8 அக்டோபர், 2010

ம.ம. முன்னணி கூட்டத்தில் சூடானவாதம்: இராதாகிருஷ்ணனுக்கு தலைமை பொறுப்பு வழங்க கட்சி இணக்கம்


நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணனை மலையக மக்கள் முன்னணியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் காரசாரமான வாதப் பிரதிவாத ங்களுக்குப் பின்னர் முடிவொன்று எட்டப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனுக்குத் தலைமைப் பதவியை வழங்கி அவரைக் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

பம்பலப்பிட்டி வெஸ்ரன் ஹோட்டலில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்நாள் நடைபெற்ற கூட்டத்தில் காரசாரமாக விவா தம் நடைபெற்றுள்ளது. இதன்போது கட்சியின் சில மூத்த உறுப்பினர்களுக் கிடையே சூடான வார்த்தைப் பிரயோக ங்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனை கட்சிக்குள் இணைத்துக் கொள்வதில் ஓர் இணக்கத்திற்கு வராவிட்டால் கட்சியிலிருந்து விலக்கிவிடப்போவதாக முக்கிய உறுப்பினர்கள் சிலர் எச்சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே பிடிவாதப் போக்கிலிருந்த சிலர் தமது நிலைப்பாட்டைத் தளர்த்தி இராதா கிருஷ்ணனைத் தலைவராக உள்வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்துவிட்டதாகத் தெரிய வருகின்றது.

அடுத்த கட்டமாக கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமெனக் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் இராதாகிருஷ்ணன் எம்.பீ. யிடமும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் ‘தினகரனு’க்குத் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக