமான முறையில் சமூக சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.

மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தவும் நாட்டின் ஏனைய மக்கள் போல தடையின்றி தமது பணிகளை மேற்கொள்ளவும் உரிய சூழல் ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.

படையில் சேர்க்கப்பட்ட புலிகளுக்கு புதிய வாழ்க்கை நிலையை உருவாக்குவதற்காக புனர்வாழ்வுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐ. நா.வினதும் தொண்டு நிறுவனங்களினதும் ஒத்துழைப்புடன் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தேசிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களின் பின்னர் முதற் தடவையாக நாட்டிலுள்ள சகல மக்களினதும் அரசியல், பொருளாதார தகைமைகள் மற்றும் ஆளணியை நாட்டின் நலனுக்காக பயன்படுத்த இலங்கை தயாராகி வருகிறது.

மீள்குடியேற்றல் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக உதவி வழங்கும் நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றன.

கிழக்கு உதயம் திட்டத்தின் கீழ் தேசிய பொருளாதாரத்திற்கு கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் பலம் வாய்ந்த புதிய பொருளாதாரமொன்றை இந்த வருடத்தினுள் ஏற்படுத்துவதற்காக வடக்கின் வசந்தம் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார்.

மோதல்கள் முடிவுற்றுள்ள நிலையில் சகல மக்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்குமென நீண்டகால அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வ கட்சிக் குழுவினூடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதன் யோசனைக்கு சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டை பெறமுடியுமென அரசாங்கம் நம்புகிறது. இதனூடாக ஏற்படுத்தப்படும் தீர்வு எமது நாட்டுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த தீர்வாக இருக்க வேண்டும்.

உலக மயமாக்கல் உட்பட சர்வதேச மட்டத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டுள்ள பிரச்சினைகளை ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும். பயங்கரவாதம், உலக பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற சர்வதேச மட்ட நெருக்கடிகளுக்கு சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

புலிகள் இயக்கம் இலங்கையில் மேற்கொண்ட நாசகார வேலைகளுக்கு சர்வதேச மார்க்கங்களினூடாகவே நிதி உதவி கிடைத்துள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளினூடாக புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் குழுக்கள் புலிகளுக்கு நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கி வந்துள்ளன. புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள் தொடர்ந்தும் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு சில புலி உறுப்பினர்கள் தாமிருக்கும் நாடுகளில் இருந்து கொண்டு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை முறியடிக்க தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச நட்பு நாடுகளிடமும் ஏனைய தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.

மனிதாபிமான நடவடிக்கைகள் என்ற பெயரில் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் முறையற்ற ரீதியில் பணம் திரட்டி வருகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க எமது நட்பு நாடுகள் முன்வர வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச மட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட வேண்டியது அவசியமாகும்.

உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஐ. நா.வின் பிரதான குறிக்கோள் என இலங்கை கருதுகிறது. உலகம் முழுவதும் காணப்படும் தீர்க்கப்படாத பெருமளவான பிரச்சினைகள் குறித்து ஐ. நா. கவனம் &:Vr> வேண்டும்.

பலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் இஸ்ரேல் - பலஸ்தீன சமாதானம் என்பன தொடர்பில் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில் குறைந்த கவனமே செலுத்தப்பட்டன. இதனால் எமது எதிர்பார்ப்புகள் சிதைந்துவிட்டன.

கிழக்கு உள்ளூர் அலுவலர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்ப ஐக்கிய அமெரிக்கா உதவி
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி (USAID), கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூர் அலுவலர்களின் ஆற்றலைப் பலப்படுத்தும் பொருட்டு, இரண்டு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அனுசரணை வழங்கியது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் ஆதரவுடன் நடத்தப்பட்ட, இரண்டு வதிவிட செயலமர்வுகள், கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுள் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவற்றைச் சென்றடைந்தன.

உள்ளூர்ச் செயற் திட்டங்களை மேலும் சிறப்பாகத் திட்டமிடுவதற்கும், அவற்றுக்கான வரவு செலவுத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், முன்னுரிமைகளை முடிவு செய்வதற்கும் வேண்டிய திறமைகளை இச்செயலமர்வுகள் அலுவலர்களுக்கு வழங்கின.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் பணிப்பாளர் ரெபேக்கா கோன்,

“கிழக்கு மாகாணத்தில், சிக்கலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வது சம்பந்தப்பட்ட அறைகூவல்களைச் சந்திப்பதற்கு, உள்ளூர் தலைவர்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி வழங்கிய உதவி, தெரிவு செய்யப்பட்ட 100 அலுவலர்களுக்கும் 36 பிரதேசச் சபை அலுவலர்களுக்கும் ஒரு நகர சபை சேர்ந்தவருக்கும் வழங்கப்பட்டமை பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

இவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் மூலம் உள்ளூர் சமுதாயங்களுக்கு மேம்பட்ட சேவைகள் வழங்கப்படுமென்றும் வரையறைக்குட்பட்ட வளங்களை மேலும் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதன் பயனாக சிறந்த அபிவிருத்திப் பெறுபேறுகள் இடம்பெறும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்." என்றார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சிச் சபைகளின் ஆணையாளர் எம். உதயகுமாரும், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் டி. பி. ஹெட்டியாரச்சியும் இச்செயலமர்வுகளில் பங்குபற்றினர்.

நாமல் ஓயா பிரதேச சபையின் செயலாளர் எம். ரணபாகு,

"தமிழ் - சிங்களம் பேசும் உள்ளூர் அரசாங்க அலுவலர்கள் பலர், இப்பயிற்சிகளில் செயலார்வத்துடன் பங்குபற்றி, நிலவும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றின் சிக்கல் தன்மைகள் பற்றியும் சிந்தித்தனர் என்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இச்செயலமர்வு மூலமாக நாம் பெற்ற அறிவையும் அனுபவத்தையும், தற்பொழுது பிரதேச சபைகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தலாம். அனைத்துச் செயலமர்வும் பயன்மிக்கவையாக அமைந்திருந்தன" என்றார்.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியினூடாக, அமெரிக்க மக்கள், ஏறத்தாழ 50 வருடங்களாக, உலகம் முழுவதிலுமுள்ள, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்திக்கான உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1946 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி, இலங்கை, ஏறத்தாழ இரண்டு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது
அக்கரைப்பற்றிலுள்ள இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களில் இன்றும் ஒரு சிறுதொகையினர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்



வவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு அக்கரைப்பற்றிலுள்ள இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அம் மாவட்டததைச் சேர்ந்த குடும்பங்களில் இன்றும் ஒரு சிறுதொகையினர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

இதன் பிரகாரம் இன்று 4 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் குறித்த முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் அவர்களது இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 11 ம் திகதி வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து அம்பாறை மாவட்டததைச் சேர்ந்த 42 குடும்பங்களைக் கொண்ட 130 பேர் விடுவிக்கப்பட்டு சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு மறுநாள் 12 ம் திகதி அழைத்து வரப்பட்டிருந்த போதிலும் பாதுகாப்பு தரப்பு தரப்பினர் சில விபரங்களைப் பெற வேண்டியிருப்பதாகக் காரணம் கூறி அக்கரைப்பற்றிலுள்ள இடைத் தங்கல் முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்

பொலிஸ் உட்பட பாதுகாப்பு தரப்பினரின் அறிக்கையின் பேரில் இக் குடும்பங்களை கட்டம் கட்டமாக இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் கடந்த 23 ம் திகதி ஆரம்பமான போதிலும் இது வரை 4 கட்டங்களில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளின் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

23 ம் திகதி 5 குடும்பங்கள் 11 பேர் ,14 ம் திகதி 7 குடும்பங்கள் 15 பேர் ,25 ம் திகதி 10 குடும்பங்கள் 29 பேர் இன்று 28 ம் திகதி 4குடும்பங்கள் 19 பேர் என குறித்த எண்ணிக்கை அமைகின்றது
ஜெனீவாவில் இன்று வருடாந்த அகதிகள் மாநாடு ஆரம்பம்



வருடாந்த அகதிகள் மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

அகதிகளின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் பங்கு கொள்ளவுள்ளன.

இதன் போது அடுத்த ஆண்டுக்கான 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான வரவு செலவுத் திட்டம்; மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த வருடத்தில் மாத்திரம் உலகளாவிய ரீதியாக 42 மில்லியன் மக்கள் பலவந்தமாக இடப்பெயர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

பேரவையினால் இலங்கை, சோமாலியா போன்ற நாடுகளில் உள்ள சுமார் 25 மில்லியன் அகதிகளுக்கு உதவியளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு குச்னர் மிலிபான்ட் விருப்பம்- அமைச்சர் போகொல்லாகமவுடனும் பேச்சு


பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் பேர்னாட் குச்னர், பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகிய இருவரும் வட பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமையை அவதானிப்பதற்காக மீண்டும் இலங்கைக்கு வருகை தர விருப்பம் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கில் வைத்து வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகமவிடம் இந்த முடிவை அவர்கள் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் பிரான்ஸ், பிரிட்டிஷ் வெளிநாட்டøமச்சர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தார். அமைச்சர் போகொல்லாகம விடுத்த அழைப்பின் பேரில் அமைச்சர்கள் குச்னர், மிலிபான்ட் ஆகியோர் இந்த வருடம் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது மூன்று அமைச்சர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே தற்போதைய சந்திப்பு இடம்பெற்றது.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி கிராமங்களின் நிலைமை, முகாமிலிருந்து அழைத்துச் செல்லப்படுவோர் வேறு இரகசிய நிலையங்களில் வைக்கப்படுகிறார்களா என்பது உட்பட மீள் குடியேற்ற முயற்சிகள் ஆகியன குறித்து இலங்கை தரப்பிடமிருந்து பிரான்ஸ், பிரிட்டிஷ் அமைச்சர்கள் விபரங்களைக் கோரினார்கள். இது சம்பந்தமாக ஆரம்பத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட கால எல்லை, மீள குடியேற்றப்படும் மக்கள் தொகை ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ், பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக் கொண்டார்கள். இதற்குப் பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம, எவ்வõறாயினும் கண்ணிவெடிகளை துரிதமாக அகற்றுவதற்கு போதிய உபகரணங்களும் பயிற்றப்பட்ட ஊழியர்களும் கிடைப்பதில் மீள் குடியேற்றம் தங்கியுள்ளது என்று கூறினார். சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதி ஏற்கனவே இந்த விடயத்தில் உதவி வருவதாக தெரிவித்த அமைச்சர் ஏனையோரும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மக்களை நலன்புரி கிராமங்களில் வைத்திருப்பதில் அரசாங்கத்திற்கு எவ்வித நன்மையும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், மீள் குடியமர்வுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துள்ளது என்றும் கூறினார். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் குடியமர்த்துவதற்கென ஏற்கனவே ஒரு தொகுதி மக்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

28 செப்டம்பர், 2009

ஐ.நா. கூட்டத் தொடரில் பாதுகாப்புசெயலர் கோத்தபாயவும் பங்கேற்பு



அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் 64 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கை தூதுக்குழுவில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 64 ஆவது கூட்டத் தொடர் கடந்தவாரம் ஆரம்பமானது. இதில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் தலைமையிலான தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹனவும் இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ளார். ஐ.நா. வின் பொதுச் சபை கூட்டத்தில் கடந்த சனிக்கிழமை பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க உரையாற்றியிருந்தார்
மேலும் இங்கே தொடர்க...
நாடுகளின் உள் விவகாரங்களில் ஐ.நா சபை தலையிடக்கூடாது-64 ஆவது பொதுக்கூட்டத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க உரை


ஐக்கிய நாடுகள் சபை எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது. ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கூடாது என கூறும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2(7) சரத்தை மதித்து நடக்க வேண்டியது அவசியமாகும். பயங்கரவாதம் தேசிய பாதுகாப்புக்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாகவே அமையும். பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்துள்ளமை யை உலக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதன்பெறுபேறுகள் இலங்கை மக்களுக்கு மட்டமல்லாது சமாதானத்தை விரும்பும் சகலருக்கும் கிடைத்த வெற்றியாகும். என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்துடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடிமர்த்துவதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும். இடம்பெயர்ந்தவர்களுடன் இணைந்து புலிகளும் முகாம்களில் உள்ளனர். அவர்களை மக்களுடன் இணைந்திருப்பதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர் சொன்னார். ஐக்கிய நாடுகள் சபையின் 64ஆவது பொதுச் சபைக்கூட்டத்தில் நேற்று முன்தினம் இலங்கையின் சார்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் 63 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியதன் பின்னர் இலங்கையில் பல்வேறு வேறுபாடுகள் இடம்பெற்றுள்ளன. எனது நாடு தொடர்பில் புதிய எதிர்ப்பார்ப்புடனேயே இந்த வருடத்தில் சபையில் உரையாற்றுகின்றேன். ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தலையிடக்கூடாது எனக் கூறும் ஐக்கியநாடுகள் சாஸத்தின் 2 (7) சரத்தை மதித்து நடத்த வேண்டும். பல்லின தன்மை என்பது, சக்திவாய்ந்த நாடுகளின் சிறுபான்மை இனத்தின் கோரிக்கைகளை செவிசாய்ப்பது மட்டுமல்ல சக்தியற்ற பெரும்பான்மை இனத்தின் நலன்களை பாதுகாப்பதுமாகும்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது எனற ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2 (7) சரத்தில் பிரதிபலிக்கும் தடை அனுசரிக்கப்பட வேண்டியது என்பது தட்டிக்கழிக்க முடியாத ஒன்றாகும்.

இந்த சாசனம் எம்மை ஒன்றிணைப்பதால் அது எமது வழிகாட்டல் கருவியாக இருக்க வேண்டும். எவ்வேளையிலும் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை மதிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினதும் பாதுகாப்பு சபையினதும் சீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பல்லின தன்மையை பலப்படுத்துவது, ஜனநாயகம், வெளிப்படைத் தன்மை, ஆக்கசக்தி, பொறுப்புடைமை ஆகியவற்றை மேலும் ஜனநாயக ரீதியிலான ஐக்கிய நாடுகள் முறைமையில் ஊக்குவிப்பதே சீரமைப்பதன் குறிக்கோள் என்று இலங்கைத் தூதுக்குழு நம்புகிறது. ஜனாதிபதி ஒபாமா தெளிவாக எடுத்துக் கூறியது போன்று எதிர்காலத்தின் இன்றியமையாத அம்சங்களாக கருதப்படும் மேற்கூறப்பட்ட நான்கு அம்சங்களையும் கடைப்பிடிக்க தூண்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.

சர்வதேச பிரஜைகளினால் கொடூரமான பயங்கரவாதம் என்று இனங்காணப்பட்டன. எமது நாட்டில் 30 வருடங்களாக நிலவிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை நிறைவிற்கு கொண்டுவரப்பட்டதுடன் கடந்த மே மாதத்துடன் இலங்கையிலிருந்து பயங்கரவாதம் முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தேசிய பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாகவே அமையும். பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்துள்ளதை உலக மக்கள் ஏற்றுக்கொள்ளவார்கள் அதன் பெறுபேறு இலங்கை மக்களுக்கு மட்டுமல்லாது சமாதானத்தை விரும்புகின்ற சகல சர்வதேச மக்களுக்கு கிடைத்துள்ளது.மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் நீண்ட காலத்திற்கு சமாதானம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் வரையிலும் அதனை தொடர்ச்சியாக நிலையானதாக நிலைநாட்டுவது எமது முன்னிலையில் இருக்கின்ற சவாலாகும் என்றே எமக்கு தெரியும்.

பயங்கரவாதத்தை தோற்கடித்து எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை எம் முன்னால் நிலைநிறுத்திக்கொள்ளவேண்டும் அதற்காக எமக்கு ஒத்துழைப்பு நல்கிய உதவிய சகல நட்பு நாடுகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் எமது நோக்கம் மற்றும் முரண்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் மோதல்கள் நிறைவடைந்தததன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது உயர்மட்ட நபர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கீ மூன் ஆவார்.

இலங்கையில் ,இவ்வருடன் மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் புலிகளின் பிடியிலிருந்த வடக்கின் அப்பாவி பொதுமக்கள் அண்ணளவாக 290,000 பேரை மீட்டெடுத்தோம். மீட்டெடுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பாதுகாப்பு, கௌரவம், நிரந்தரமான மீளக்குடியமர்த்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருக்கின்றோம். தற்போது தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு மக்களுக்கு தேவையான நலன்புரி விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், சர்வதேச மற்றும் தேரிய ரீதியிலான சிவில் சமூகத்தினரிடமிருந்து கிøட்த்த ஒத்துழைப்பு காரணமாகவே இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்க முடிந்தது.

எம்முடன் அண்ணளவாக 57 உறுப்பினர்கள் இந்த நலன்புரி கிராமங்களில் தொடர்ச்சியாக சேவையாற்றிவருகின்றனர். நலன்புரி கிராமங்களில் வாழ்கின்றவர்களுக்கு உணவு மற்றும் தற்காலிக உறைவிடத்தை அமைத்துக்கொடுப்பது மட்டுமற்றி அவர்களுக்கு தேவையான ஏனைய வசதிகளான வங்கி,பாடசாலை,தபால் காரியாலயம் மற்றும் சுகாதார பாதுகாப்பு மத்திய நிலையம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. புலிகளினால் இல்லாதொழிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வியை மீண்டும் அந்த பிள்ளைகளுக்கே பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையும் இந்த முகாம்களிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. அங்கு பிள்ளைகளும் கல்வியை பயிலுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

அரசின் அபிலாஷை

சர்வதேச சமூகத்துடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்துவதேச அரசாங்கத்தின் அபிலாசையாகும் . சுனாமி அனர்த்தத்திற்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட மீள் குடியேற்றத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவமும் இருக்கின்றது. அதனால் மீள் குடியேற்றம் நேர்த்தியாக மற்றும் நிரந்தரமான பொறுப்புடன் செய்யவேண்டுமாயின் அதனை பலவந்தமான செய்யமுடியாது.

நடைமுறையில் இருக்கின்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட சகல மனிதாபிமான மூலதர்மத்திற்கு எதிராக புலிகளால் வடக்கில் சிவில் நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடிகள் ,பயன்படுத்த கூடாத வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன. காலத்தை சீரழிக்கின்ற மிகவும் நிதானமாக முன்னெடுக்கவேண்டிய கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மறுபுறத்தில் பல உயிர்களை இழந்து மக்கள் காப்பாற்றப்பட்ட போதிலும் பெருந்தொகையான புலிகள் இடம்பெயர்ந்தவர்களுடன் இணைந்து இருக்கின்றனர். அவர்களையும் இடம்பெயர்ந்துள்ளவர்களுடன் இருப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தில் இடமளிக்க கூடாது.மோதல்கள் நிறைவடைந்தத்தன் பின்னர் மீள் குடியமர்த்தல் ,அபிவிருத்தி மற்றும் அரசியல் ரீதியில் அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தல் மீள்குடியமர்த்தல் மற்றும் சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன எங்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றன.

வடக்கில் தேர்தல்

மோதல்கள் நிறைவடைந்த மூன்று மாதங்களுக்குள் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சகல பிரதேசங்களிலும் ஜனநாயகம் கட்டியெழுப்புவதற்கு தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டத்திட்டங்கள் தொடர்பில் சர்வதேச கொள்கைகளை முன்னெடுப்பதில் பொறுப்புடன் செயற்படுகின்றோம். அதேபோல கடந்த காலங்களில் நாம் பெற்றுக்கொண்ட அனுபவத்தை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலிகள் சிறுவர்களை தங்கள் அமைப்பில் போராளிகளாக இணைத்து கொண்டு அவர்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். பிள்ளை பருவத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தேசிய ரீதியில் மட்டுமல்லாது தனிப்பட்ட ரீதியிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். முன்னாள் சிறுவர் போராளிகளின் வாழ்க்கையை புதிதாக ஆரம்பிப்பதற்கு புனர்வாழ்வுக்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

புலிகளுக்கு புனர்வாழ்வு

ஐக்கிய நாடுகள் மற்றும் உதவிவழங்குவோரின் ஆதரவுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் மீண்டும் சிவில் சமூகத்தில் இணைந்து கொள்வதற்கு தேசிய திட்டங்கள் எம்மால் வகுக்கப்பட்டதுடன் அண்ணளவாக பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ள 10 ஆயிரம் புலி உறுப்பினர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் முதல் தடவையாக எமது மக்களின் மனித சக்தி, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இணைந்து பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. மீள் கட்டுமானத்திற்காக உதவி வழங்கும் நாடுகள் சர்வதேச அமைப்புகள் நிதி மற்றும் திட்டமிடல் ரீதியில் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

பல வருடங்களுக்கு பின்னர் கிழக்கின் நவோதயம் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வடக்கின் வசந்தம் எனும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளில் தொழில்களில் ஈடுபடுவதற்கு வசதிவாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. சீர்குலைந்திருந்த வீதி,நீர்நிலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் திருத்தியமைக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக வடக்கு பொருளாதார நடவடிக்கை நாட்டின் ஏனைய மாகாணங்களின் பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைந்துள்ளது. வடக்கில் பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் ,பாடசாலைகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீர்வுத்திட்டம் மோதல்கள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நீண்ட காலம் நிலைத்து நிற்ககூடிய விதத்தில் தீர்வுத்திட்டத்திற்கு சர்வக்கட்சி ஆலோசனை குழு சகல கட்சிகளின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டுள்ளது.இந்த இணக்கப்பாட்டுடன் ஏற்படுத்த போகும் தீர்வானது தேசிய ரீதியில் உருவாக்கப்பட்ட தீர்வாகவே அமையும். உலக மயமாக்கல் மூலமாக எம்முன்னிலையில் இருக்கின்ற சவால்கள் அதிகமானதாகும். அது ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்றது. இதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் தனித்தனியாக தலையிட்டு தீர்வு காண இயலாது. அதேபோல பயங்கரவாதம் சர்வதேச பொருளாதார பிரச்சினை,காலநிலை மாற்றத்தில் பெறுபோறுகள், உணவு மற்றும் மின்சக்தியின் பாதுகாப்பு போன்றவற்றில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.சார்க் அமைய நாடுகளில் அங்கத்துவம் பெறுகின்ற நாங்கள் இவ்வாறான பிரச்சினைக்கு வலய ரீதியில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அதேபோல புலி பயங்கவாதிகளின் பயங்கவாத குற்றச்செயல்கள் தேசிய எல்லையை மீறி சென்றிருந்தது. ஆயுத கடத்தல்கள் மட்டுமல்லது போதைப்பொருள் கடத்தல்களையும் அவ்வமைப்பினர் மேற்கொண்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. புலி பயங்கரவாதிகளினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான செயற்பõடுகளுக்கு சர்வதேச மட்டத்திலிருந்தே நிதி கிடைத்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது. புலிகளின் வெளிநாட்டு பிரஜைகள் என்று கூறிக்கொள்பவர்கள் புலிகளுக்கு ஆயுதங்களையும் நிதியையுமே திரட்டியுள்ளனர்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பினர் மூலமாக இவ்வாறான நடவடிக்கை இன்னமும் முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை எம்மால் மிகவும் நேர்த்தியான முறையில் அழிக்கப்பட்டுள்ளது . என்பதுடன் புலிகளின் சட்டவிரோதமான நடவடிக்கைகளை முற்றாக ஒழிப்பதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு நல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

புலிகள் கடந்த காலங்களில் கடல்மார்க்கமாக ஆயுதங்களை கடத்தியிருந்தனர் இது வலயநாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும். எனினும் ஆயுத கடத்தலை எமது கடற்படையினர் முற்றாக முறியடித்தது மட்டுமல்லாது ஆயுதங்களை ஏற்றிவந்த கப்பல்களையும் அழித்துள்ளனர். இது வெளிப்படையானது என்பதனால் கடலுக்கு சென்று கப்பல்களையும் ஏனைய இயந்திரங்களையும் சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஏற்ப எமது சட்டத்திட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு அவற்றை சர்வதேச ரீதியில் மேற்கொள்வதற்கான தேவையிருக்கின்றது.அபிவிருத்தியை நோக்காக கொண்ட எமது திட்டங்கள் 2015 ஆம் ஆண்டு வரையிலான தூர நோக்கத்தை கொண்டதாகும் அந்த இலக்கை எட்டுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
நாளையும் மறுதினமும் தபால் மூல வாக்களிப்பு -31,151 பேர் வாக்களிக்க தகுதி



தென் மாகாண சபைக்கான தேர்தல் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. இந்நிலையில் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், 30 ஆம் திகதி புதன்கிழமையும் இடம்பெறவிருக்கின்றது என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 38 ஆயிரத்து 394 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் மூன்று மாவட்டங்களிலிருந்தும் 31 ஆயிரத்து 151 பேரே தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றோர் இருதினங்களுக்குள் வாக்களித்துவிடவேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள அரசாங்க ஊழியர்கள் தத்தமது காரியாலயங்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை வாக்களிக்கலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...
பொலீஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு யாழில் 1500ற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் பெற்றனர்-

யாழ். மாவட்டங்களிலுள்ள பொலீஸ் நிலையங்களுக்கு பொலீஸ் உத்தியோகத்தர்களை சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் பொலீஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு யாழ்.குடாநாட்டில் நேற்றையதினம் 1500ற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பொலீஸ் நிலையங்களில் கடiமாயற்றுவதற்காக தமிழ்ப்பேசும் பொலீசாரை சேர்க்கும் திட்டத்தின்கீழ் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்ககள் இடம்பெறுகின்றன இதன்போது நடத்தப்படும் நேர்முகப் பரீட்சைகளில் தெரிவுசெய்யப்படுகின்றவர்களுக்கு மீண்டும் இம்மாதம் 29ம் திகதி மற்றும் 30ம் திகதிகளில் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாகவும் பொலீஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நேர்முகப் பரீட்சைகள் மூலம் யாழ். பொலீஸ் நிலையங்களுக்கு ஆண் கான்ஸ்டபிள், பெண் கான்ஸ்டபிள் மற்றும் வாகன சாரதிகள் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பொலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது
புத்தளம் பழைய மன்னார் வீதி பாலத்திற்கு அருகிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு-
புத்தளம் பழைய மன்னார் வீதியிலுள்ள பாலமொன்றுக்கு அருகாமையிலிருந்து சீ4ரக வெடிபொருட்களை பொலீசார் மீட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே குறித்த வெடிபொருட்கள் பொலீசாரினால் மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். குறித்த பாலத்திற்கு அருகில் பொதிசெய்யப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 750கிறாம் சீ4 ரக வெடிபொருட்களே இதன்போது மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்
கிராண்ட்பாஸில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது, நிட்டம்புவையில் பரா குண்டுகள் மீட்பு-

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஆயுதமொன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி கொள்வனவு தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்றுமாலை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இத்தாலிய தயாரிப்பிலான 8மில்லிமீற்றர் ரக துப்பாக்கியே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கம்பஹா, நிட்டம்புவைப் பிரதேச கிணறு ஒன்றுக்குள்ளிருந்து முன்னேறிச் செல்லும் பகுதியைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் பரா வெளிச்சக் குண்டுகள் இரண்டு இன்று மீட்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றினை உரிமையாளர்கள் துப்புரவு செய்தபோதே இக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பொலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மாவிலாறுமுதல் புதுமாந்தளன் வரையான நடவடிக்கை தொடர்பிலான கண்காட்சி-

படையினர் மாவிலாறு முதல் புதுமாத்தளன்வரை நடவடிக்கை மேற்கொண்ட விதத்தையும், பிரபாகரனின் உடலைக் கண்டெடுத்ததையும் பொதுமக்கள் மீண்டும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 3ம்;திகதி முதல் 07ம் திகதிவரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்;த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் கண்காட்சியில் இச்சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இராணுவத்தின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது மாவிலாற்றிலிருந்து புதுமாத்தளன்வரை படையினர் மேற்கொண்ட சகல முன்னகர்வு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது புலிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது படையினர் கைப்பற்றிய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதுடன் படையினர் பயன்படுத்திய ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதேவேளை, படையினரை கௌரவிக்குமுகமாக நினைவு முத்திரையொன்றும் ஆயிரம் ரூபா நாணயக் குற்றியொன்றும் வெளியிடப்படவுள்ளது
முட்கம்பி சிறைக் கூடங்களிலேயே தமிழ் மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர் - மனோகணேசன் எம்.பி. விசனம்




தமிழ் மக்கள் இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்படவில்லை. மாறாக முட்கம்பி வேலிகள் போடப்பட்ட சிறைக் கூடங்களிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்து அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழ முடியுமென ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.

ஆனால் ஏன் தமிழ் மக்களுக்கு இத்தகைய பாரபட்சம் காட்டப்படுகிறது. அவர்கள் இந்நாட்டு பிரஜைகள் இல்லையா என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.க. வின் மக்கள் பேரவை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. உண்மையில் இவை முகாம்கள் அல்ல, முட்கம்பிகள் போடப்பட்ட சிறைக் கூடங்களே ஆகும்.

கண்ணிவெடிகளை அகற்றிய பின்பே மக்களின் மீள் குடியேற்றம் நடைபெறுமென அரசு கூறுவது முழுப் பொய்யாகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் எமது படையினர் கண்ணிவெடிகளை அகற்றிக் கொண்டே புலிகளை முடக்கினர்.

எனவே இன்று மிஞ்சிப் போனால் 10 வீதமாகவே கண்ணிவெடிகள் இருக்கும். எனவே மக்களை மீளக் குடியேற்றõமைக்கு கண்ணிவெடிகள் காரணமல்ல.

எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே முகாம்களில் உள்ள 3 இலட்சம் மக்களில் 1 1/2 இலட்சம் பேருக்கு வாக்குரிமை உண்டு.

இந்த வாக்குகளை கொள்ளையடிப்பதற்கே மக்களை அரசாங்கம் பலாத்காரமாக தடுத்து வைத்துள்ளது.
அமெரிக்கா உட்பட சில நாடுகள் இலங்கையை போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்த முயற்சி - விமல் வீரவன்ச எம்.பி. குற்றச்சாட்டு


சர்வதேச மட்டத்தில் இலங்கையை ஒரு போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்தி விட வேண்டும் என்பதில் புலிகளுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர் என்ற வேதனையிலே இவ்வாறு இந்த நாடுகள் செயற்படுகின்றன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டினார்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றத் துடிக்கும் சர்வதேச சக்திகளின் சதித் திட்டங்களை முறியடிப்பதற்கு அனைவரும் அணி திரள வேண்டும். அத்துடன் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு எமது கட்சி தயாராகி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவங்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்
இலங்கையில் இடம்பெயர் மக்கள் குறித்து ஹிலாரி - எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் கலந்துரையாடல்


இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள 3 இலட்சம் மக்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் நேற்று முன் தினம் நியூயோர் நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளக்கும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்படாமல், விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் துரித கதியில் முன்னெடுப்பதற்கு, இரண்டு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...