3 பிப்ரவரி, 2011

ஆஸ்பத்திரிகளில் அரச ஊழியர்களுக்கு தனியான ‘வார்ட்’







சகல ஆஸ்பத்திரிகளிலும் அரசாங்க ஊழியர்களுக்கென தனியான ‘வார் டு’களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக வரவு செலவுத் திட்டத்தினூடாக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான முதலாவது வார்டு மொனரா கலை தம்பகல்ல கிராமிய ஆஸ்பத் திரியில் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு இந்த வார்ட் நாளை ஊவா மாகாண முதலமைச்சர் சடுந்ர ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படும் என தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதிய தலைவர் சேனக அபேகுணசேகர கூறினார்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் அரச ஆஸ்பத்திகளில் அரச ஊழியர்களுக்கான வார்டுகளை தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் நிர்மாணித்து வருகிறது. தம்பகல்ல ஆஸ்பத்திரி வார்ட் 25 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப் பட்டுள்ளது.

இந்த வருடத்தில் குறைந்தது 20 ஆஸ்பத்திரிகளிலாவது அரச ஊழியர்களுக்கான வார்டுகள் நிர்மாணிக்க உள்ளதாகவும் சேனக அபேகுணசேகர கூறினார். தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நாளை முதல் 10ஆம் திகதி வரை புத்தலயில் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக