10 பிப்ரவரி, 2011

மன்னாரில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை


மன்னாரில் நுகர்வோர்களுக்கான அத்தியாவசிய பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் இல்லை என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மன்னார் மதவாச்சி பாதையின் போக்குவரத்து மடு பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளதால், மன்னாருக்கான வெளிமாவட்ட போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாக மடு பரப்புக்கடந்தான், ஆண்டாங்குளம் ஊடான உயிலங்குளம் ஊடாக உள்ள சிறிய பாதையொன்று அவசர போக்கு வரத்துக்காக திறந்து விடப்பட்டது.

இதனால், மன்னார் பகுதியில் அத்தியாவசிய பொருட்களின் தற்போதைய கையிருப்பு குறித்து கண்டறிய அமைச்சர் ரிசாத் பதியுதீன், மன்னார் சதொச விற்பனை நிலையத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலையினை கேட்டறிந்து கொண்டார். தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பால் மா உட்பட பொருட்களின் தரத் தையும் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் பார்வையிட்டுள்ளார்.

அமைச்சருடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், வடக்கு மாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையார் எஸ். எல். டீன். உட்பட பலரும் சமுகமளித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக