18 டிசம்பர், 2010

தேங்காய் விலையை குறைக்காவிடின் இறக்குமதி செய்வதை தவிர்க்க முடியாது


தெங்கு உற்பத்தியாளர் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சி
சந்தையில் குறைந்த விலையில் தேங் காயை விநியோகிக்க தெங்கு உற்பத்தி யாளர்கள் முன்வர வில்லையானால் இந்தியாவிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்வதை தவிர்க்க முடியாது என கூட்டுறவு வர்த்தக அமைச்சு தெரிவிக்கிறது.

செயற்கை தட்டுப்பாடொன்றை ஏற்படுத்தி சந்தையில் அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்ததாலேயே தேங்காயை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

மக்களுக்கு தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் தேங்காயை பெற்றுக் கொடுப்பதே அரசின் நோக்கமென தெரிவித்த கூட்டுறவு, வர்த்தக அமைச்சின் செயலர் சுனில் எஸ். சிறிசேன, தேங்காயை இறக்குமதி செய்வ தாக அறிவித்த மறு நாளே சந்தையில் 60 ரூபாவுக்கு விற் கப்பட்ட தேங்காய் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

தேங்காய் இறக்குமதி செய்யப்படுவதை தெங்கு உற்பத்தியாளர்கள் எதிர்க்கிறார்கள். இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து குறைந்த விலையில் தேங்காயை நுகர்வோருக்கு வழங்கினாலேயே போதும் என்றும் அமைச்சின் செயலர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்தார்.

இவர்களது செயற்கை தட்டுப்பாட்டு முயற்சியின் காரணமாக மக்கள் அதிக விலைக்கு தேங்காயை வாங்க வேண்டியுள்ளதுடன் அரசின் மீதே அதிருப்தியடைகின்றனர். பண்டிகை காலத்தில் இவ்வாறான தட்டுப்பாட்டை நீக்கும் நோக்குடனேயே அரசு கேரளாவிலிருந்து தேங்காயை இறக்குமதி செய்யவுள்ளது என்றும் அமைச்சின் செயலர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக