24 டிசம்பர், 2010

ஐ.தே.க. எத்தகைய சூழ்ச்சிகளை செய்தாலும் மக்களுக்கான தீர்மானங்களை அரசு துணிவுடன் மேற்கொள்ளும்


ஐ. தே. கட்சி எத்தகைய விமர்ச னங்கள், சூழ்ச்சிகளை மேற்கொண்ட போதிலும் மக்களுக்கான தீர்மானங் களை துணிவுடன் அரசாங்கம் மேற்கொள்ளும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மக்களுக்கு நன்மை தரும் எத்தகைய தீர்மானங்களை அரசாங்கம் எடுத்தாலும் அதனை எதிர்ப்பதும் விமர்சிப்பதுமே எதிர்க்கட்சியினரின் போக்காகும் எனத் தெரிவித்த அமைச்சர், மக்களின் நன்மை கருதி வெளிநாடு களிலிருந்து அத்தியாவ சியப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானத்திலும் எதிர்க்கட்சியினர் இத்தகைய போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய லொத்தர் சபை கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்; எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் பயப்படாது எனவும் தெரிவித்தார். இதுதொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-

எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் வரைக்கும் போதுமான பெரியவெங்காய விளைச்சல் எம்மிடமிருந்தது. எனினும் தொடர்ச்சியான மழை காரணமாக 40 வீத வெங்காயம் பழுதடைந்துவிட்டது. அதுவே வெங்காய விலையேற்றத்திற்குக் காரணம்.

இதனைக் கூட புரிந்துகொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜே. வி. பி.யினர் வெங்காய இறக்குமதி குறித்து விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக