13 செப்டம்பர், 2010

ஒட்டுசுட்டான் செங்கல் உற்பத்தியை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை 50,000 வீடுகளை கட்டும் பணிக்கு செங்கற்களை பெறவும் திட்டம்


ஓட்டுசுட்டான் செங்கல் உற்பத்தியை இரட்டிப்பாக்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

செங்கல் உற்பத்தித் துறையை துரிதமாக மேம்படுத்தும் பொருட்டு ஐம்பது தொழிலாளர்களை உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானிலுள்ள செங்கல் உற்பத்தி சூளையை சென்று பார்வையிட்ட ஆளுநர் அதன் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.

தற்பொழுது, நாளொன்றுக்கு 8000 செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன் 23 தொழிலாளர்களே சேவையில் ஈடு படுவதாகத் தெரிவித்த அவர்,

தற்பொழுது இதன் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் அதிகரிக்கத் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப் பிட்டார்.

செங்கல் உற்பத்தியை மீள ஆரம்பிப் பதற்காக வட மாகாண சபை 20 இலட் சம் ரூபாவை ஏற்கனவே வழங் கியதாகத் தெரிவித்த அவர் தற்பொழுது இதன் செயற்பாடுகள் திருப்தியாகக் காணப்படு கிறதென்றார்.

வட மாகாணத்தில் இந்திய அரசின் உதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை கட்டும் பணிகளுக்கு இங்கிருந்தே செங்கற்களை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் மூலம், இந்தப் பிரதேச தொழி லாளர்கள் மேலும் நன்மையடைபீயவுள் ளனர் என்றும் சுட்டிக் காட்டினார்.

ஆளுநரின் வழிகாட்டலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் நேரடி கண் காணிப்பின் கீழ் கைத்தொழில் திணைக்க ளத்தின் கூட்டிணைப்பின் மூலம் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக