6 செப்டம்பர், 2010

160 இற்கும் மேற்பட்ட ஆதரவை 48 மணித்தியாலத்தினுள் பெறுவோம்’






அரசியலமைப்புக்கான 18வது திருத்த யோசனை அடுத்துவரும் 48 மணித்தியாலங் களுக்குள் 160க்கும் மேற்பட்ட ஆதரவான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீல.சு. கட்சியின் மீரிகம தொகுதி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசியலமைப் புக்கான 18வது திருத்த யோசனை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கானதல்ல. மாறாக ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்தவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டை நீக்கவே நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் பெயர்ப்பலகையு டன் மாத்திரமே உள்ளன. மாறாக அவை செயற்றிறன் உள்ள கட்சிகள் அல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அளித்து வரும் தூரநோக்கு மிக்க சிறந்த தலைமைத்துவத்தின் காரணமாகவே அக்கட்சிகள் பெயர்ப்ப லகைக்குள் முடங்கிப் போய் விட்டன.

மக்கள் விடுதலை முன்னணியினரால் விமர்சிக்கத்தான் முடியும். மாறாக அரசாங்கம் நடாத்த முடியாதவர்கள். அதனால் தான் அவர்கள் எமது அரசிலிருந்து இடைநடுவில் வெளியேறினர்.

மறைந்த முன்னாள் பிரதமர்களான டி.எஸ்.சேனநாயக்க, டட்லி சேனநாயக்க போன்ற ஐ.தே.க. தலைவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்யப் பாரிய பங்களிப்பு செய்துள்ளனர்.

ஆனால் தற்போதைய ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியையே இல்லாமலாக்கி விட்டார்.

அரசியலமைப்புக்கான 18வது திருத்த யோசனை நாளை மறுதினம் 160க்கும் மேற்பட்ட வாக்குகளால் சபையில் நிறைவேறும். இதில் எதுவித சந்தேகமுமே இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக