31 டிசம்பர், 2010

கம்பளை வீதிகளின் அபிவிருத்திக்காக 225 மில்லியன் ரூபா ஒதுக்கீடு


கண்டி மாவட்டத்தின் கம்பளை தொகுதியிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்யவென 225 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் டி. எம். ஜயரட்னவும், சுற்றாடல்துறை பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதரும் இணைந்து கம்பளை தொகுதியிலுள்ள வீதிகளின் நிலைமைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இதனையடுத்தே இந்நிதியொதுக்கீடு மேற்கொள் ளப்பட்டுள்ளது.

இந்நிதியொதுக்கீடு தொடர்பாக பிரதியமைச்சர் ஏ.ஆர். எம். அப்துல் காதர் கூறுகையில், கம்பளைத் தொகுதியிலுள்ள கண்டி வீதியையும், அம்பகமுவ வீதியையும் அபிவிருத்தி செய்யவென 150 மில்லியன் ரூபாவும், கம்பளைத் தொகுதியிலுள்ள உள் வீதிகளை அபிவிருத்தி செய்யவென 75 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கம்பளைத் தொகுதியிலுள்ள வீதிகள் நீண்ட காலமாக புனரமைப்பு செய் யப்படவில்லை. இதனால் மக்கள் பல அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். இது விடயமாக பிரதமர் டி. எம். ஜயரட்னவும், தாமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்தி ற்குக் கொண்டு சென்றோம். அதனைய டுத்தே ஜனாதிபதி அவர்கள் இந்நிதியொது க்கீட்டை மேற்கொண்டார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக